ஞாயிறு, 30 நவம்பர், 2025

வகுப்பு :12 அகமதிப்பீடு தேர்வு

 வகுப்பு :12 

அகமதிப்பீடு தேர்வு 

DOWNLOAD PDF

வகுப்பு :11 அகமதிப்பீடு தேர்வு

 வகுப்பு :11 

அகமதிப்பீடு தேர்வு 

Download pdf

வகுப்பு :11 அரையாண்டு மாதிரி தேர்வு

 வகுப்பு :11 

அரையாண்டு மாதிரி தேர்வு 

Download PDF


வகுப்பு ;12 அரையாண்டு மாதிரி தேர்வு:2

                          வகுப்பு :12

 அரையாண்டு மாதிரி தேர்வு:2

DOWNLOAD PDF

வகுப்பு :12 அரையாண்டு மாதிரி தேர்வு:1

                                              

     வகுப்பு :12

அரையாண்டுமாதிரித்தேர்வு:1
DOWNLOAD PDF

புதன், 26 நவம்பர், 2025

டிசம்பர் முதல் வார தமிழ் மாதிரி பாடக் குறிப்பு வகுப்பு :11

நாள்              : 01:12:2025 முதல் 05:12:25

பாடம்             :தமிழ்

தலைப்பு      : அயல் நாட்டவரின் அருந்தமிழ் பணி மெய்ப்பு திருத்த குறியீடு 

வகுப்பு         : மேல்நிலை முதலாம் ஆண்டு 

கற்றல் நோக்கம் 

  • தமிழ்மொழியால் ஈர்க்கப்பட்டு, அதன் சிறப்புகளை உலகமெலாம் கொண்டுசென்ற அறிஞர்களின் அரும்பணிகளைப் போற்றல்.
  • பிழையின்றி எழுதுவதற்கும் பிழைகளைத் திருத்தி எழுதுவதற்கும் பயிற்சி பெறுதல்.

கற்பித்தல் துணைக்கருவிகள் 

  •  விளக்கப்படம் இணைய வளங்கள் 

ஆர்வமூட்டல்

  • தமிழின் பெருமையை கூறு.
  •  தமிழ் வளர்த்த சான்றோர் சிலரைக் கூறு.
  •  பிழை திருத்தம் செய்யும் பணிகள் சிலவற்றை கூறு.
  •  இது போன்ற வினாக்கள் கேட்டு ஆர்வமுறச் செய்தல். 

கற்பித்தல் செயல்பாடு

  • இலக்கிய வளமும் இலக்கண ஆழமும் கொண்ட மொழிகளுள் ஒன்று தமிழ்மொழி. நம் மொழிக்கு காலந்தோறும் அளப்பரிய தொண்டுகளைச் செய்தவர்கள் பலர். இவர்களுள் சிலர் தமிழ்நாட்டிற்கு வருகைதந்து, காலத்தால் அழியாத தலைசிறந்த தமிழ்ப் பணிகளைச் செய்துள்ளனர். மேலும், அயலகத்தில் வாழும் நம் தமிழ் உறவுகளும் அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றியுள்ளனர் என்பதை விளக்குதல்
மெய்ப்பு திருத்தக்குறியீடு
  • எதிர்காலத்தில் மாணவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வகையில் அமையும். தமிழ்மொழியைக் கற்பதோடு நில்லாமல் தமிழ்சார்ந்த பிற பணிகளிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். இந்நிலையில் அச்சுப்படித் திருத்தக் குறியீடுகளை அறிந்து பிழைத்திருத்தம் செய்யும் இப்பயிற்சியானது மாணவர்களின் வேலைவாய்ப்பிற்கு உதவும் என்பதை விளக்குதல்.

கற்றல் செயல்பாடு 

  • விரிவானம் பகுதியை வாசித்தல்
  •  குறியீடுகளையும் அதற்குரிய குறியீட்டு பொருளையும் எழுதி பயிற்சி எடுத்தல் 

கற்றல் விளைவு

  •  அயல் நாட்டவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டை அறிந்து நாமும் தமிழை வளர்க்க முற்பட வேண்டும் என்று கற்றுக் கொள்வர் 
  •  மெய்ப்பு திருத்தக் குறியீடுகளை அறிந்து  எளிய முறையில் பிழை திருத்தம் செய்ய கற்றுக் கொள்வர் 

குறைதீர்க் கற்றல் 

  •  சில வினாக்கள் கேட்டு விடையளிக்க தடுமாறும் பகுதியை மீண்டும் ஒருமுறை விளக்குதல் 

 வலுவூட்டல்

  • பாடப்பகுதியில் சில வினாக்கள் கேட்டு சிறப்பாக பதிலளிக்கும் மாணவர்களைப் பாராட்டுதல்.

மதிப்பீடு

எசிவி

  •  ஜி யு போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த தமிழ் நூல்கள்......
  •   முதன் முதலில் அச்சான இந்திய மொழி....

நசிவி

  •  அயல் நாட்டவர்கள் எழுதிய நூல்கள் சிலவற்றைக் கூறு 
  •  மெய்ப்பு திருத்த குறியீடுகளின் வகைகளைக் கூறு 

உசிவி

  •  அயல் நாட்டவர்களின் அருந்தமிழ் பணியைத் தொகுத்து எழுதுக.
  •  மெய்ப்பு திருத்த குறியீடுகளின் வகைகளுடன் குறியீட்டுப் பொருளையும் விளக்குக. 

தொடர்பணி

  •  உங்கள் பள்ளி நூலகத்தில் இடம் பெற்று இருக்கக்கூடிய அயல் நாட்டவர்களின் நூல்களைப் பட்டியலிடுக 


வகுப்பு :12 மாதிரி பாடக்குறிப்பு டிசம்பர் முதல் வாரம்

நாள்         : 01:12:2025 முதல் 5.12.25

பாடம்         :தமிழ்

தலைப்பு  : கோடை மழை, தொன்மம்

வகுப்பு      : மேல்நிலை இரண்டாம் ஆண்டு

கற்றல் நோக்கம் 

  • சிறுகதையின் வாயிலாக வெளிப்படுத்தப்படும் மனிதநேயத்தை உணர்ந்து படைப்பாக்கத் திறன் பெறுதல்.
  • தொன்மங்களைப் பற்றிப் படித்தறிந்து படைப்புகளில் பயன்படுத்தும் திறன் பெறுதல்.

கற்பித்தல் துணைக்கருவிகள் 

  • விளக்கப்படம், இணைய வளங்கள்

ஆர்வமூட்டல்

  • பருவக்காலங்கள் எவை?
  • பழமை என்றால் என்ன?
  • இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்

கற்பித்தல் செயல்பாடு

  • குழந்தைகள் பெற்றோரால் கொண்டாடப்படுகிறார்கள். ஆனால், தாய் தந்தை இல்லாத ஏதிலிக் குழந்தைகளின் நிலை மிகக் கொடியதாகும். அக்குழந்தைகளை ஏற்று வளர்க்கும் மனிதப் பண்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பிள்ளைகள் இல்லாத முதியோர்களும் இத்தகைய ஏதிலி நிலையில் தவிப்பவர்கள்தான். அவர்களையும் ஏற்று அரவணைப்பவர்கள் மனிதத்தை மேம்படுத்துபவர்களே என்பதை கதை வழி விளக்குதல்
தொன்மம்
  • தொன்மம் (myth) என்றால் பழங்கதை, புராணம் என்றெல்லாம் பொருள் உள்ளது. தொல்காப்பியர் குறிப்பிடும் வனப்புகளுள் 'தொன்மை' என்பதுவும் ஒன்றாகும். காலம்காலமாக உருவாக்கப்பட்டு இறுகிவிட்ட கருத்து வடிவங்களும் தொன்மங்களே. தொன்மம் என்னும் சொல் இவை அனைத்தையும் குறிக்கும். ஆனால், கவிதையில் அது பழங்கதையைத் (புராணத்தை) துணையாகக் கொண்டு ஒரு கருத்தை விளக்குவதையே குறிக்கிறது.


கற்றல் செயல்பாடு 

  • கதைபகுதியை வாசித்தல்
  • தொன்மம் வெளிப்படும் தொடர்கள் சிலவற்றை வகுப்பில் கலந்துரையாடுதல்.

கற்றல் விளைவு

  • மனிதநேயத்தோடு நடக்க கற்றுக்கொள்வர்
  •  கதையின் கருப்பொருளை அறிந்து வாசிக்க முற்படுவர்

குறைதீர்க் கற்றல் 

  •  கருப்பொருள் மாறாமல் கதையை மீண்டும் ஒருமுறை சுருக்கி கூறுதல். 
  •  சில வினாக்கள் கேட்டு விடை அளிக்க தடுமாறும் பகுதியை மீண்டும் ஒருமுறை விளக்குதல் 

 வலுவூட்டல்

  • பாடப்பகுதியில் சில வினாக்கள் கேட்டு சிறப்பாக பதிலளிக்கும் மாணவர்களைப் பாராட்டுதல்.

மதிப்பீடு

எசிவி

  • 1. கோடை மழை கதை வெளிவந்த இதழ் எது?
  • 2. ஜெயமோகன் கதையில் இடம்பெறும் தொன்மம் எது?

நசிவி

  •   சாந்தாதத் குறிப்பு வரைக
  •  தொன்மம் என்றால் என்ன?

உசிவி

  •  கோடை மழை கதையில் வெளிப்படும் மனிதநேய பண்புகளை விளக்குக.
  •  தொன்மம் அடிப்படையில் எழுதப்பட்ட கதைகளையும் கதை ஆசிரியர்களையும் குறிப்பிடு 


தொடர்பணி

  •  பொதுவெளியில் நீ கண்டு களித்த மனிதநேய நிகழ்வை வகுப்பறையில் பகிர்க.





திங்கள், 24 நவம்பர், 2025

வகுப்பு :12 இயல் :6

 வகுப்பு :12

இயல் :6

மதிப்பெண் :50

பதிவிறக்கு /DOWNLOAD


வகுப்பு :12 இயல் :5 மதிப்பெண் :50

 வகுப்பு :12

இயல் :5

மதிப்பெண் :50

பதிவிறக்கு /DOWNLOAD

இயல்:6 வகுப்பு:11 மதிப்பெண்:50

 இயல்:6

வகுப்பு:11

மதிப்பெண்:50

பதிவிறக்கு /DOWNLOAD

இயல் தேர்வு 5 வகுப்பு :11

 வகுப்பு :11

இயல். 5

மதிப்பெண் :50

பதிவிறக்கு /DOWNLOAD

இடைப்பருவத் தேர்வு வகுப்பு :11

 தென்காசி மாவட்டம்

வகுப்பு:11

 இரண்டாம் இடைப்பருவ தேர்வு

 விடை குறிப்பு 


பதிவிறக்கு /DOWNLOAD


வியாழன், 20 நவம்பர், 2025

நவம்பர் 5 வது வாரம் தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு :11

 நாள் 

  • 24/11/25 முதல் 29/11/25

வகுப்பு 

  •  மேல்நிலை முதலாம் ஆண்டு 

பாடம் 

  • தமிழ்
  • தலைப்பு 
  • காற்றில் கலந்த பேரோசை,
  • புரட்சிக் கவி, அதிசய மலர்

கற்றல் நோக்கம் 

  • கருத்துகளைத் தொகுத்துக் கட்டுரையாக்கும் திறன் பெறல்.
  • கவிதையில் வெளிப்படுத்தப்படும் புரட்சிக் கருத்துகளின் நயம் அறிந்து சுவைத்தல்.
  • மீண்டெழும் ஒரு சமூகத்தின் மனவெழுச்சிகளைக் கவிதைகளாக வெளிப்படுத்தும் திறன் பெறுதல்.

கற்பித்தல் துணைக்கருவிகள் 

  •  விளக்கப்பட அட்டைகள் இணைய வளங்கள் 

ஆர்வமூட்டல்

  •  உனக்குத் தெரிந்த பேச்சாளர்கள் சிலரை குறிப்பிடு
  •  இக்கால காப்பியங்கள் சிலவற்றை கூறு 
  •  புலம்பெயர்தல் என்றால் என்ன 
  •  இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல் 

கற்பித்தல் செயல்பாடு

  •  அரசியல் சிந்தனையிலும் பொதுவுடைமை சிந்தனையிலும் கூர்வாளாய் மெருகேற்றிக் கொண்டவர் ஜீவா என்று அழைக்கப்படும் ஜீவானந்தம் இவர் தொடக்கத்தில் காந்தியவாதியாகவும் பிறகு சுயமரியாதை இயக்க போராளியாகவும் பொதுவுடமை இயக்கத் தலைவராகவும் செயல்பட்டவர். சிறந்த தமிழ் பற்றாளர் எளிமையின் அடையாளமாக திகழ்ந்தவர். சிறந்த பேச்சாளர். மேடையில் வாழ்ந்த மனிதர் நெஞ்சோடு வளர்ந்த கனவு கொள்கையும் நம்பிக்கையும், பேச்சு நடை, இரண்டு கைப்பிடி விஷயங்கள், பசுமையான எண்ணங்கள், ஆற்றில் விழுந்த இலை போன்ற தலைப்புகளை விளக்குதல்.
புரட்சிக்கவி
  •  மக்களாட்சிக்கு முன்பு வரை சட்டம், நிருவாகம், நீதி ஆகியவை அரசனிடம் குவிந்து இருந்தன. இந்நிலை சிறிது சிறிதாக மக்கள் புரட்சியால் மாற்றப்பட்டு தற்பொழுது மக்களாட்சி முறை பல்வேறு நாடுகளில் மலர்ந்து உள்ளது.. அப்படி புரட்சியில் ஈடுபட்ட ஒரு புரட்சிக்கவி பற்றி விளக்குதல்.
அதிசயமலர்
  •  குண்டு மழை பொழிந்து நிலங்கள் அளிக்கப்பட்டு,மனிதர்கள் சிதறி ஓட,அழிக்கப்பட்ட தாய் மண்ணில் பூ ஒன்று மலர்கிறது. அந்தப் பூவின் புன்னகை நாடு பற்றிய நம்பிக்கையைச் சிதறிய மனிதரிடையே பரப்புகிறது என்பதை கவிதை வழி விளக்குதல்

கற்றல் செயல்பாடு 

  •  மேடைப் பேச்சாளர்கள் குறித்து கலந்துரையாடுதல் 
  •  இன்றைய சூழலில் தேவைப்படும் புரட்சி சிந்தனைகள் குறித்து கலந்துரையாடுதல் 
  •  புலம்பெயர்தலால் ஏற்படும் தாக்கம் குறித்து கலந்துரையாடுதல் 

கற்றல் விளைவு

  •  சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் பண்பைக் கற்றுக் கொள்வர்.
  •  அநீதி நடைபெறும் போது அதை தட்டிக் கேட்க கற்றுக் கொள்வர். 
  •  போரினால் ஏற்படும் விளைவுகளை உணர்ந்து வன்முறை தவிர்க்கக் கற்றுக் கொள்வர்.

குறைதீர்க் கற்றல் 

  •  சில வினாக்கள் கேட்டு விடை அளிக்க தடுமாறும் பகுதியை மீண்டும் ஒருமுறை விளக்குதல் 

 வலுவூட்டல்

  • பாடப்பகுதியில் சில வினாக்கள் கேட்டு சிறப்பாக பதிலளிக்கும் மாணவர்களைப் பாராட்டுதல்.

மதிப்பீடு

எசிவி

  •  காற்றில் கலந்த பேரோசை யார் எழுதியது 
  •  புரட்சிக்கவி ஆசிரியர் யார் 
  •  அதிசய மலர் இடம்பெற்ற கவிதை தொகுப்பு எது 

நசிவி

  •  தமிழ் நதி குறிப்பு வரைக 
  •  பாரதிதாசன் குறிப்பு வரைக 
  •  ஜீவானந்தத்தின் பேச்சாற்றல் குறித்து கூறு.

 உசிவி

  • என் வாழ்வு என் கைகளில் என்று நம்பிய ஜீவானந்தத்தின் கருத்துகள் சிலவற்றை கூறு 
  •  புரட்சிக்கவி கதை சுருக்கத்தைக் கூறுக.
  •  அதிசய மலர் பூச்செடி எவ்வாறு முளைத்ததாக தமிழ் நதி கூறுகிறார் 

தொடர்பணி

  • நான் விரும்பும் நாட்டுக்குழைத்த தலைவர் மேடைப்பேச்சுகளை கேட்டு கருத்துரை தயாரிக்க.
  • பாரதிதாசனரின் புரட்சிக்கவி குறுங்காவியத்தை முழுமையாகப் படித்துச் சுவைத்து உங்கள் கருத்தைப் பதிவு செய்க.


புதன், 19 நவம்பர், 2025

நவம்பர் 5 வது வாரம் தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு :12

 நாள்           

   24/11/2025  முதல் 29/11/25

வகுப்பு 

  • மேல்நிலை இரண்டாம் ஆண்டு

பாடம் 

  • தமிழ்

தலைப்பு 

        இலக்கியத்தில் மேலாண்மை

        இரட்சணிய யாத்திரிகம்

        புறநானூறு

கற்றல் நோக்கம் 

  • இலக்கியத்தில் பயின்றுள்ள வாழ்க்கைக்கான மேலாண்மைக் கூறுகளையும் தலைமைப் பண்பிற்கான தகுதிகளையும் பகுத்தாய்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல்.
  • இலக்கியம் மற்றும் காப்பியங்களின் வழியாக வெளிப்படும் வாழ்வியல் கூறுகள் மற்றும் பண்புநலன்களைப் போற்றிப் பின்பற்றுதல்.

கற்பித்தல் துணைக்கருவிகள் 

இணைய வளங்கள், விளக்கப்படஅட்டைகள்

ஆர்வமூட்டல்

  • ஆளுமை என்றால் என்ன?
  • தேர்வைறையில் நாம் கடைப்பிடிக்க வேண்டியது எது?
  • உனக்கு தெரிந்த கடவுள் பெயரைக் கூறு.
  • தமிழரின் பண்டைய வாழ்வியலை அறிய உதவும் இலக்கியங்கள் சிலவற்றைக் கூறு
இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்.

கற்பித்தல் செயல்பாடு

  • இலக்கியம் நம் இதயத்தில் புதைந்து, எப்போது வேண்டுமானாலும் கிளர்ந்துவிடுகிற விதை. இலக்கியங்களில் மேலாண் கருத்துகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சொல்லப்பட்ட மேலாண் கருத்துகளையும் நிருவாக நெறிகளையும் நாம் அறியவேண்டும். ஏனெனில், நாட்டின் முன்னேற்றம் மேலாண் சிந்தனையில்தான் தொடங்குகிறது. மேலாண்மைத் துறையில் தமிழர் பழங்காலந்தொட்டே சிறந்து விளங்குகின்றனர்.நேர மேலாண்மை, வேளாண்மேலாண்மை, வணிகமேலாண்மை, நிருவாகமேலாண்மை, மேலான மேலாண்மை,ஆகியவற்றை பாடம் வழி விளக்குதல்.
இரட்சணிய யாத்திரிகம்
  • நிறைவான அன்பு, குறையாத ஆர்வம், தொடரும் நெகிழ்ச்சி, தொண்டில் மகிழ்ச்சி என்பன மனிதத்தின் இயல்புகள். இம்மனிதமே அனைத்துச் சமயங்களின் அடிப்படைக் கொள்கை. இக்கொள்கையை வாழ்வில் பல வதைகள் பட்டு வெளிப்படுத்தியவர், இயேசு பெருமானார்.என்பதை செய்யுள் வழி விளக்குதல்.
புறநானூறு
  • தமிழரின் வாழ்வியல் கருவூலமான புறநானூறு, வீரத்தையும் ஈரத்தையும் மட்டும் பேசாமல், வாழ்வின் விழுமியங்களையும் சேர்த்துப்பேசுகிறது. பிறர்க்கென வாழ்வதே பிறவிப்பயன் என்ற கருத்தினை விளக்கும் இப்பாடல், தமக்கென வாழா மனிதர்களைப் பற்றிப் பேசுகிறது.

கற்றல் செயல்பாடு 

  •  பாடப்பகுதியை வாசித்தல் 
  •  செய்யுளை சீர் பிரித்து வாசித்தல் 
  •  மேலாண்மை பண்புகள் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுதல்.

கற்றல் விளைவு

  •  மேலாண்மை பண்புகளை வளர்த்துக் கொள்ள முற்படுவர்.
  •  இயேசு பெருமானின் பொறுமையை வாழ்வில் கடைபிடிக்க கற்றுக் கொள்வர். 
  •  பிறருக்கு பகிர்ந்து உண்ணும் பண்பினைப் பெற்றுக் கொள்வர்.

குறைதீர்க் கற்றல் 

  •  சில வினாக்கள் கேட்டு விடை அளிக்க தடுமாறும் பகுதியை மீண்டும் ஒருமுறை விளக்குதல் 

 வலுவூட்டல்

  • பாடப்பகுதியில் சில வினாக்கள் கேட்டு சிறப்பாக பதிலளிக்கும் மாணவர்களைப் பாராட்டுதல்.

மதிப்பீடு

எசிவி

  •  ஏற்றுமதி இறக்குமதி நடைபெற்றதை கூறும் இலக்கியம் எது  
  • இரட்சணியயாத்திரிகம் யாருடைய படைப்பு?
  •  உண்டாலம்ம.....என தொடங்கும் புறநானூறு பாடலை எழுதியவர் யார்?

நசிவி

  •  நேர மேலாண்மைக்கு வள்ளுவர் காட்டும் உதாரணக் குறள் எது?  
  • எச் ஏ கிருட்டினனார் எழுதிய நூல்கள் சிலவற்றைக் கூறு.

உசிவி

  •  வேளாண் மேலாண்மை குறித்து நீவீர் பரிந்துரைப்பனவற்றை எழுதுக 
  •  இயேசு கிறிஸ்துவின் பாடுகள் பற்றி கூறு 
  •  பொதுவியல் திணை சான்றுடன் விளக்குக 

தொடர்பணி

  •  நேர மேலாண்மை குறித்து உன்னுடைய கருத்துகளைக் குறிப்பிடுக. 
  • பொறுத்தாரை உலகம் பொன் போல் போற்றும் இந்த தலைப்பில் கலந்துரையாடுக.