புதன், 11 ஜூன், 2025

தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 11 ஜூன் 3வது வாரம்

 தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 11 ஜூன் 3வது வாரம்

நாள்       : 16.06.25 முதல் 20.06.25

 வகுப்பு  : மேல்நிலை முதலாமாண்டு 

 பாடம்  :தமிழ்

 தலைப்பு : இயல் 1

செய்யுள் :ஒவ்வொரு புல்லையும்

 விரிவானம் :இசைத்தமிழர் இருவர் 

 

கற்றல்நோக்கம்:  

  • எளிய மக்களின் உணர்வுகளைக் கலைநயத்துடன் வெளிப்படுத்தும் திறனைப் பெறுதல். 
  • வாழும் காலத்து ஆளுமைகளின் திறமைகளைஉணர்ந்து முன்னோடிகளாகக் கொள்ளுதல் 


 துணைக் கருவிகள் :

  • படங்கள், விளக்க அட்டைகள், மடிக்கணினி, வலையொளி பதிவுகள்.

 ஆர்வமூட்டல்  

1.நம்மை சுற்றி நீ காணும் இயற்கையைப் பற்றி கூறு.

2.கால்நடைகளின் உணவு எது?

 3.உனக்கு பிடித்த பாடல் எது?

4.உன்னுடைய பொழுதுபோக்கு என்ன? 


 கற்பித்தல் செயல்பாடுகள்

வ்வொரு புல்லையும்

  • சாகுல் அமிது என்னும் இயற்பெயருடைய இன்குலாப் எழுதிய கவிதை கூறும் கருத்து புல் உள்ள இடமே உயிர்கள் வாழுமிடம்.
  • பறவைகள் மதம், இனம் என்ற எல்லை கடந்து பறக்கும் . கற்களும், மணலும் இவ்வுலகம் இயங்க துணை புரியும், சாதி மதம் என்பவை சமத்துவ புனலில் கரைந்து ஒன்றாக வேண்டும். எவ்வுயிரையும் தம் உயிர்போல் காத்து உதவுதல் வேண்டும் என்பதை பாடல் வழி விளக்குதல்

 இசைத்தமிழர் இருவர்

சிம்பொனி தமிழன்

  •  அன்னக்கிளி படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று இசைஞானி இளையராஜா சிம்பொனி தமிழர் என்றெல்லாம் புகழப்பட்டு இன்று தனது இசையின் மூலம் பலரின் மனதைக் கட்டிப் போட்டவர் இளையராஜா திருவாசகப் பாடலுக்கு அரட்டோரியா என்னம் வடிவில் இசையமைத்தவர். ஆசியாவில் முதன் முதலில் சிம்பொனி என்னும் மேற்கத்திய செவ்வியல் வடிவ இசைக் கோவையை உருவாக்கியவர்.


ஆஸ்கர் தமிழன்

  • சிறுவயதில் ஏழ்மையின் பிடியில் கஷ்டப்பட்டாலும் தனது திறமையால். உலகை தன்னைத் திரும்பிப் பார்க்கச்செய்தவர்தான் ஆஸ்கர் நாயகன் ஏஆர் இரகுமான்.

  • ரோஜா திரைப்படத்தின் மூலம் தனது இசைப்பயணத்தைத் தொடங்கினார். வந்தே மாதரம், ஜன கண மன என்னும் இசைத் தொகுதிகள் மூலம் நவீன வடிவில் நாட்டுப்பற்று உணர்வை வளர்த்தவர்.


 கற்றல் செயல்பாடுகள் 


  •  பாடலை வாசிக்கச் செய்தல் 

  • செய்யுள் பகுதியில் இடம்பெறும் புணர்ச்சி விதி உறுப்பிலக்கணம் எழுதுதல்.
  •  பாடப் பகுதியில் வாசிக்க செய்தல் 

திரையிசை பாடல்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை குறித்து வகுப்பறையில் கலந்துரையாடல் 


இசைத்தமிழர் இருவரின் பாடல்களில் பிரபலமான பாடல்களைப் பட்டியலிடல்.


 கற்றல் விளைவு


  •  பிற உயிர்களைத் தன் உயிர் போல நேசிக்க கற்றுக் கொள்வார்.
திரையிசை. கலைஞர்கள் பற்றி அறிந்து கொள்வர். 

  • பாடல் பாடும் திறனை அறிந்து பாட ஆர்வம் கொள்வர்.

வலுவூட்டல்


 செய்யுளின் கருத்துகளை தொகுத்து கூறி விளக்குதல்.


 பாடல் பகுதியில் இடம்பெற்றுள்ள உறுப்பிலக்கணம் புணர்ச்சி விதி ஆகியவற்றைக் கூறி விளக்குதல் 


திரையிசைப் பாடல்களை உதாரணமாக கூறுதல்


 திரை இசை பாடல்கள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதை குறித்து மீண்டும் ஒரு முறை விளக்கி வலுவூட்டல்.


 மதிப்பீடு

எ சி வி


1.ஆஸ்கர் தமிழன் யார்?


2.சிம்பொனி தமிழன் யார்?


3. சாகுல் ஹமீது எப்பெயரில் கவிதை எழுதினார்? 


ந சி வி


1. கூவும் குயிலும், கரையும் காகமும் இத்தொடரில் இடம்பெற்ற மரபு எது?


2. இளையராஜா எழுதிய நூல்கள் எவை?


3. ஏ.ஆர்.ரகுமான் பெற்ற விருதுகள் யாவை?


உ சி வி


1. ஏ ஆர் ரகுமான் ஆஸ்கர் தமிழன் நிறுவுக.


2. இளையராஜா உருவாக்கிய இசை தொகுப்புகள் பற்றி கூறு


 தொடர் பணி 


  •  இளையராஜா ஏ ஆர் ரகுமான் பற்றி படத்தொகுப்பு தயாரிக்க.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வகுப்பு 12. ஆகஸ்ட் முதல் வாரத் தமிழ் மாதிரி பாடக் குறிப்பு

 வகுப்பு 12  ஆகஸ்ட் முதல் வாரம்  தமிழ் மாதிரி பாடப் குறிப்பு  DOWNLOAD