புதன், 20 ஆகஸ்ட், 2025

பகுபத உறுப்பிலக்கணம்ஆகஸ்ட் 4வது வாரம் தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு. 11

 வெற்றி நமதே allaloy blogspot

வகுப்பு 12

https://allaloy.blogspot.com/2025/08/4-12.html


நாள் : 24 .08.26 முதல் 28.08.26. 

வகுப்பு : மேல்நிலை முதலாம் ஆண்டு

பாடம் :தமிழ்

தலைப்பு : பகுபத உறுப்பிலக்கணம்
 பாட வேளை : 4
           வெற்றி நமதே allaloy blogspot
கற்றல் நோக்கம்

  • சொற்களைப் பொருள்புரிந்து காலத்திற்கேற்பப் பயன்படுத்தும் திறன் பெறுதல்.

துணைக்கருவிகள்.

  •  விளக்கஅட்டைகள், பணித்தாள்
ஆர்வமூட்டல் *
  •  தமிழ் மொழியில் சொல்லுக்கு வழங்கும் வேறு பெயர்கள் சிலவற்றைக் கூறு  
  •  சொற்கள் எத்தனை வகைப்படும்?அவை யாவை?
  •   இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்.
                           வெற்றி நமதே allaloy blogspot
கற்பித்தல் செயல்பாடுகள்.

  • ஒரு வினைப்பகுபதத்தில் பகுதியும் விகுதியும் அடிப்படை உறுப்புகளாக உள்ளன. சில சொற்களில் பகுபத உறுப்புகள் ஒன்றோ இரண்டோ குறைந்தும் வரும். சில சொற்கள் ஆறு உறுப்புகள் பெற்றும் வரும். ஒரு பகுபதத்தில் பகுதி, விகுதி, இடைநிலை என்பவையே பொருள் தரும் உறுப்புகளாகும். பகுதி பெரும்பாலும் சொற்பொருளையும் விகுதி, இடைநிலை ஆகியன இலக்கணப் பொருண்மைகளையும் தருகின்றன. இவை மூன்றும் இணையும்போது ஏற்படும் புணர்ச்சி மாற்றங்களே சந்தி, சாரியை, விகாரம் ஆகும்.

கற்றல் செயல்பாடுகள்:
  •  பாடப்பகுதியில் இடம்பெறும் சில சொற்களைப் பிரித்து உறுப்பிலக்கணம் அறிதல் 
  •  பகுபத உறுப்புகள் வரும் இடங்களைப் பற்றி வகுப்பில் கலந்துரையாடுதல்.

 வலுவூட்டல்        
வெற்றி நமதே allaloy blogspot
  •  சில சொற்களை எழுதி அதை சரியாக பிரித்து உறுப்பிலக்கணம் கூறும் மாணவர்களைப் பாராட்டி பரிசளித்தல் 

 கற்றல் விளைவுகள்
  •  சொற்களைப் பிரித்து உறுப்பிலக்கணம் கூற அறிந்து கொள்வர்.
  •  பொருள் தரும் சொற்கள் பகுபதம் என்றும் பொருள் தரா சொற்கள் பகாபதம் என்றும் சொற்களைப் பிரித்தறியும் முறையை அறிந்து கொள்வர் 

மதிப்பீடு
       வெற்றி நமதே allaloy blogspot
எ சி வி
  1.  பகுபத உறுப்புகளும் இடம்பெறும் அடிப்படை உறுப்புகள்……
  2.  பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும் உறுப்பு…..
ந.சி.வி

  1.  கால இடைநிலைகளைப் பற்றி கூறு 
  2.  விகுதிகள் எவற்றை உணர்த்தும்
உசி.வி.
  1.  பகுபத உறுப்புகள் எந்தெந்த இடங்களில் எவ்வாறெல்லாம் வரும் என்பதை விளக்குக 
குறைதீர்க்கற்றல் :
  •  மாணவர்களிடம் வினாக்கள் கேட்டு பதில் அளிக்க தடுமாறும் பகுதியை மீண்டும் ஒரு முறை விளக்கி கூறுதல்.


தொடர்பணி:
  •  உரைநடை பகுதியில் அமைந்துள்ள எவையேனும் 10 சொற்களுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக.


வெற்றி நமதே allaloy blogspot

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக