இடுகைகள்

ஜூலை, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காமராசர் கவிதை

 காமராசர் கவிதை  தந்தையை இழந்த நீ  பலருக்கு தந்தையாய் கல்வி தந்தாய்  காமாட்சி என்று உன் அன்னை அழைத்தாலோ என்னவோ  நீ அனைவரையும் காக்கும் ஆட்சி செய்தாய்...! ராசா என்ற பெயரால் தானோ நீ பல ராசாக்களை உருவாக்கினாய்...! வறுமையால் உனக்கு கிடைக்காத கல்வியை எல்லாரும் கற்க வழி செய்தாய் 

கர்மவீரர் காமராசர்

    பெருந்தலைவர் காமராஜர் விருதுநகரில் உள்ள விருதுபட்டி என்ற கிராமத்தில் 1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். இவரின் பெற்றோர் குமாரசாமி, சிவகாமி அம்மாள். காமராஜரை ராசா என்றே அவரது தாயார் அழைத்தார். அவர்களின் குலதெய்வமான காமாட்சியின் பெயரையே அவருக்கு சூட்டி அழகு பார்த்தார். பதின்ம வயதில் காங்கிரஸ் உறுப்பினர் நாளடைவில் அது காமராசு ஆனது. தொடக்க கல்வி மட்டுமே பயின்றுள்ள காமராஜர், பள்ளி படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்ட போது அவரது மாமாவின் துணிக்கடையில் வேலை பார்த்தார். சுதந்திர தாகமும், விடுதலை தீயும் கொளுந்துவிட்டெரிந்த அக்காலக்கட்டத்தில் காமராஜர், பெ. வரதராசுலு நாயுடு போன்றோர்களின் வீரமிக்க சுதந்திர உரைகளால் ஈர்க்கப்பட்டார். தொடர்ந்து தன்னை சுதந்திர போராட்டங்களில் ஈடுபடுத்திக் கொண்டார். தனது 15ஆவது வயதிலேயே அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினரும் ஆனார். உப்பு சத்தியாகிரக போராட்டம் இந்நிலையில் 1930ஆம் ஆண்டு மார்ச் மாதம் வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் உப்பு சத்தியாகிரகம் போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட காமராஜர், கைது செய்யப்பட்டு கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார