தமிழ் மாதிரி பாட குறிப்பு வகுப்பு 11 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் மாதிரி பாட குறிப்பு வகுப்பு 11 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

காவடிச்சிந்து, குறுந்தொகை தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

 நாள்                          :  10.08.26 முதல் 14.08.26.

வகுப்பு                     : மேல்நிலை முதலாம் ஆண்டு 
பாடம்                       : தமிழ்
 பாடவேளை          :4
தலைப்பு                 : இயல் 3 
 செய்யுள்               : காவடிச் சிந்து, குறுந்தொகை


கற்றல் நோக்கம்

  • இலக்கியங்கள்வழி தமிழர் பண்பாட்டுக்கூறுகளை அறிந்து தமதாக்கிக்கொண்டு வாழ்தல்.
  • வீட்டிலும் சமூகத்திலும் பின்பற்றப்படும் பண்பாட்டு நிகழ்வுகளைப் போற்றிப் பின்பற்றுதல்.


 




துணைக்கருவிகள்
  • காணொளி, விளக்கப்பட அட்டைகள்


ஆர்வமூட்டல் : 
  •  கோயில்களில் உள்ள வேண்டுதல்கள் சிலவற்றைக் கூறு 
  •  எட்டுத்தொகை நூல்கள் யாவை
  •  எட்டுத்தொகை நூல்களில் அக நூல்களைக் கூறு
இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்:


கற்பித்தல் செயல்பாடுகள்


  • காவடி எடுத்தல் தமிழ்ப் பண்பாட்டுக்கூறுகளுள் ஒன்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் குன்றுதோறும் வீற்றிருக்கும் முருகன் கோவில்களில் காவடி எடுத்து ஆடுவது வழக்கமாக உள்ளது. காவடி தூக்கிச் செல்வோர், அதைச் சுமையாக உணராமல் இருக்கப் பாடியவாறே செல்வதற்குப் புலவர்கள் வழிநடைப் பாடல்களை இயற்றியுள்ளனர்.இதை பாடல் வழி விளக்குதல்










குறுந்தொகை

  • அன்பும் அறனும் விளையும் திருமண வாழ்வைத் தலைவி விரும்புகிறாள். இரு மனம் இணையும் திருமணத்தை உறுதிசெய்ய இரு வீட்டாரும் முனைகின்றனர். இதனை, அகத்திணை இலக்கணத்தின் இலக்கியமாய் விளங்கும் குறுந்தொகைப் பாடல் ஒன்று காட்சிப்படுத்துவதைப் பாடல் வழி விளக்குதல்.


கற்றல் செயல்பாடுகள்
  • செய்யுளைச் சீர்ப்பிரித்து வாசித்தல் .கோயில்களில் நடைபெறும் வேண்டுதல்கள் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுதல் 


கற்றல் விளைவுகள்:
  •  வழிநடை பாடலின் மேன்மையை அறிந்து நம் முன்னோர்கள் பின்பற்றினர் என்பதை அறிந்து பின்பற்ற கொள்வர்
  •  நம் முன்னோர்களின் அகப்புற வாழ்வைப் பற்றி அறிந்து வாழ கற்றுக் கொள்வர் 


வலுவூட்டல்:
  •  பாடப்பகுதியில் இடம்பெற்றிருக்கும் முக்கிய சொற்களுக்கு விளக்கம் கூறுதல் 
  •  படப்பகுதியில் சில வினாக்கள் கேட்டு சிறப்பாக விடை அளிக்கும் மாணவர்களைப் பாராட்டி பரிசளித்தல் 
 
மதிப்பீடு:
"எளிய சிந்தனை வினா..
  •  காவடிச்சிந்துக்குத் தந்தை யார்?
  •  குறுந்தொகை…… நூல் 
 நடுத்தர சிந்தனை வினா
  •  காவடிச்சிந்து என்பது யாது?
  •  வெள்ளிவீதியார் சங்கத்தொகை நூல்களில் எத்தனை பாடல்கள் பாடியுள்ளார்?
1. உயர் சிந்தனை வினா
  •  சங்க காலத்தில் நடைபெற்ற சமூக நிகழ்வுடன் இக்கால சமூக நிகழ்வுகளைப் பொருத்தி ஒப்பிட்டு எழுதுக 
குறைதீர்க்கற்றல் :
  •  மாணவர்கள் புரிந்து கொள்ளாத சில பகுதிகளை மீண்டும் ஒரு முறை கற்பித்தல்.
தொடர் பணி
  •  எந்தெந்த நாடுகளில் காவடியாட்டம் இன்றளவும் நிகழ்த்தப்படுகிறது அதற்கான காரணங்களை திரட்டுக.
  •  திருமணங்களில் மணக்கொடை கேட்பது குற்றமா விவாதிக்க.



புதன், 29 ஜூலை, 2026

மலை இடப்பெயர்கள் வகுப்பு 11

 நாள்                      : 3.08.26 முதல் 07.08.26
வகுப்பு                 : மேல்நிலை முதலாம் ஆண்டு 
பாடம்                    : தமிழ்
 பாடவேளை        :4
தலைப்பு               : இயல் 3 
 உரைநடை           : மலை இடப் பெயர்கள் ஓர் ஆய்வு 

கற்றல் நோக்கம்

  •  தமிழர்களின் வாழ்விடச் சிறப்புகளைக் கள ஆய்வுகளின் வழி அறிந்து பெருமிதம் கொள்ளுதல் 
துணைக்கருவிகள்
  • காணொளி, விளக்கப்பட அட்டைகள்
ஆர்வமூட்டல் : 
  •  ஐவகை நிலங்கள் எவை?
  •  குறிஞ்சி நிலம் குறிக்கும் நிலப்பகுதி எது?
  • இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்:
கற்பித்தல் செயல்பாடுகள்.
  • மலை, மனித சமூகத்தின் முதல் வாழ்நிலமாகும். தமிழ் அக இலக்கணம், மலையும் மலை சார்ந்த பகுதியையும் குறிஞ்சி என்று குறிக்கிறது. குறிஞ்சி நிலம் சார்ந்த சங்கப் பாடல்கள் மலையோடு தொடர்புடைய தமிழர்தம் ன் சீரிய வாழ்வினைப் பேசுகின்றன. மலை, குன்றுகளின் பெயர்கள் குறித்த ஆய்வை மலையாய்வியல் (OROLOGY) என்ற கலைச்சொல்லால் அழைப்பர். தமிழர் வாழ்வில் மலைகள் பெறும் சிறப்பு குறிப்பிடத்தக்கது.
  •  திராவிடர்கள் மலை நில மனிதர்கள் என்று அழைத்தவர் கமில் சுவலபில் கூற்று, திராவிடர்களின் மலைப் பெருமிதம், மலைக் குடியிருப்புகள், வடமேற்குப் பகுதிகளில் திராவிட மலைப் பெயர் கள், தென்னிந்தியாவில் மலை என்ற இட பெயரின் சிறப்பிடம் ஆகியவற்றை பாடப்பகுதி வழி நின்று விளக்குதல்  
கற்றல் செயல்பாடுகள்
  •  பாடப்பகுதியை வாசித்தல் 
  •  பாடப்பகுதியில் இடம்பெறக்கூடிய மலை இட பெயர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் குறித்து கலந்துரையாடுதல்  
கற்றல் விளைவுகள்:
  •  மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தன்மையை அறிந்து இயற்கையோடு இணைந்து வாழ கற்றுக் கொள்வர் 
  •  தமிழர்களின் வாழ்விடச் சிறப்புகளை அறிந்து வாழ்விடங்களை நேசிக்க கற்றுக் கொள்வர்.
வலுவூட்டல்:
  •  பாடப்பகுதியில் இடம்பெற்றிருக்கும் முக்கிய சொற்களுக்கு விளக்கம் கூறுதல் 
  •  படப்பகுதியில் சில வினாக்கள் கேட்டு சிறப்பாக விடை அளிக்கும் மாணவர்களைப் பாராட்டி பரிசளித்தல் 
 மதிப்பீடு:
"எளிய சிந்தனை வினா..
  •  ‘விண் பொரு நெடுவரை குறிஞ்சி கிழவ’ என்ற தொடர் இடம்பெறும் நூல்?
  •  நீலகிரியில் வாழும் பழங்குடி மக்கள்…….

நடுத்தர சிந்தனை வினா
  •  கோட்டை என்னும் சொல் திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்படுகிறது?
  •  கொற்கை வஞ்சி தொண்டி வளாகம் குறித்து எழுதுக.
1. உயர் சிந்தனை வினா
  •  திராவிட பழங்குடிகளின் இனக்குழு பெயர்களுக்கும் மலைக்கும் உள்ள தொடர்பிற்கு எடுத்துக்காட்டு தருக 

குறைதீர்க்கற்றல் :
  •  மாணவர்கள் புரிந்து கொள்ளாத சில பகுதிகளை மீண்டும் ஒரு முறை கற்பித்தல்.

தொடர் பணி :

 மலை குறித்த வேறு சொற்களையும் அவை சார்ந்த தலை சொற்களையும் திரட்டி பட்டியல் உருவாக்குக 



புதன், 22 ஜூலை, 2026

வகுப்பு 11 புணர்ச்சிவிதி

 நாள் : 27-.07.26 முதல் 01.08.26.

வகுப்பு : மேல்நிலை முதலாம் ஆண்டு 


பாடம் : தமிழ்

 பாடவேளை :4

தலைப்பு: இயல் 2 இயற்கை வேளாண்மை சுற்றுச்சூழல்

 இலக்கணம் :புணர்ச்சி விதிகள் 


கற்றல் நோக்கம்

  •  மொழியை தவறின்றி கையாளுதல், பாடல்களைப் பொருள் உணர்ந்து பிரித்தறிதல் ஆகிய படிநிலைகளை அறிதல் 




துணைக்கருவிகள்

  •  பயிற்சி வினாத்தாள்

ஆர்வமூட்டல் :  

  • நிலைமொழி வருமொழி என்றால் என்ன?
  •  செம்மொழி இச்சொல்லை பிரிக்கும் முறை எதையாது இதில் இருக்கக்கூடிய முதல் எழுத்து ஈற்றெழுத்து யாது?

இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்:


கற்பித்தல் செயல்பாடுகள்.

  •  சொற்புணர்ச்சியின்போது நிலைமொழி இறுதியிலும் வருமொழி முதலிலும் ஏற்படும் மாற்றங்களைச் சுருங்கச் சொல்லும் வரையறைகளைப் புணர்ச்சி விதிகள் என்பர். மொழியைப் பிழையின்றிக் கையாளவும் பாடலடிகளைப் பொருள் உணர்வுக்கு ஏற்ற வகையில் பிரித்தறியவும் மொழி ஆளுமையைப் புரிந்துகொள்ளவும் இப்புணர்ச்சி விதிகள் பயன்படுகின்றன.
  •  உடன்படு மெய்ப் புணர்ச்சி, குற்றியலுகரப் புணர்ச்சி, முற்றியலுகரப் புணர்ச்சி, இயல்பீறு விதி ஈறு புணர்ச்சி, பூப்பெயர்ப் புணர்ச்சி, மெய்யீற்றுப் புணர்ச்சி, தனிக்குறில் முன் ஒற்று புணர்ச்சி, பண்புப் பெயர் புணர்ச்சி மகர ஈற்றுப் புணர்ச்சி ஆகியவற்றைப் பாடம் வழி விளக்குதல் 


கற்றல் செயல்பாடுகள்

  •  சொற்களைப் பிரிக்கும் முறையை அறிந்து கொள்வர்
  •  பாடப்பகுதியில் இடம் பெற்று இருக்கும் புணர்ச்சி விதி குரிய சொற்களை எடுத்து அதை எவ்வகை புணர்ச்சி என்பதை வகுப்பறையில் விவாதித்தல்

 

கற்றல் விளைவுகள்:

  •  சொற்கள் பிரியும் முறையை அறிந்து கொள்வர் 
  •  சொற்களைப் பிரிக்கும் போது ஏற்படும் மாற்றத்தை வைத்து அதில் எந்த வகையான விதிகள் வரவேண்டும் என்று அறிந்து பயன்படுத்தக் கற்றுக் கொள்வர் 


வலுவூட்டல்:

  •  சில சொற்களைக் எழுதி அதற்கு சரியான முறையில் புணர்ச்சி விதி கூறும் மாணவர்களைப் பாராட்டிப் பரிசளித்தல்

மதிப்பீடு:

"எளிய சிந்தனை வினா..

  •  புணர்ச்சி என்றால் என்ன?
  • அருவினை புணர்ச்சி விதி தருக

நடுத்தர சிந்தனை வினா

  •  குற்றியலுகரப் புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக 
  •  புலனறிவு, வெற்றிலை, திரைப்படம் புணர்ச்சி விதி தந்து விளக்குக 

1. உயர் சிந்தனை வினா

  •  விதி வேறுபாடறிந்து விளக்குக 
  •  தன்னொற்றிரட்டல் தனி குறில் முன் ஒற்று உயிர் வரின்  இரட்டும் 

குறைதீர்க்கற்றல் :

  •  சில சொற்களை கொடுத்து புணர்ச்சி விதி கூறச்சொல்லி தடுமாறும் பகுதியை மீண்டும் ஒரு முறை கற்பித்தல் 

தொடர் பணி :

  • பாடப்பகுதியில் இடம் பெற்று இருக்கும் சில சொற்களை எழுதி அதற்கான புணர்ச்சி விதிகளையும் எழுதி வருக 


யா.ஃப்ரீடா, M.A, MA, M.A, M.Ed, M..Phil ,முதுகலை தமிழாசிரியை,அரசு மேல்நிலைப்பள்ளி அயன் குறும்பலாப்பேரி தென்காசி