நாள் : 27-.07.26 முதல் 01.08.26.
வகுப்பு : மேல்நிலை முதலாம் ஆண்டு
பாடம் : தமிழ்
பாடவேளை :4
தலைப்பு: இயல் 2 இயற்கை வேளாண்மை சுற்றுச்சூழல்
இலக்கணம் :புணர்ச்சி விதிகள்
கற்றல் நோக்கம்
- மொழியை தவறின்றி கையாளுதல், பாடல்களைப் பொருள் உணர்ந்து பிரித்தறிதல் ஆகிய படிநிலைகளை அறிதல்
துணைக்கருவிகள்
- பயிற்சி வினாத்தாள்
ஆர்வமூட்டல் :
- நிலைமொழி வருமொழி என்றால் என்ன?
- செம்மொழி இச்சொல்லை பிரிக்கும் முறை எதையாது இதில் இருக்கக்கூடிய முதல் எழுத்து ஈற்றெழுத்து யாது?
இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்:
கற்பித்தல் செயல்பாடுகள்.
- சொற்புணர்ச்சியின்போது நிலைமொழி இறுதியிலும் வருமொழி முதலிலும் ஏற்படும் மாற்றங்களைச் சுருங்கச் சொல்லும் வரையறைகளைப் புணர்ச்சி விதிகள் என்பர். மொழியைப் பிழையின்றிக் கையாளவும் பாடலடிகளைப் பொருள் உணர்வுக்கு ஏற்ற வகையில் பிரித்தறியவும் மொழி ஆளுமையைப் புரிந்துகொள்ளவும் இப்புணர்ச்சி விதிகள் பயன்படுகின்றன.
- உடன்படு மெய்ப் புணர்ச்சி, குற்றியலுகரப் புணர்ச்சி, முற்றியலுகரப் புணர்ச்சி, இயல்பீறு விதி ஈறு புணர்ச்சி, பூப்பெயர்ப் புணர்ச்சி, மெய்யீற்றுப் புணர்ச்சி, தனிக்குறில் முன் ஒற்று புணர்ச்சி, பண்புப் பெயர் புணர்ச்சி மகர ஈற்றுப் புணர்ச்சி ஆகியவற்றைப் பாடம் வழி விளக்குதல்
கற்றல் செயல்பாடுகள்
- சொற்களைப் பிரிக்கும் முறையை அறிந்து கொள்வர்
- பாடப்பகுதியில் இடம் பெற்று இருக்கும் புணர்ச்சி விதி குரிய சொற்களை எடுத்து அதை எவ்வகை புணர்ச்சி என்பதை வகுப்பறையில் விவாதித்தல்
கற்றல் விளைவுகள்:
- சொற்கள் பிரியும் முறையை அறிந்து கொள்வர்
- சொற்களைப் பிரிக்கும் போது ஏற்படும் மாற்றத்தை வைத்து அதில் எந்த வகையான விதிகள் வரவேண்டும் என்று அறிந்து பயன்படுத்தக் கற்றுக் கொள்வர்
வலுவூட்டல்:
- சில சொற்களைக் எழுதி அதற்கு சரியான முறையில் புணர்ச்சி விதி கூறும் மாணவர்களைப் பாராட்டிப் பரிசளித்தல்
மதிப்பீடு:
"எளிய சிந்தனை வினா..
- புணர்ச்சி என்றால் என்ன?
- அருவினை புணர்ச்சி விதி தருக
நடுத்தர சிந்தனை வினா
- குற்றியலுகரப் புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக
- புலனறிவு, வெற்றிலை, திரைப்படம் புணர்ச்சி விதி தந்து விளக்குக
1. உயர் சிந்தனை வினா
- விதி வேறுபாடறிந்து விளக்குக
- தன்னொற்றிரட்டல் தனி குறில் முன் ஒற்று உயிர் வரின் இரட்டும்
குறைதீர்க்கற்றல் :
- சில சொற்களை கொடுத்து புணர்ச்சி விதி கூறச்சொல்லி தடுமாறும் பகுதியை மீண்டும் ஒரு முறை கற்பித்தல்
தொடர் பணி :
- பாடப்பகுதியில் இடம் பெற்று இருக்கும் சில சொற்களை எழுதி அதற்கான புணர்ச்சி விதிகளையும் எழுதி வருக
யா.ஃப்ரீடா, M.A, MA, M.A, M.Ed, M..Phil ,முதுகலை தமிழாசிரியை,அரசு மேல்நிலைப்பள்ளி அயன் குறும்பலாப்பேரி தென்காசி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக