நாள் : 06.07.26 முதல் 10.07.26.
வகுப்பு : மேல்நிலை இரண்டாம் ஆண்டு
பாடம் :தமிழ்
தலைப்பு : பிறகு ஒருநாள் கோடை, நெடுநல்வாடை
கற்றல் நோக்கம்
வேறுபட்ட காலகட்டங்களில் எழுதப்பட்ட பாடல் செயல்களின் வாயிலாக வெளிப்படும் பருவ கால வாழ்க்கை முறையை தற்காலத்தோடு இணைத்து அறிந்து வெளிப்படுத்தும் தன்மை பெறுதல்
பழந்தமிழர் திணை வாழ்வைச் சங்கப் புலவர்கள் கவிதையாக்கிய நயத்தை உணர்தல்
துணைக்கருவிகள்.
விளக்கப்படம் ,படத்தொகுப்பு ,காணொளி
ஆர்வமூட்டல் *
பருவ காலங்கள் பற்றி கூறு
மழை நாளில் உனக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் கூறு..
* பத்துப்பாட்டு நூல்களின் பெயர்களைத் கூறு.
இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்.
கற்பித்தல் செயல் பாடுகள்.
மழை இல்லாமல் போனால் ஏற்படும் நிலைகளையும், மழையால் விளையும் நன்மைகளையும் உரைத்தல்
மழை வந்தபின் நகரம், செடி கொடி,ஆகியவற்றில் ஏற்படும் மாற்றம் குறித்தும் விளக்குதல்.
நெடுநல்வாடை நூலைப் பற்றிவும். அதன் ஆசிரியரைப் பற்றியும் கூறுதல்.
தலைவனுக்கு நல்வாடையாகவும் தலைவனை பிரிந்து வாடும் தலைவிக்கு நெடு வாடையாகவும் இருக்கும் நெடுநல்வாடையின் பெயர் காரணத்தை விளக்குதல்.
கார்காலத்தில் பெய்த மழையால் விலங்குகளும் பறவைகளும், கோவலர். தங்களைக் காத்துக் கொண்ட நிகழ்வை விளக்குதல்
கற்றல் செயல்பாடுகள்
மழையால் ஏற்படும் நன்மை தீமைகளைப் பற்றி உரையாடுதல்
கவிதையை வாசித்தல்
மழை பற்றிய கவிதைகளைக் கூறுதல்
நெடுநல்வாடை பாடலைச் சீர் பிரித்து வாசித்தல்
வலுவூட்டல்
கடினமான பாடப்பகுதிகளை மீண்டும் கற்பித்தல்
வினாக்கள் கேட்டல் சிறப்பாக விடை அளிக்கும் மாணவர்களைப் பாராட்டுதல்
பாடல் பகுதியை மீண்டும் வாசித்துக் காட்டல்
பாடப்பகுதியில் இடம்பெறும் உறுப்பிலக்கணம் புணர்ச்சி விதிகளை வினாவாக கேட்டும் கரும்பலகையில் எழுத வைத்தும் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டுதல்
கற்றல் விளைவுகள்
மாறுபட்ட இரண்டு இயற்கை நிகழ்வுகள் இணைகிற போது வெளிப்படும் அழகை கண்டு ரசிக்க கற்றுக் கொள்வர்
நெடுநல்வாடை காட்டும் வாழ்க்கை நிகழ்வையும் இயற்கையோடு இணைந்த பண்பாட்டையும் அறிந்து கொள்வர்
மழையின் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்பையும் அதிக குளிரினால் ஏற்படும் தாக்கத்தையும் சமாளிக்க கற்றுக் கொள்வர்.
மதிப்பீடு
எ சி வி
இனநிரை பிரித்து புணர்ச்சி விதி தரும்.
* பொய்யாவா னம்- இலக்கணக் குறிப்பு தருக.
ஐயப்ப மாதவனின் கவிதை குறும்படம் எது?
ந.சி.வி
நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது எப்போது?,
.நக்கீரர் பற்றி கூறு?
நெடுநல்வாடை பெயர் காரணம் தருக
உசி.வி.
வாடைக்காலத்தில் கோவலர்கள் எவ்வாறு தம் பாதுகாப்பை தேடினர்?
பருவ காலங்களில் ஏற்படும் மாற்றங்களை குறித்து நும் கருத்துகளைக் கூறு.
குறைதீர்க்கற்றல் :
- மாணவர்களிடம் வினாக்கள் கேட்டு பதில் அளிக்க தடுமாறும் பகுதியை மீண்டும் ஒரு முறை விளக்கி கூறுதல்.
தொடர்பணி:
1. மழை பற்றி கவிதைகளை தொகுக்க
2.அண்மையில் ஏற்பட்ட மழைக்கால பாதிப்புகளை குறித்து கட்டுரை வரைக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக