செவ்வாய், 24 ஜூன், 2025

வகுப்பு 11 தமிழ் மாதிரி பாட குறிப்பு ஜூலை முதல் வாரம்

 வகுப்பு 11 

தமிழ் மாதிரி பாட குறிப்பு 

ஜூலை முதல் வாரம்

பதிவிறக்கு /DOWNLOAD

நாள் : 29.06.25 முதல் 03.07.25.
வகுப்பு : மேல்நிலை முதலாமாண்டு 
பாடம் : தமிழ்
 பாடவேளை :4
தலைப்பு: இயல் 2 இயற்கை வேளாண்மை சுற்றுச்சூழல்
 உரைநடை: இயற்கை வேளாண்மை


கற்றல் நோக்கம்
*இயற்கை வேளாண்மை, நீர் மேலாண்மை இன்றியமையாமையை உணர்ந்து தம் சமூகப் பங்களிப்பை நல்குதல்

துணைக்கருவிகள்
மடிக்கணினி விரைவு குறியீடு காட்சிகள். விளக்க பட அட்டைகள் நம்மாழ்வார் பற்றிய செய்தி தொகுப்பு காணொளி 

ஆர்வமூட்டல் : 
 மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்ன?
 நம்மை சுற்றி இருப்பவை எவை?
 உணவு எங்கிருந்து கிடைக்கிறது?
இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்


கற்பித்தல் செயல்பாடுகள்.
 உழவு உலகிற்கு அச்சாணி என்று வள்ளுவரும் “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் “என்று பாரதியாரும் உழவின் மேன்மையைக் கூறுவதை விளக்குதல் 
நிலம், தாவரங்கள், விலங்குகள், மனிதஇனம் இவை அனைத்தும் இயற்கையைச் சார்ந்தே வாழ்கிறோம்.
 உயிர்ச்சூழல் மற்றும் சுற்று சுழலுக்கேற்ப இயைந்து செயல் பட்டு சுற்று சூழலியல் மேம்பட உதவ வேண்டும்.
வேளாண்மை சார்ந்த பழமொழிகளை கூறுதல்
 இயற்கை வேளாண்மை இயற்கையான தொழு உரம் இயற்கையான பூச்சிக்கொல்லி, மசானா ஃபுகோகா கூறிய ஐந்து வேளாண் மந்திரங்கள் இயற்கை வேளாண் ஆர்வலர் நம்மாழ்வார் அவர்களின் இயற்கை வேளாண்மை ஆகியவற்றை பாடம் வழி விளக்குதல் 
கற்றல் செயல்பாடுகள்
இயற்கை விவசாயம் குறித்து கூறச் செய்தல்
 பாடப்பகுதியில் இடம்பெறும் உரையாடலை அந்தந்த கதாபாத்திரம் போல் ஏற்று நடிக்க செய்தல்
 இயற்கையை வளர்ப்பதற்கு ஆற்ற வேண்டிய கடமைகளை குறித்து கலந்துரையாடுதல் 
கற்றல் விளைவுகள்:
இயற்கை வேளாண்மையும் இயற்கையைப் பேணுவதன் அவசியத்தையும் தெரிந்து கொள்வர்.
 செயற்கையால் விளைவும் கேடுகளை அறிந்து இயற்கையோடு இணைந்து வாழ பழகுவர் 
பழந்தமிழர் வாழ்வியலோடு இணைந்திருந்த செடி கொடி பூக்களின் வகைகளை பள்ளி வளாகத்திலும் வீட்டிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பண்பினைப் பெற்றுக் கொள்வர்.
வலுவூட்டல்:
இயற்கை வேளாண்மையே நமது வாழ்வை ஆரோக்கியமானதாக மாற்றும் மேலும் செயற்கை உரங்கள் நமது உடல்நலத்திற்கு மண் வளத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை தெளிவுபட மீளக் கூறுதல்
 இயற்கையை பின்பற்றுவதற்கு தேவையான வழிமுறைகள் எவை என கேட்டு சிறந்த கருத்தகள் கூறும் மாணவர்களை உற்சாகமூட்டிப் பாராட்டுதல்


மதிப்பீடு:
"எளிய சிந்தனை வினா..
 வேளாண்மை மந்திரங்கள் எத்தனை?
 ஏழைகளின் கற்பக விருட்சம் எது?
 ஒற்றை வைக்கோல் புரட்சி யாருடைய படைப்பு?


நடுத்தர சிந்தனை வினா


1. தொழு உரம் என்றால் என்ன? 
2. தமிழ் நாட்டின் மாநில மரம் - பற்றி
3. மதிப்பு கூட்டு பொருள் என்றால் என்ன?


உயர் சிந்தனை


வேதி கலப் பில்லாத பூச்சிக்கொல்லி நடை முறைக்கு சாத்தியமா நும் கருத்தை எழுது. 
 எனது வீட்டு தோட்டம் என்ற தலைப்பில் உனது கருத்தினைக் கூறு.

தொடர் பணி :
1. மாடித் தோட்டம் அமைக்கும் முறைமை இணையத்தளம் மூலம் அறிந்து வருக.
2. பள்ளிகளில் தேசிய பசுமை படை சுற்றுச்சூழல் மன்றம் இது போன்ற நிகழ்வுகள் மூலமாக பள்ளியில் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதில் உங்களுடைய பங்கை பற்றி எழுது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக