புதன், 5 ஆகஸ்ட், 2026

விருந்தினர் இல்லம், கம்பராமாயணம் வகுப்பு 12

நாள்                 : 10.08.26 முதல் 14.08.26.


வகுப்பு            :மேல்நிலை இரண்டாம் ஆண்டு


பாடம்                 :தமிழ்


பாடவேளை     :4


தலைப்பு            :செய்யுள்

                                சுற்றத்தார் கண்ணே உள

                                விருந்தினர் இல்லம், கம்பராமாயணம்


கற்றல் நோக்கம்

  • இலக்கியத்தில் உறைந்துள்ள

நல்லொழுக்கத்தினை மொழிவழியாகப்
புரிந்து பின்பற்றும் மனப்பாங்கினை வளர்த்தல்.
  • தமிழர்க்கே உரிய பண்பாட்டுக் கூறுகளைக் காப்பியம்வழிப்
படித்துணர்ந்து பெருமிதம் கொள்ளுதல்; பின்பற்றுதல்.

துணைக்கருவிகள்

  • விரைவு குறியீட்டு காட்சிகள், விளக்க பட அட்டைகள்,


ஆர்வமூட்டல்:

  • விடுமுறையில் நீ எங்கு செல்வாய்?
  • உறவினர் வீட்டிற்கு நீ செல்லும் போது இங்கு நடக்கும்
நிகழ்வுகளை கூறு

  • உனக்குத் தெரிந்த காவியங்கள் சிலவற்றைக் கூறும்

  • இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்:


கற்பித்தல் செயல்பாடுகள்


  • இன்பம் துன்பம், வேண்டியது வேண்டாதது எல்லாமே நாம் விரும்பியும் விரும்பாமலும் நம்மை வந்தடைகின்றன. அவற்றை வேறுபடுத்தாமல் ஏற்றுக்கொண்டு அவற்றிலிருந்து வேண்டியதைக் கற்றுக்கொள்வதே நன்று. எல்லாவற்றிலிருந்தும் நல்லவற்றைக் கற்றுக்கொள்ளும் பண்பாடு வளர வேண்டும்.ஓர் ஆனந்தம் சற்று மனச்சோர்வு சிறிது அற்பத்தனம் விழிப்புணர்வு எதிர்பாராத விருந்தாளிகளாக அவ்வப்போது வந்துசெல்லும்.என்பதை பாடல் வழி விளக்குதல்.

கம்பராமயானம்


யாவரும் கேளிர் என்பது தமிழர் நற்பண்பின் வளர்ச்சி,
சிறியோரை இகழ்தல் இலமே என்பது அந்நற்பண்பின்
மலர்ச்சி, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது
அவ்வுயிர்ப்பண்பின் முதிர்ச்சி; காக்கை குருவி
எங்கள் ஜாதி என்பது அத்தமிழ்ப்பண்பின் தொடர்ச்சி.
கம்பனின் காவியம் இராமனை  இப்பண்பின் படிமமாகப்
படைத்திருப்பது உயர்ச்சி. தந்தை தாய் மீதான அன்பு,
உடன் பிறப்பியம் ஆகியவற்றை, எல்லைகள் அனைத்தையும்
கடந்து இராமன் விரிவுபடுத்துகிறான். வேடன், பறவை,
எளிய முதியவள், வானரம், எதிரியின் தம்பி என்ற வேலிகள்
அவன் அன்பிற்கு இல்லை.அனைவரையும் குடும்பமாக
எண்ணி பண்பின் படிமமாக விளங்கும் ராமன் பற்றி
பாடப்பாகுதி வழி விளக்குதல்.

கற்றல் செயல்பாடுகள் 

 செய்யுளைச் சீர் பிரித்து வாசித்தல், கம்பராமாயணம்
கூறும் அன்பின் வழி உறவின் வலிமையை அறிதல் 
  • வாழ்வில் ஏற்படும் ஆனந்தம், சோர்வு, விழிப்புணர்வு

எல்லாம்வந்து வந்து போகும் இதை வரவேற்று
நன்றி செலுத்த வேண்டும்.

கற்றல் விளைவுகள் 

  • வாழ்வில் ஏற்படும் வஞ்சனை, அவமானம்,
மனச்சோர்வு எல்லாவற்றையும் நன்றி செலுத்தி வரவேற்க
கற்றுக்கொள்வர்
  • எளிய மக்களிடமும் அன்புக்காட்டக் கற்றுக்கொள்வர்.

  • புணர்ச்சி விதி பகுபத உறுப்பிலக்கணம்

பகுதிகளை மீண்டும் ஒருமுறை விளக்குதல்
  • பாடப்பகுதியில் வினாக்கள் கேட்டு சிறப்பாக

  • விடையளிக்கும் மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டுதல்.


மதிப்பீடு:  

"எளிய சிந்தனை வினா


       1.கம்பராமாயணத்தில் உள்ள    காண்டங்கள்.....

       2. விருந்து என்பதன் பொருள் என்ன

   நடுத்தர சிந்தனை வினா

    1.ராமனுக்கும் சுக்ரீவனுக்கும் நடந்த 

உரையாடலைக் கூறு. 

   2.நாகூர் ரூமி எவற்றை வாயிலுக்கே சென்று

வரவேற்க வேண்டும் என்று கூறிகிறார்? 

உயர் சிந்தனை வினா 


 1.குகனோடு ஜவராகி விடணனோடு எழுவரான

நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டுக

  

  2.வருபவர் எவராயினும் நன்றி செலுத்து"

இடம் சுட்டிப் பொருள் விளக்குக.


குறைதீர்க்கற்றல்    

  • மாணவர்களிடம் வினாக்கள் கேட்டு பதில்
அளிக்க  தடுமாறும் பகுதியை மீண்டும் ஒரு முறை 

          விளக்கி கூறுதல்.

தொடர் பணி

  • உங்கள் மனம் கவர்ந்த கம்பராமாயண பாத்திரம் யார்?

ஏன் ?

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

காவடிச்சிந்து, குறுந்தொகை தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

 நாள்                          :  10.08.26 முதல் 14.08.26.

வகுப்பு                     : மேல்நிலை முதலாம் ஆண்டு 
பாடம்                       : தமிழ்
 பாடவேளை          :4
தலைப்பு                 : இயல் 3 
 செய்யுள்               : காவடிச் சிந்து, குறுந்தொகை


கற்றல் நோக்கம்

  • இலக்கியங்கள்வழி தமிழர் பண்பாட்டுக்கூறுகளை அறிந்து தமதாக்கிக்கொண்டு வாழ்தல்.
  • வீட்டிலும் சமூகத்திலும் பின்பற்றப்படும் பண்பாட்டு நிகழ்வுகளைப் போற்றிப் பின்பற்றுதல்.


 




துணைக்கருவிகள்
  • காணொளி, விளக்கப்பட அட்டைகள்


ஆர்வமூட்டல் : 
  •  கோயில்களில் உள்ள வேண்டுதல்கள் சிலவற்றைக் கூறு 
  •  எட்டுத்தொகை நூல்கள் யாவை
  •  எட்டுத்தொகை நூல்களில் அக நூல்களைக் கூறு
இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்:


கற்பித்தல் செயல்பாடுகள்


  • காவடி எடுத்தல் தமிழ்ப் பண்பாட்டுக்கூறுகளுள் ஒன்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் குன்றுதோறும் வீற்றிருக்கும் முருகன் கோவில்களில் காவடி எடுத்து ஆடுவது வழக்கமாக உள்ளது. காவடி தூக்கிச் செல்வோர், அதைச் சுமையாக உணராமல் இருக்கப் பாடியவாறே செல்வதற்குப் புலவர்கள் வழிநடைப் பாடல்களை இயற்றியுள்ளனர்.இதை பாடல் வழி விளக்குதல்










குறுந்தொகை

  • அன்பும் அறனும் விளையும் திருமண வாழ்வைத் தலைவி விரும்புகிறாள். இரு மனம் இணையும் திருமணத்தை உறுதிசெய்ய இரு வீட்டாரும் முனைகின்றனர். இதனை, அகத்திணை இலக்கணத்தின் இலக்கியமாய் விளங்கும் குறுந்தொகைப் பாடல் ஒன்று காட்சிப்படுத்துவதைப் பாடல் வழி விளக்குதல்.


கற்றல் செயல்பாடுகள்
  • செய்யுளைச் சீர்ப்பிரித்து வாசித்தல் .கோயில்களில் நடைபெறும் வேண்டுதல்கள் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுதல் 


கற்றல் விளைவுகள்:
  •  வழிநடை பாடலின் மேன்மையை அறிந்து நம் முன்னோர்கள் பின்பற்றினர் என்பதை அறிந்து பின்பற்ற கொள்வர்
  •  நம் முன்னோர்களின் அகப்புற வாழ்வைப் பற்றி அறிந்து வாழ கற்றுக் கொள்வர் 


வலுவூட்டல்:
  •  பாடப்பகுதியில் இடம்பெற்றிருக்கும் முக்கிய சொற்களுக்கு விளக்கம் கூறுதல் 
  •  படப்பகுதியில் சில வினாக்கள் கேட்டு சிறப்பாக விடை அளிக்கும் மாணவர்களைப் பாராட்டி பரிசளித்தல் 
 
மதிப்பீடு:
"எளிய சிந்தனை வினா..
  •  காவடிச்சிந்துக்குத் தந்தை யார்?
  •  குறுந்தொகை…… நூல் 
 நடுத்தர சிந்தனை வினா
  •  காவடிச்சிந்து என்பது யாது?
  •  வெள்ளிவீதியார் சங்கத்தொகை நூல்களில் எத்தனை பாடல்கள் பாடியுள்ளார்?
1. உயர் சிந்தனை வினா
  •  சங்க காலத்தில் நடைபெற்ற சமூக நிகழ்வுடன் இக்கால சமூக நிகழ்வுகளைப் பொருத்தி ஒப்பிட்டு எழுதுக 
குறைதீர்க்கற்றல் :
  •  மாணவர்கள் புரிந்து கொள்ளாத சில பகுதிகளை மீண்டும் ஒரு முறை கற்பித்தல்.
தொடர் பணி
  •  எந்தெந்த நாடுகளில் காவடியாட்டம் இன்றளவும் நிகழ்த்தப்படுகிறது அதற்கான காரணங்களை திரட்டுக.
  •  திருமணங்களில் மணக்கொடை கேட்பது குற்றமா விவாதிக்க.