நாள் : 3-.08.26 முதல் 07.08.26.
வகுப்பு : மேல்நிலை இரண்டாம் ஆண்டு
பாடம் : தமிழ்
பாடவேளை :4
தலைப்பு : சுற்றத்தார் கண்ணே உள
உரைநடை : தமிழர் குடும்ப முறை
கற்றல் நோக்கம்
- தமிழர் குடும்ப உறவும் முறைகளையும் அவற்றின் பெருமைகளையும் கட்டுரை வழியாக அறிந்து பின்பற்றும் பண்பினைப் பெறுதல்
துணைக்கருவிகள்
- விரைவு குறியீட்டு காட்சிகள். விளக்க பட அட்டைகள்,
ஆர்வமூட்டல் :
- உறவுப் பெயர்கள் சிலவற்றை கூறு
- தாய் தந்தை மகன் என்று இருக்கும் அமைப்பு எது?
இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்:
கற்பித்தல் செயல்பாடுகள்.
- குடும்பம் என்ற அமைப்பு ஏற்பட நெடுங்காலம் ஆகியிருக்கலாம். இந்த உயர்ந்த அமைப்பின் மூலமே உலகச்சமூகம் இயங்குகிறது. சங்க காலத்தில் குடும்ப அமைப்பு மேலோங்கிய ஒன்றாக இருந்தது. அதன் தொடர்ச்சி இன்றுவரை இருக்கிறது. தொன்மைக் காலத்திலேயே மேம்பட்ட குடும்ப அமைப்பை உருவாக்கியிருந்த தமிழ்ப் பண்பாட்டின் செழுமை, சங்க இலக்கியங்கள் வாயிலாக வெளிப்படுகிறது.
- குடும்பம், வாழிடம், மணந்தகம் தாய் வழி குடும்பம் தந்தை வழி குடும்பம் விரிந்த குடும்பம் தனி குடும்பம் ஆகியவற்றை பாடப்பகுதி வழி நின்று விளக்குதல்.
கற்றல் செயல்பாடுகள்
- பாடப்பகுதியை வாசித்தல்.
- குடும்ப அமைப்பு முறை பற்றியும் குடும்பத்தில் உள்ள நிகழ்வுகள் பற்றியும் கலந்துரையாடுதல்.
கற்றல் விளைவுகள்:
- குடும்ப அமைப்பின் மேன்மையை உணர்ந்து அதன்படி வாழ முற்படுவர்.
- குடும்ப உறவுகளின் மேன்மையை அறிந்து பெண்ணிற்கு மதிப்பளிக்க கற்றுக் கொள்வர்
வலுவூட்டல்:
- பாடப்பகுதியில் வினாக்கள் கேட்டு சிறப்பாக விடையளிக்கும் மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டுதல்.
மதிப்பீடு:
"எளிய சிந்தனை வினா..
- குடும்பம் என்ற சொல் முதன் முதலில் பயின்று வரும் நூல் எது?
- சிலம்பு கழி நோன்பு பற்றி கூறும் நூல் எது?
நடுத்தர சிந்தனை வினா
- புக்கில், தன்மனை விளக்குக
- மணந்தகம் என்றால் என்ன?
உயர் சிந்தனை:
- பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியை இன்றைய கூட்டுக் குடும்பம் விளக்கம் எழுதுக
குறைதீர்க்கற்றல் :
- மாணவர்களிடம் வினாக்கள் கேட்டு பதில் அளிக்க தடுமாறும் பகுதியை மீண்டும் ஒரு முறை விளக்கி கூறுதல்.
தொடர் பணி :
- கூட்டுக்குடும்பம் தனிக் குடும்பம் குறித்த உங்களது கருத்துகளை தொகுத்து எழுதுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக