புதன், 31 டிசம்பர், 2025
ஞாயிறு, 21 டிசம்பர், 2025
ஹைக்கூ
ஹைகூ (குறும்பா)
வடிவமாறுபாட்டில் வசீகர தன்மையுடன் திகழ்ந்துவருவது குறும்பா எனப்படும் ஹைகூ.
இது கால, இட, மன இயல்புகளுக்கு ஏற்ப வடிவத்தில் மாறுபடும். ஆனால், தனக்குரிய அடிப்படைத் தன்மையை இழக்காது.
புதுக்கவிதையைத் தொடர்ந்து தமிழுக்கு அறிமுகம் ஆன கவிதை 'ஹைகூ' கவிதையாகும்.
குறும்பா என்று சொல்லப்படும் இக்கவிதை மரபு, ஜப்பானிய மொழியிலிருந்து தமிழுக்கு வந்தது.
ஹைகூவின் வடிவமானது, சொற்சுருக்கம், படிமம், விடுகதை போன்று வினா தொடுத்து விடையளிக்கும் முறை போன்றவற்றை கொண்டதாகும்.
(ஜப்பானியச் சீமான் வீடுகளில் பொழுது போக்காகச் சொல் விளையாட்டு நிகழ்த்தப்பட்டது. அது ஹைகூ வடிவத்தில் இருந்தது.)
ஹைகூவின் வடிவம் ஜப்பானிய மொழியின் மரபுக் கவிதை வகையைச் சேர்ந்ததாகும்.
ஹைகூ முதலடியில் ஐந்து அசைகள்;
இரண்டாம் அடியில் ஏழு அசைகள்;
மூன்றாம் அடியில் ஐந்து அசைகள் எனப் பதினேழு அசைகளைக் கொண்டது;
மூன்று அடிகளைக் கொண்டது.
முதல் வரியானது சாட்டையைக் கையில் எடுக்கும் அமைதியான ஆழ்ந்த கோபம் கொண்டது;
இரண்டாவது வரி, சாட்டையை ஓங்குவது போன்ற நிதானம் கொண்டது;
மூன்றாவது அடி சுழற்றி வீசும் தெறிப்போடு 'நறுக்' கென்று இருக்கும் என்கிறார் நெல்லை சுமணி.
* பௌத்தமதக் கோட்பாடுகளான ஆழ்நிலை தியானம், பற்றறுத்தல், உண்மையைத் தேடல் ஆகிய தத்துவங்களைக் கொண்டது 'ஹைகூ' கவிதைகள்.
* உணர்ச்சிக் குறிப்புகளை, ஒலிக் குறியீடுகளாலும், நிறுத்தக் குறிகளாலும் வெளிப்படுத்துவது இக்கவிதைகளின் முறையாம்.
நேரடியான உவமைகள் ஹைகூவில் இடம் பெறுவதில்லை.
வினா விடை அமைப்புடன் விடுகதை போன்று இருந்தலும் இதன் இயல்பாகும்.
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலே ஹைகூ கவிதைகளின் நோக்கமாகும். இதனால் ஹைகூ தற்காலத்து வேகம் நிறைந்த வாழ்க்கையில் வெற்றியைப்பெற்றது.
தமிழில் ஹைகூ
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதிய வகை கவிதை வடிவங்களை அறிமுகப்படுத்தியவர் சுப்பிரமணிய பாரதி ஆவார்.
புதுக்கவிதைக்கு முதல்படியான வசன கவிதை வடிவில் பாரதி சில கவிதைகளை எழுதினார்.
அதைத் தொடர்ந்து ஹைகூ பற்றித் தனது சுதேசமித்திரன் இதழில் கட்டுரை எழுதினார்.
கல்கத்தாவிலிருந்து வெளியான இதழ் ஒன்றில், உயாநே நோகுசி என்ற ஜப்பானிய இலக்கியவாதி ஹைகூ பற்றிக் கடிதம் வெளியிட்டார். அதுவே, பாரதிக்கு ஹைகூ பற்றி எழுதத் தூண்டுகோலாயிற்று.
ஜப்பானியக் கவிதைகள் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சிறப்புடையன என்று நோகுசி குறிப்பிட்டிருந்தார்.
தமிழில் இத்தகைய உத்தி திருக்குறளிலேயேவழங்கியுள்ளது என்று பாரதி எழுதினார்.
தமிழ் நாடன், லீலாவதி போன்றோர் மொழிபெயர்ப்பு ஹைகூ கவிதைகளை வெளியிட்டுள்ளனர்.
கவிஞர் அப்துல் ரகுமான் 'பால்வீதி' என்ற கவிதைத் தொகுப்பில் ஹைகூ கவிதைகளை வெளியிட்டார்.
முட்டை கொண்டு
திட்டை ஏறும் எறும்புகள்
அவன் எழுத்துக்கள்"
படித்தவர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய தன்மையுடையவை இத்தகைய ஹைகூ கவிதைகள்.
அமுத பாரதி, அறிவு மதி, நீலமணி, வைத்திய லிங்கம், கழனியூரன், கலாப்ரியா முதலானோர் ஹைகூ எழுதி வெற்றி பெற்றுள்ளனர்”
"அடுப்பின் நெருப்பெங்கே அதோ எரிகிறது
ஏழையின் வயிற்றில்"
ஜப்பானியக் கவிதை கூறும் தத்துவங்களில் இருந்து சற்று மாறுபட்டுச் சமுதாயச் சிக்கல்களை மையமாக வைத்து தமிழ் ஹைகூ கவிதைகள் எழுதப்பட்டன.
ஈரோடு தமிழன்பன், மின்னு சீனிவாசன், துறவி (பத்மநாபன்) முதலான பெருங்கவிஞர்களும் ஹைகூ கவிதைகளில் தங்கள் முத்திரையைப் பதித்துள்ளனர்.
'சிறகுகளின் சுவடுகள்' என்ற பெயரில் துறவி (பத்மநாபன்) கவிதைத் தொகுதி,
'சொந்த தேசத்து அகதிகள்' என்ற பெயரில் கோ.வசந்த குமாரின் கவிதை வெளியீடு எனப் பலர் தங்கள் தமிழ் ஹைகூக் கவிதைகளை வெளியிட்டுள்ளனர்.
ஈரோடு தமிழன்பன் புதுக் கவிதையில் சிறந்த பாடல்களை எழுதிப் புகழ் பெற்றவர்.
அவருடைய 'சூரிய பிறைகள்'. மித்ராவின் 'குடையில் கேட்ட பேச்சு' போன்றவை சிறந்த ஹைகூ நூல்களாகும்.
லட்சுமிபாய்
பிள்ளையுடன்
குழந்தைகள் காப்பகத்திற்கு"
மனதில் வெப்பம்
வாயில் புகை
நுரையீரலில் ஒட்டடை ஓட்டை...
போன்ற இக்கவிதைகள் இன்றை சமூகத்தைப் பிரதிபலிக் கின்றன.
கீற்று - நூலில் வேனிலா ஸ்டாலின் 'அரும்புகள்' என்ற தலைப்பில் ஹைகூ கவிதைகள் எழுதியுள்ளார்.
1984 -ல் கவிஞர் அமுதபாரதி 'புள்ளிப் பூக்கள்' என்னும் முதல் ஹைகூ கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார்.
இன்று சமூக சிக்கல்களைப் பாடுபொருளாகக் கொண்டு ஹைகூ கவிதைகள் பல படைக்கப்பட்டு தொகுப்புகளாக நூலாக்கம் பெற்று வெளிவந்துள்ளன.
புதுக் கவிதையில் பெரும் வெற்றி பெற்ற கவிஞர்கள் ஹை எழுதுவதிலும் தங்கள் திறனைக் காட்டியுள்ளனர். ஹைகூ கவிதைகள் சற்று சிந்தித்துப் புரிந்து இரசிக்கக் கூடியவை
ஞாயிறு, 14 டிசம்பர், 2025
வியாழன், 11 டிசம்பர், 2025
திங்கள், 8 டிசம்பர், 2025
புதுக்கவிதை
1. ஒருவர் எழுதித்தான் ஆக வேண்டும் என்ற நிலை ஏற்படுகிற போது தான் ஒருவர் லகு கவிதை எழுத வேண்டும் என்றவர்
- எஸ்ரா பவுண்ட்
2. சி மணி எழுதிய முதல் கவிதை
- குகை
3. வசன கவிதை என்பது கவிஞன் தன் உணர்வை தோன்றிய போக்கில் சிதறு விடுவதாகும் என்றவர்
- கைலாசபதி
- நான்
- பயிர்
- நவசக்தி
- நா.பிச்சமூர்த்தி கு.பா.ரா
- அ சீனிவாச ராகவன்
- க நா சு
- வேளுர் வெ.கந்தசாமி பிள்ளை
- நா பிச்சமூர்த்தி
- நா பிச்சமூர்த்தி
- த சி ராமலிங்கம்
- டி எஸ் எலியட்
- நீ இன்று இருந்தால்
- நா. காமராசன்
- புல்
- மாலி
- வானம்பாடி
ஞாயிறு, 7 டிசம்பர், 2025
கவிஞர் வாலி
கவிஞர் வாலி
- இயற்பெயர் டி எஸ் ரங்கராஜன்
- பிறப்பு: திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் பிறந்து திருவரங்கத்தில் வளர்ந்தவர்.
- நினைவு நாடாக்கள் என்ற தொடர் வாலி அவர்கள் தம் பழகிய ஆளுமைகள் பற்றி ஆனந்த விகடன் இதழில் எழுதியது.
- 15000-க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியுள்ளார்
- சத்யா
- ஹேராம்
- பார்த்தாலே பரவசம்
- பொய்க்கால் குதிரை
- கையளவு மனசு
- நேதாஜி
- எழுத்தாளர் கல்கி
- 2007 ஆம் ஆண்டு
- பள்ளி தோழன் பாபு
- வாலி அவர்களின் முதல் நாடகத்தின் பெயர் என்ன தெரியுமா? தளபதி!.
- தளபதி' என்ற பெயருக்கும், வாலிக்கும் ரொம்ப ராசி. மணிரத்னம் இயக்கி ரஜினிகாந்த் நடித்த தளபதியில் அவரது பாடல்வரிகள் 'வெற்றி' என்பது எல்லாரும் அறிந்தது
- ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை... " ஆயிரத்தில் ஒருவன் 1968
- " மல்லிகை என் மன்னன் மயங்கும்... " தீர்க்க சுமங்கலி 1974
- " மாதவிப்பொன் மயிலாள் தோகைவிரித்தாள்... " இரு மலர்கள் 1967
- நான் ஆணையிட்டால் எங்க வீட்டுப் பிள்ளை (1965)
- காற்று வாங்க போனேன் - கலங்கரை விளக்கம் (1965)
- சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ- சந்திரோதயம் (1966)
- வெற்றி வேண்டுமா போட்டு பாரடா - எதிர்நீச்சல் (1968)
- இறைவா உன் மாளிகையில்- ஒளிவிளக்கு (1968)
- அந்த நாள் ஞாபகம் - உயர்ந்த மனிதன் (1968)
- புன்னகை மன்னன் பூவிழிகண்ணன்- இருகோடுகள் (1969)
- ஆண்டுக்கு ஆண்டு சுபதினம் (1969)
- மதுரையில் பறந்த மீன்கொடியை- பூவா தலையா (1969




