புதன், 18 ஜூன், 2025

தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 11 ஜூன் 4 வது வாரம்

 தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 

வகுப்பு 11

ஜூன் 4 வது வாரம்

Notes of lesson

நாள் :       23.06.25 முதல் 27.06.25

 வகுப்பு :   மேல்நிலை முதலாம் ஆண்டு

 பாடம் :       தமிழ்

 தலைப்பு :    மொழி முதல் இறுதி எழுத்துகள்
https://allaloy.blogspot.com
 கற்றல் நோக்கம்
  • மொழி முதல் இறுதி எழுத்துகள் எவை என்பதை அறிந்து பிறமொழி கலப்பின்றி பேசவும் எழுதவும் செய்தல்
 துணைக் கருவிகள் 
  • கரும்பலகை, சுண்ணக்கட்டி, திறன்பேசியில் விரைவுக் குறியீடு காட்சிகள், வலையொளி பதிவுகள்
 ஆர்வமூட்டல் 
  • தமிழ் மொழி சொற்களையும் பிறமொழி சொற்களையும் எவ்வாறு அறிந்து கொள்வாய்? 
  • உயிர் மெய் குறில் எத்தனை?
இது போன்ற செய்தல் வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்.

 கற்பித்தல் செயல்பாடுகள்
  • மொழி முதல் எழுத்துகள் மொழி இறுதி எழுத்துகள் எவை என்பதைக் கூறுதல்
  •  மொழி முதல் எழுத்து - 22 மொழ் இறுகு எழுத்து 24
  • *நிலைமொழியின் இறுதியும் வருமொழியின் முதலும் சேருவது புணர்ச்சி என்று பெயர் என்று பாடம் வழி விளக்குதல்.
  • தமிழாக்கம் செய்தல் பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக ஆகியவற்றை விளக்குதல்.

 கற்றல் செயல்பாடுகள் 
  • பாடப்பகுதியில் சில சொற்களைப் பிரித்து உயிர் முதல் மெய்முதல் கூறச் செய்தல்
  • மொழி முதல் எழுத்துகளில் தொடங்கும் சில சொற்களைக் கரும்பலகையில் எழுதுதல்

 கற்றல் விளைவு
  • மொழி முதலில் இடம் பெறும் எழுத்து 'அல்லாமல் பிற எழுத்தில் அமையும் சொற்கள் பிறமொழி சொற்கள் என்பதை அறிந்து தமிழ் சொற்களைப் பயன்படுத்துவர்.
வலுவூட்டல்
  • மொழி முதல் இறுதி எழுத்துகளில் வரும் சொற்களைக் கூற  வினா கேட்டு விடை கூறும் மாணவர்களைப் பாராட்டுதல். 

 மதிப்பீடு
எ சி வி
     1.மொழி முதல் எழுத்துகள் எத்தனை?
      2.மொழி இறுதி எழுத்துகள் எத்தனை?
      3.பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.
அ) காலங்காத்தால எந்திரிச்சிப் படிச்சா ஒரு தெளிவு கெடைக்கும்.
ந சி வி
  1.சொல்லின் இறுதியில் வரும் எழுத்துகள் யாவை?
      2.உயிர் முதல் என்றால் என்ன?
உ சி வி
     1.மொழி முதல் இறுதி எழுத்துகள் அமைந்த சொற்களை எடுத்துக்காட்டு தருக.
 தொடர் பணி 
  • பாடப் பகுதியில் இடம் பெற்ற மொழி முதல் எழுத்துகள் மொழி இறுதி எழுத்துகளில் அமைந்த சொற்களை அட்டவணைப்படுத்துக.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வகுப்பு 12. ஆகஸ்ட் முதல் வாரத் தமிழ் மாதிரி பாடக் குறிப்பு

 வகுப்பு 12  ஆகஸ்ட் முதல் வாரம்  தமிழ் மாதிரி பாடப் குறிப்பு  DOWNLOAD