தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 11 ம் வகுப்பு ஜூன் முதல் வாரம்
நாள் : 2.06.25 முதல் 6.06.25 வரை
பாடம்: தமிழ்
வகுப்பு: மேல்நிலை முதலாம் ஆண்டு
தலைப்பு: இயல் 1 (என்னுயிர் என்பேன்)
செய்யுள்: யுகத்தின் பாடல்
கற்றல் நோக்கங்கள்:
எளிய மக்களின் உணர்வுகளை கலை நயத்துடன் வெளிப்படுத்தும் திறனை பெறுதல்.
துணைக் கருவிகள் :
கரும்பலகை விளக்க அட்டைகள், மடிக்கணினி.
ஆர்வமூட்டல் :
நம் கருத்தை பிறருக்கு உணர்த்த உதவுவது எது?
தமிழின் சிறப்பைக் கூறு
இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுற செய்தல்.
கற்பித்தல் செயல்பாடுகள்
புதுக்கவிதை - விளக்கம்
மரபு சார்ந்த செய்யுள்களின் யாப்புக் கட்டுப்பாடுகளுக்கு உட்படாத கவிதைகளைப் புதுக்கவிதைகள் என்பர். புதுக்கவிதை படிப்போரின் ஆழ்மனத்தில் ஏற்படுத்தும் தாக்கமே முதன்மையானது. இது படிப்போரின் சிந்தனைக்கு ஏற்ப விரிவடையும் பன்முகத்தன்மை கொண்டது. புதுக்கவிதை வடிவம் எளியவர்களும் தம் உணர்ச்சிகளைக் கவிதை வாயிலாக வெளிப்படுத்தும் வாய்ப்பைத் தந்தது எனலாம்.
தாய் மொழியாம் தமிழ் மொழி சங்க காலம் தொடங்கி இன்றைய காலம் வரையும் உயர்தனிச் செம்மொழியாய் செழித்தோங்கி இருக்கிறது என்ற கருத்தை பாடல் வழி விளக்குதல்.
கற்றல் செயல்பாடுகள்
பாடலைச் சீர் பிரித்து வாசித்தல்
பாடலில் இடம்பெறும் எதுகை மோனை போன்ற நயங்களை அறிந்து படித்தல்
கற்றல் விளைவுகள்:
மொழியின் சிறப்பை அறிந்து வளர்க்க முனைதல்
மொழி கடந்து வந்த பாதையை அறிந்து மொழியின் தொன்மையை உணர்ந்து செயல்படல்
வலுவூட்டல்.
செய்யுள் பகுதியை மீண்டும் ஒருமுறை வாசித்து பொருளை தெளிவாக விளக்குதல்
மதிப்பீடு
எளிய சிந்தனை வினா
1. யுகத்தின் பாடல் என்ற கவிதையை எழுதிய ஆசிரியர்
2. மனித இனத்தின் முதல் அடையாளம் எது
நடுத்தர சிந்தனை வினா
1. சு.வில்வரத்தினம் பற்றி குறிப்பு எழுதுக.
2. இனம் மொழி குறித்து ரசூல் கம்சதோவ் கூற்று யாது?
உயர் சிந்தனை வினா
1. தமிழ் மொழியின் தொன்மையை பற்றி கட்டுரை வரைக..
தொடர் பணி
காலத்தை வென்ற மொழி என்ற தலைப்பில் கவிதை படைக்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக