தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 12 ஜூன் 3வது வாரம்
நாள் : 16-06:23 முதல் 20.06.23
பாடம் : தமிழ்
வகுப்பு : மேல்நிலை இரண்டாம் ஆண்டு
தலைப்பு : இயல் 1 (உயிரினும் ஓம்பப்படும்)
செய்யுள் : இளந்தமிழே
விரிவானம்: தம்பி நெல்லையப்பருக்கு
கற்றல் நோக்கங்கள்:
வெவ்வேறு காலக் கட்டங்களில் மொழியில் சிறப்பு கூறப்பட்டுள்ள செய்யுள் பாடல் கருத்துகளை தெரிந்து கொண்டு பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்துதல்.
உரைநடை பாடல் கடிதம் போன்ற வடிவங்களில் மொழி கையாளப்படும் தன்மையைப் படித்து புரிந்து கொண்டு தமக்கான கருத்து வெளிப்பாட்டு தன்மையை உருவாக்குதல்.
கற்றல் விளைவுகள்:
தமிழின் சிறப்பை, அறிந்து மதிக்க கற்றுக் கொள்வர்
பாரி முதலான வள்ளல்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டினை அறிந்து அதை தானும் பின்பற்ற முற்படுவர்.
கடிதங்கள் எழுதும் வழக்கத்தை வளர்த்துக் கொள்வர்
ஆளுமைகளின் கடிதங்களை பார்த்து கடிதம் எழுதும் முறையை அறிந்து கொள்வர்.
துணைக் கருவிகள்:
படங்கள் மடிக்கணினி விளக்க அட்டைகள். மாதிரி கடிதம்
ஆர்வமூட்டல்:
கடையேழு வள்ளல்களின் பெயர்களைக் கூறு.
தமிழுக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர்கள் சிலவற்றை கூறு
இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமறச் செய்தல்.
கற்பித்தல் செயல்பாடு
இளத்தமிழே:
உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்த கவிதையாய் வடிக்க செந்தமிழே ஏற்ற மொழி யாகும்.
முச்சங்கத்தில் வீதறிருந்து வள்ளல்களாக வளர்க்கப்பட்ட மொழி
பழமை நலம் புதுக்குதற்கு தமிழாகிய குயிலே கூவு.
இலக்கணக்குறிப்பு, உறுப்பிலக்கணம் புணர்ச்சி விதிகள் பகுதிகளை விளக்கமாகக் கற்பித்தல்
தம்பி நெல்லையப்பருக்கு
* கடித இலக்கியம் குறித்து விளக்குதல்
* கடித இலக்கியம் எழுதுவதில் திரு.வி.க. மு.வ. அண்ணா போன்றவர்கள் மிகச்சிறந்தவர்கள்,
பாரதியின் கடிதத்தில் உள்ள கருத்துகளை பாடம் வழி விளக்குதல்
கற்றல் செயல்பாடுகள்
தமிழை வளர்த்த வள்ளல்களின் ஈகை பண்பை வகுப்பறையில் கலந்துரையாடுதல்
முச்சங்கங்கள் குறித்து உரையாடுதல்
கடிதத்திற்கு மாற்றாக இன்று நம்மிடையே இருக்கும் செய்தி பரிமாறும் சாதனஙகளைக் குறித்து கலந்துரையாடுதல்.
வலுவூட்டல்:
பாடலின் பொருளை மீண்டும் கூறுதல்
எளிய வினாக்கள் கேட்டல்
கடினச் சொற்களுக்குப் பொருள் கூறுதன் மூலம் வாலுவூட்டல்
பாரதியின் கடிதத்தில் உள்ள முக்கியமான கருத்துக்களை மீண்டும் கூறி விளக்குதல்
மதிப்பீடு
எ சி வி
1. இளந்தமிழே கவிதையை எழுதியவர் யார்?
2. சிற்பி பாலசுப்பிரமணியனின் சாகித்ய அகடமி விருது பெற்ற நூல் எது?
3. பாரதியார் யாருக்கு கடிதம் எழுதினார்?
ந. சி வி
1. சிற்பி பாலசுப்ரமணியனின் படைப்புகள் யாவை?
2. பாரதியார் பற்றி குறிப்பு வரைக
3. பரலி சு. நெல்லையப்பர் குறிப்பு வரைக
உ சி வி
1. மொழி வாழ்த்து பாடலின் நோக்கம் என்ன?
2. பாரதியின் கடிதத்தில் உள்ள செய்திகளை தொகுத்து எழுது
தொடர் பணி
1.தமிழ் மொழியை வாழ்த்தும் வகையில் இருக்கும் சில பாடல்களை தொகுக்க.
2. மகாகவியான பாரதிக்கு கற்பனையில் கடிதம் ஒன்றை எழுது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக