தொல்காப்பியம்

 பா வகைகள் 

தொல்காப்பியம்*

*வினா/விடைகள்:*


1. முழுமையாகக் கிடைத்த முதல் தமிழ் இலக்கண நூல் எது?

விடை:    தொல்காப்பியம்.

2. தொல்காப்பியத்தை இயற்றியவர் யார்?

விடை:    தொல்காப்பியர்.

3. தமிழில் உள்ள இலக்கண நூல்களுள் மிகப் பெரியது எது?

விடை:    தொல்காப்பியம்.

4.தொல்காப்பியம் எவ்விலக்கணத்தைக் கூறும் நூலாகும்?

விடை:    ஐந்திலக்கணத்தையும்.

5. ஐந்திலக்கணங்கள் யாவை?

விடை:

1. எழுத்து இலக்கணம்

2. சொல் இலக்கணம்

3. பொருள் இலக்கணம்

4. யாப்பு இலக்கணம்,

5. அணி இலக்கணம்.

6. தொல்காப்பியர் எவ்வூரில் வாழ்ந்தார் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்?

விடை:    காப்பிக்காடு.

7. காப்பிக்காட்டின் முற்காலப் பெயர் என்ன?

விடை:    காப்பியக்காடு.

8. காப்பிக்காடு {அ} காப்பியக்காடு எந்த மாவட்டத்தில் உள்ளது?

விடை:    கன்னியாகுமரி மாவட்டத்தில்.

9. தொல்காப்பியத்திற்குச் சிறப்புப் பாயிரம் இயற்றியவர் யார்?

விடை:    பணம்பாரனார்.

10. பணம்பாரனார் இயற்றிய சிறப்புப் பாயிரப் பாடலின் அடி எண்ணிக்கை எவ்வளவு?

விடை:    பதினைந்து.

11. பணம்பாரனார் எவ்வூரில் வாழ்ந்தார் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்?

விடை:    பனம்பழஞ்சி.

12. பணம்பாரனார் காலத்தில் தமிழ்நாட்டின் வடக்கு, தெற்கு எல்லைகள் எவை?

விடை:    வடக்கு – வேங்கடமலை, தெற்கு – குமரிமலை.

13. வேங்கடமலையின் தற்போதைய பெயர் யாது?

விடை:    திருப்பதி.

14. தொல்காப்பியர் எம்மன்னன் அவையில் தொல்காப்பியத்தை அரங்கேற்றம் செய்தார்?

விடை:    பாண்டிய மன்னனின்.

15. தொல்காப்பியர் யார் தலைமையில் தொல்காப்பியத்தை அரங்கேற்றம் செய்தார்?

விடை:    அதங்கோட்டாசான்.

16. அதங்கோட்டாசான் எவ்வூரில் வாழ்ந்தார் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்?

விடை:    அதங்கோடு.

17. பனம்பழஞ்சி, அதங்கோடு ஆகிய ஊர்கள் எந்த மாவட்டத்தில் உள்ளன?

விடை:    கன்னியாகுமரி மாவட்டத்தில்.

18. ஐந்திரம் எம்மொழி இலக்கண நூல்?

விடை:    வடமொழி.

19, ஐந்திரம் என்னும் நூலை இயற்றியவர் யார்?

விடை:    ஐந்திரன்.

20. தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

விடை:    ஆயிரத்து அறுநூற்று இரண்டு.

21. தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

விடை:    மூன்று.

22. தொல்காப்பிய அதிகாரங்களின் பெயர்கள் யாவை?

விடை:

1. எழுத்ததிகாரம்

2. சொல்லதிகாரம்

3. பொருளதிகாரம்.

23. தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள இயல்களின் எண்ணிக்கை எவ்வளவு?

விடை:    இருபத்தேழு.

24. தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் இடம்பெற்றுள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

விடை:    நானூற்று எண்பத்து மூன்று.

25.தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் இடம்பெற்றுள்ள இயல்களின் எண்ணிக்கை எவ்வளவு?

விடை:    ஒன்பது.

26. தொல்காப்பிய எழுத்ததிகார இயல்கள் யாவை?

விடை:

1. நூன்மரபு / நூல் மரபு

2. மொழிமரபு

3. பிறப்பியல்

4. புணரியல்

5. தொகைமரபியல்

6. உருபியல்

7. உயிர் மயங்கியல்

8. புள்ளி மயங்கியல்

9. குற்றியலுகரப் புணரியல்.

27. தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் இடம்பெற்றுள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

விடை:    நானூற்று அறுபத்து மூன்று.

28. தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் இடம்பெற்றுள்ள இயல்களின் எண்ணிக்கை எவ்வளவு?

விடை:    ஒன்பது.

29. தொல்காப்பியச் சொல்லதிகார இயல்கள் யாவை?

விடை:

1. கிளவியாக்கம்

2. வேற்றுமையியல்

3. வேற்றுமை மயங்கியல்

4. விளி மரபு

5. பெயரியல்

6. வினையியல்

7. இடையியல்

8. உரியியல்

9. எச்சவியல்.

30. தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

விடை:    அறுநூற்று ஐம்பத்தாறு.

31. தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள இயல்களின் எண்ணிக்கை எவ்வளவு?

விடை:    ஒன்பது.

32. தொல்காப்பியப் பொருளதிகார இயல்கள் யாவை?

விடை:

1. அகத்திணையியல்

2. புறத்திணையியல்

3. களவியல்

4. கற்பியல்

5. பொருளியல்

6. மெய்ப்பாட்டியல்

7. உவமையியல்

8. செய்யுளியல்

9. மரபியல்.

33. தொல்காப்பியத்தில் எழுத்து இலக்கணத்தைக் கூறும் பகுதி எது?

விடை:    எழுத்ததிகாரம்.

34. தொல்காப்பியத்தில் சொல் இலக்கணத்தைக் கூறும் பகுதி எது?

விடை:    சொல்லதிகாரம்.

35. தொல்காப்பியத்தில் பொருள் இலக்கணத்தைக் கூறும் இயல்கள் யாவை?

விடை:    அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல்,

மெய்ப்பாட்டியல், மரபியல்.

36. தொல்காப்பியத்தில் யாப்பு இலக்கணத்தைக் கூறும் இயல் எது?

விடை:    செய்யுளியல்.

37. தொல்காப்பியத்தில் அணி இலக்கணத்தைக் கூறும் இயல் எது?

விடை:    உவமையியல்.

38. நூற்பா எண்ணிக்கை அடிப்படையில் தொல்காப்பியத்தில் மிகச் சிறிய இயல் எது?

விடை:    எழுத்ததிகாரம் / பிறப்பியல் / இருபத்தொன்று நூற்பாக்கள்.

39. நூற்பா எண்ணிக்கை அடிப்படையில் தொல்காப்பியத்தில் மிகப் பெரிய இயல் எது?

விடை:    பொருளதிகாரம் / செய்யுளியல் / இருநூற்று முப்பத்தைந்து நூற்பாக்கள்.

40. தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவர் யார்?

விடை:    இளம்பூரனர்.

41. தொல்காப்பியத்திற்கு முதலில் உரை செய்தவர் யார்?

விடை:    இளம்பூரனர்.

42. நச்சினார்க்கினியர் தொல்காப்பியத்தின் எவ்வியல்களுக்கு மட்டும் உரை செய்யவில்லை?

விடை:    மெய்ப்பாட்டியல், உவமையியல், மரபியல்.

43. தொல்காப்பிய செய்யுளியலுக்கு நச்சினார்க்கினியர் செய்த உரை முழுமையாகக் கிடைத்துள்ளதா?

விடை:  சில பகுதிக்குக் கிடைக்கவில்லை.

44. தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு மட்டும் உரை செய்தவர்கள் யாவர்?

விடை:    சேனாவரையர், தெய்வச் சிலையார், கல்லாடர்.

45. கல்லாடர் செய்த உரையில் தற்பொழுது எதுவரை கிடைத்துள்ளது?

விடை:   இடையியல் பதிமூன்றாம் நூற்பா வரை.

46. தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கு மட்டும் உரை செய்தவர் யார்?

விடை: பேராசிரியர்.

47. தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்குப் பேராசிரியர் செய்த உரையுள், எவ்வியல்களுக்கான உரை மட்டும் தற்பொழுது கிடைத்துள்ளது?

விடை    மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல்.

48. தொல்காப்பியம் ‘தமிழர்களின் உயிர் நூல்’ என்று கூறியவர் யார்?

விடை:    வ.சுப.மாணிக்கனார்.

சிற்றலை 3 அடி பேரெல்லை ஆயிரம் அடி ஆசிரியப்பாவின் அளவிற்கு ஆ ஆசிரியப்பாவின் அளவிற்கு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெற்றி நமதே

வெற்றி நமதே முதுகலை ஆசிரியர் தேர்வு TET,TNPSC Loading…