வகுப்பு 12 தமிழ் மாதிரி பாடக்குறிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வகுப்பு 12 தமிழ் மாதிரி பாடக்குறிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 ஜூன், 2025

வகுப்பு 12 மதராசபட்டிணம்தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஜூலை முதல் வாரம்

 வகுப்பு 12 தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஜூலை முதல் வாரம்

பதிவிறக்கு /DOWNLOAD


நாள் : 29.06.26 முதல் 3.07.26.
வகுப்பு : மேல்நிலை இரண்டாம் ஆண்டு
பாடம் :தமிழ்
தலைப்பு :மதராசபட்டிணம்

கற்றல் நோக்கம்
வாழும் ஊர்களின் இயற்கை அமைப்பு,வரலாறு குறித்த தகவல்களைத் திரட்டித் தொகுத்து எழுதும் திறன் பெறுதல்.
துணைக்கருவிகள்.
 விளக்கப்படம் ,படத்தொகுப்பு ,காணொளி
ஆர்வமூட்டல் *
 1.நமது மாநிலம் எது?
  2.நமது மாநிலத் தலைககரம் எது ?
 இதுபோன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்
கற்பித்தல் செயல் பாடுகள்.
மதராசப்பட்டிணம்
சமூக பண்பாட்டு கூறுகளுள் முதன்மையான நகரங்கள் தென்னிந்தியாவின் நுழைவாயில் சென்னை தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக சென்னை திகழ்கிறது. சென்னையின் வரலாறும் வளர்ச்சியும் குறித்தும் சென்னையின் தொன்மை, அயலவர் குடியேற்றம், நகரம் -உருவாக்கம் நகராட்சி, மாகாணம், அறிவின்நகரம், பண்பாட்டு அடையாளம் போக்குவரத்து, இந்தோ சராசானிக் கட்டடக்கலை, சென்னையின் நீர் நிலைகளும் வடிகால்களும், நூலகங்கள் ஆகிய தலைப்புகள் மூலம் மதராசப்பட்டிணம் பாடப்பகுதியை விளக்குதல்
கற்றல் செயல்பாடுகள்
 பாடப்பகுதியை தெளிவாக நிறுத்தி ஏற்ற இறக்கத்துடன் வாசித்தல்
 நமது மாநில தலைநகரமாகிய சென்னை அன்றும் இன்றும் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் குறித்து கலந்துரையாடுதல் 
வலுவூட்டல்
சென்னை அடைந்த மாற்றம்,கல்வியின் வளர்ச்சி நிலை பற்றி தெளிவாக சுருக்கிக் கூறுதல்
 சிறு சிறு வினாக்கள் கேட்டு மாணவர்கள் புரிதலை அறிந்து சிறப்பான முறையில் பதில் அளிக்கும் மாணவர்களுக்கு தக்க பரிசுகளை வழங்கி பாராட்டுதல் 
கற்றல் விளைவுகள்
 நீர்நிலைகள் நிறைந்து இயற்கை சோலையாக இருந்த சென்னை மாநகரம் என்று கழிவு நீர் ஓடும் கூவம் ஆறாக மாறியதை அறிந்து இயற்கையை மாசுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுவர் 
 நம்மை சுற்றியுள்ள ஊர்களிலும் இயற்கை மாசுபாட்டைத் தவிர்க்கவும் நகரம் சீர்குலையாமல் பாதுகாக்கவும் முற்படுவர். 
 மதிப்பீடு
எ சி வி
1.கற்கோடாரி கண்டுப்பிடிக்கப்பட்ட இடம்……
2. கூவம் ஆற்றின் வேறு பெயர்……
ந.சி.வி
1.சென்னை அறிவின் நகரம் என்று அழைக்கப்படக் காரணம் என்ன?
2. சென்னையை அலங்கரித்த ஆறுகள் எவை?
உசி.வி.
நம்ம சென்னை என்ற தலைப்பில் சென்னையில் இயற்கை வளம் கட்டிடக்கலை வளம் நூலகங்கள் அபரிமிதமான வளர்ச்சி ஆகியவற்றை குறித்து தொகுப்பேடு உருவாக்கு 
தொடர்பணி:
1.சென்னை நகர அன்றைய இன்றைய நிலைப் பற்றி செய்தி தொகுப்பேடு தயாரிக்க.
 2. இயற்கை சூழ்ந்த அழகிய கனவு நகரம் ஒன்றை உருவாக்க உன்னுடைய பரிந்துரைகளை ஒரு தொகுப்பாக எழுதி வருக.