புதன், 8 ஜூலை, 2026

முதல் கல் வகுப்பு 12

 நாள் : 13.07.26 முதல் 17.07.26. 

வகுப்பு : மேல்நிலை இரண்டாம் ஆண்டு

பாடம் :தமிழ்

தலைப்பு : முதல் கல் 

பாட வேளை :4

கற்றல் நோக்கம்

  • கதையின் வாயிலாக வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றும் திறன் பெறுதல்.

துணைக்கருவிகள்.

  • விளக்கப்படம் ,படத்தொகுப்பு ,காணொளி

 *https://youtu.be/EjgO_jKRtXw?si=QDLJP-yqRCaYcBFL

 ஆர்வமூட்டல்

  • நம்மைச் சுற்றியுள்ள நீர் நிலைகள் சிலவற்றைக் கூறு.
  •  சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பாய்?
  •   இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்.

கற்பித்தல் செயல்பாடுகள்.

  • பயிர்களை வாழவைப்பது மழை. அது பெருமழையாகி வெள்ளமாய்த் திரண்டு தேங்கும்போது, தான் உயிர்ப்பித்த பயிர்களையே அழித்துவிடுகிறது. அது மழையின் குற்றமன்று. வெள்ளம் தேங்காமல் வடிய வழிவகை செய்யாத மனிதனின் குற்றம். பெருவெள்ளத்தை வடியச் செய்யத் தனிமனிதனால் முடியுமா? ஊர்கூடிச் செய்யவேண்டிய பணியல்லவா? என்று எண்ணாமல் தானே இரங்கி செயல்பட வேண்டும்.
  • ஒரு செயலை யாராவது செய்வார்களா என்று எண்ணி பொழுதைக் கழிப்பதை விட, நாமே களத்தில் இறங்சி செய்யத் தொடங்கும். போது மற்றவர்கள் நம்மோடு கைக் கோர்த்து செயலை வெற்றியடையச் செய்வர் என்பதை உத்தமசோழன். கதை வழி விளக்குதல்

கற்றல் செயல்பாடுகள்:

  •  கதைப்பகுதியை வாசித்தல் 
  • நிர்நிலைகளைப் பாதுகாக்கும் முறைப் புற்றி கலந்துரையாடல்.

வலுவூட்டல்

  •  கதைப்பகுதியை கருப்பொருள் மாறாமல் சுவைக்குன்றாமல் மீண்டும் ஒரு முறை சுருக்கி கூறுதல் 
  •  கதைப்பகுதியை மாணவர்கள் கருப்பொருளுடன் கூறச் செய்தல் சிறப்பாக கூறும் மாணவர்களைப் பாராட்டுதல் 

கற்றல் விளைவுகள்

  •  சொந்த வாழ்விலும் சமூக வாழ்விலும் ஏற்படும் பிரச்சனைகளை பிறரை எதிர்பார்க்காமல் தானே முன் நின்று செய்ய கற்றுக் கொள்வர்

 மதிப்பீடு

எ சி வி

  • முதல் கல் சிறுகதை ஆசிரியர்….

ந.சி.வி

  • முதல்கல் கதையின் கருப்பொருள் என்ன?

உ.சி.வி.

  •  முதல் கல் கதையில் இடம் பெறும் கதை மாந்தர்களின் பண்புகளை விவரிக்க.
குறைதீர்க்கற்றல் :

 மாணவர்களிடம் வினாக்கள் கேட்டு பதில் அளிக்க தடுமாறும் பகுதியை மீண்டும் ஒரு முறை விளக்கி கூறுதல்

தொடர்பணி:

  •  மரக்கன்று வழங்கும் நோக்கங்களையும் அதனை வளர்ப்பதால் ஏற்படும் புது நன்மைகளையும் கொண்ட இரு பக்க சிற்றேட்டை உருவாக்குக.




மனோன்மணீயம் வகுப்பு 11

 

நாள்                  : 13-.07.26 முதல் 17.07.26

வகுப்பு             : மேல்நிலை முதலாம் ஆண்டு 


பாடம்                 : தமிழ்

 பாடவேளை        :4

தலைப்பு: இயல் 2 இயற்கை வேளாண்மை சுற்றுச்சூழல்

 செய்யுள்:        மனோன்மணீயம்


கற்றல் நோக்கம்

  •  இயற்கை மனிதனுக்கு உணர்த்துவதையும் உதவுவதையும் இலக்கியம் வழி அறிந்து மதிப்பளித்தல் 


 துணைக்கருவிகள்


  • விரைவு குறியீட்டு காட்சிகள். விளக்க பட அட்டைகள்,

ஆர்வமூட்டல் : 

  •  நம்மைச் சுற்றி காணும் பொருட்கள் சிலவற்றை கூறு 

  •  திருநெல்வேலியில் உள்ள பல்கலைக்கழகம் எது?

  •  நம்முடைய தமிழ்த்தாய் வாழ்த்து யார் எழுதியது?

  • இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்:


கற்பித்தல் செயல்பாடுகள்.


மனோன்மணீயம்:


  • பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் விட்டன் பிரபு ஆங்கிலத்தில் எழுதிய இரகசிய வழி என்ற நூலைத் தழுவி எழுதிய முதல் பா வடிவ நாடகம் மனோன்மணியம் இதில் 5 அங்கமும் 20 களமும் உள்ளது.

  • கிளைகதையாக சிவகாமிசரிதம் உள்ளது.

  • நடராசன் தன் பணியின் இடையே

  • வேலையில் ஒய்வு நேரத்தில் அங்கிருந்த புல், நாங்கூழ்புழு இவற்றின் பணி மற்றும் அழகு குறித்து கூறும் நடராசனின் தனிமொழியைப் பாடம் வழி விளக்குதல்

கற்றல் செயல்பாடுகள்

  •  பாடல் பகுதியை வாசிக்க செய்தல் 

  •  செய்யுள் பகுதியில் இடம்பெறும் புணர்ச்சி விதி உறுப்பிலக்கணம் ஆகியவற்றை எழுதுதல்

  •  புல் மற்றும் நாங்குழ் புழுவின் செயல்களைப் பற்றி வகுப்பில் உரையாடுதல் 


கற்றல் விளைவுகள்:

  •  இயற்கையோடு இயைந்து வாழக் கற்றுக் கொள்வர்.

  •  அனைத்து உயிர்களையும் அதனுடைய உழைப்பைப் பார்த்து மதிக்க கற்றுக் கொள்வர் 

வலுவூட்டல்:

  •  செய்யுளின் கருத்துகளைத் தொகுத்து கூறுதல் 

  •  புல்லின் செயல்கள் நாங்கழ் புழுவின் பணிகள் ஆகியவற்றை வினாவாக கேட்டு பதில் அளிக்கும் மாணவர்களைப் பரிசளித்து பாராட்டுதல் 

 குறைதீர்க்கற்றல் :

  •  மாணவர்களிடம் வினாக்கள் கேட்டு பதில் அளிக்க தடுமாறும் பகுதியை மீண்டும் ஒரு முறை விளக்கி கூறுதல்.

மதிப்பீடு:


"எளிய சிந்தனை வினா..

  •  மனோன்மணியம் ஆசிரியர் யார்?

  •  மனோன்மணியம் செய்யுள் பகுதியை தனி மொழி பேசுபவர் யார்?


நடுத்தர சிந்தனை வினா

  •  புல்லின் செயல்களாக நடராஜர் கூறுவது யாது?


1. உயர் சிந்தனை வினா:

  •  நடராசனின் தனிமொழியிலிருந்து நீங்கள் அறியும் கருத்துக்களை கூறு 

குறைதீர்க்கற்றல் :

மாணவர்களிடம் வினாக்கள் கேட்டு பதில் அளிக்க தடுமாறும் பகுதியை மீண்டும் ஒரு முறை விளக்கி கூறுதல்

தொடர் பணி :


  •  நாங்கூழ் புழு நடராசனிடம் உரையாடல் நடத்தியிருந்தால் எப்படி இருக்கும் கற்பனையாக ஒரு உரையாடலை எழுதுக 



யா.ஃப்ரீடா, M.A, MA, M.A, M.Ed, M..Phil ,முதுகலை தமிழாசிரியை,அரசு மேல்நிலைப்பள்ளி அயன் குறும்பலாப்பேரி தென்காசி