செவ்வாய், 30 ஜூன், 2026

வகுப்பு :11 ஐங்குறுநூறு, திருக்குறள்

 நாள்                  : 6-.07.26 முதல் 10.07.26.

வகுப்பு             : மேல்நிலை முதலாமாண்டு 


பாடம்                 : தமிழ்

 பாடவேளை     :4

தலைப்பு: இயல் 2 இயற்கை வேளாண்மை சுற்றுச்சூழல்

 செய்யுள்:                ஐங்குறுநூறு,

 அற இலக்கியம் :திருக்குறள் 


கற்றல் நோக்கம்

  •  இயற்கை மனிதனுக்கு உதவுவதையும் உணர்த்துவதையும் இலக்கியம் வழி அறிந்து மதிப்பளித்தல் 
  •  அற இலக்கியங்களில் உட்பொருளை அறிந்து அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் திறன் பெறுதல் 

துணைக்கருவிகள்


  • விரைவு குறியீட்டு காட்சிகள். விளக்க பட அட்டைகள்,

ஆர்வமூட்டல் : 

  •  சங்க இலக்கியங்கள் எவை?
  •  எட்டுத்தொகை நூல்களைக் கூறு.
  •  உலகப் பொதுமறை என்று அழைக்கப்படும் நூல் எது?

இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்:


கற்பித்தல் செயல்பாடுகள்.

  •  இல்லறத்தில் அன்பும் அறனும் சிறக்க வேண்டி தலைவன் பொருளீட்ட வெளியூர் செல்வது பற்றி சங்க பாடல்கள் பேசுவதையும், சங்ககால மக்களின் இயற்கை வாழ்வோடு மலர்கள் பின்னி பிணைந்து இருந்ததையும் அவை பிரிந்து சென்ற தலைவனின் வரவை தலைவிக்கு அறிவிக்கும் நிகழ்வையும் ஐங்குறுநூற்று பாடல் வழி விளக்குதல் 

 திருக்குறள்

  •  அற இலக்கியம் ஆகிய திருக்குறள் குறள் வெண்பாவில் அமைந்தது.
  • திருக்குறளுக்கு பதின்மர் உரை உள்ளது.திருக்குறளின் சிறப்பினை விளக்க புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நூல் திருவள்ளுவமாலை,
  • வாழ்வியலுக்கு தேவையான அத்தனை கருத்துக்களையும் கூறும் அற்புதச் சுரங்கம் திருக்குறள் 
  • பாடப்பகுதியில் இடம் பெற்று இருக்கும் அடக்கமுடைமை, ஒப்புரவறிதல், புகழ், தவம்,நிலையாமை, துறவு,அவ அறுத்தல்,வலியறிதல்,காலமறிதல் ஆகிய அதிகாரங்களில் கூறப்படும் குறள்களின் கருத்துகளை விளக்குதல் 

கற்றல் செயல்பாடுகள்

  •  இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழர்களின் அக வாழ்வைக் குறித்து கலந்துரையாடுதல்
  •  திருக்குறளையும் செய்யுளையும் சீர் பிரித்து வாசித்தல் 

கற்றல் விளைவுகள்:

  •  இயற்கையோடு இயைந்து வாழக் கற்றுக் கொள்வர்.
  •  அற இலக்கியமாகிய திருக்குறள் கூறும் கருத்துகளை வாழ்வில் பின்பற்றி மேன்மை அடைய முற்படுவர்

வலுவூட்டல்:

  •  பாடம் சார்ந்த வினாக்களை மாணவர்களிடம் கேட்டு ஏற்புடைய வகையில் தெளிவாக பதில் அளிக்கும் மாணவர்களை பாராட்டுதல் 
  •  திருக்குறளின் கருத்துக்களை மீண்டும் கூறி ஒவ்வொரு அதிகாரத்திலும் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை மாணவர்களிடம் கேட்டு பதில் அளிக்கும் மாணவர்களைப் பாராட்டுதல்


 

மதிப்பீடு:


"எளிய சிந்தனை வினா..

  •  ஐங்குறுநூறு நூலை தொகுத்தவர் யார்?
  •  பேயனார் இயற்றிய பாடல்கள் எத்தனை?
  •  திருவள்ளுவருக்கு வழங்கும் வேறு பெயர்கள…

நடுத்தர சிந்தனை வினா


1. ஐங்குறுநூறு நூல் குறிப்பு தருக 

2. ஐங்குறுநூறு பாடலில் இடம்பெற்றுள்ள பூக்களின் பெயர்களைத் தொகுக்க.

3. மருந்து எது மருந்து மரமாக இருப்பவர் யார்?

உயர் சிந்தனை:

 

  • சொற்பொருள் பின்வருநிலையணியை விளக்குக.
  •  கொடையில் சிறந்து விளங்க வள்ளுவர் கூறும் வழிகளை விளக்குக.

குறைதீர்க்கற்றல் :

  •  மாணவர்களிடம் வினாக்கள் கேட்டு பதில் அளிக்க தடுமாறும் பகுதியை மீண்டும் ஒரு முறை விளக்கி கூறுதல்.

தொடர் பணி :


  •  தமிழ் இலக்கியங்கள் காட்டும் பூக்கள் குறித்த செய்திகளைத் தொகுக்க.
  •  படப்பகுதியில் இடம்பெற்றுள்ள குறட்பாக்களில் பயின்று வரும் அணிகளைச் சுட்டுக


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக