செவ்வாய், 1 செப்டம்பர், 2026
காலாண்டு திருப்புதல் பாடக்குறிப்பு
நாள் 7.09.2026 முதல் 11.09.26
வகுப்பு :மேல்நிலை இரண்டாம் ஆண்டு
பாடம் :தமிழ்
தலைப்பு :திருப்புதல் இயல் 2
நிரப்புக
1. வையகமும் வானகமும் ஆற்றலரிது - எதற்கு?
2.“ நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது என்று ஐயப்ப மாதவன் குறிப்பிடுவது.......
பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்
1.கலைச்சொல் அ) Museum அல்லது ஆ) HARDWARE
2.மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக
அ)கலை,களை, கழை ஆ) தலை, தளை, தழை
3)கீழ்க்காணும் நான்கு சொற்களைக் கொண்டு தொடர் எழுதுக..
அ)விண்மீன், ஒளிர், எரி, விழ) ஆ)குதிரை, வேகம், ஓடு, தாவு
4.உறுப்பிலக்கணம் தருக
அ) கலங்கி
5.புணர்ச்சி விதி தருக
அ) இனநிரை (அல்லது) ஆ) புதுப்பெயல்
பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்
6.நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது விளக்கம் தருக
7.செல்வம் இருப்பதற்கான வழியாக வள்ளுவம் உரைப்பன யாவை?
8. விலங்குகளும் பறவைகளும் எவ்வாறு நடுங்கியதாக நக்கீரர் கூறுகிறார்
9.இந்தோ– சாரசனிக் கட்டடக்கலை குறிப்பு வரைக
பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்
10.சென்னை அறிவின் நகரம் என்பதை சான்றுடன் விளக்குக.
11.கீழ்க்காணும் குறளில் ஏகதேச உருவக அணி எவ்வாறு பயின்று வருகிறது என்பதை விளக்குக.
சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.
12.வாகைத் திணையைச் சான்றுடன் விளக்குக
13.வாடைக்காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
மனப்பாடம்
14 மாமேயல்….. தொடங்கும் பாடலை எழுது.
திருப்புதல் காலாண்டுத் தேர்வு
நாள் : 7.09.2026 முதல் 11.09.26
வகுப்பு :மேல்நிலை முதலாம் ஆண்டு
பாடம் :தமிழ்
தலைப்பு :திருப்புதல் இயல் 2
பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்
1.தமிழாக்கம் தருக
அ) simplicity is nature's first step, and the last of art.
2.மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
அ) கலை,களை, கழை (அல்லது) ஆ)குரை, குறை
3)உறுப்பிலக்கணம் தருக
அ)அலர்ந்து
4)புணர்ச்சி விதி
அ)உழுதுழுது
5)கலைச்சொல்
அ) Farmyard manure
ஆ) Harvesting
பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்
6)எதற்கு முன் நல்ல செயல்களை விரைந்து செய்யவேண்டும் என்று குறள் கூறுகிறது?
7). தமிழ்நாட்டின் மாநில மரம் - சிறுகுறிப்பு வரைக.
8). ஐங்குறுநூறு -குறிப்பு வரைக.
9).ஐந்து வேளாண் மந்திரங்கள் யாவை?
10)சீர் தூக்கி ஆராய வேண்டிய ஆற்றல்கள் யாவை?
பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும் (மூன்றனுக்கு) 3×3=9
11).குறித்த காலத்திற்கு முன்பாக ஊர் திரும்பிய தலைவன் கூறுவனவற்றை ஐங்குறுநூறு கொண்டு விளக்குக
12)தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு. - இக்குறட்பாவில் பயின்றுவரும் அணியை விளக்குக.
13).வேதிக்கலப்பில்லாத பூச்சிக்கொல்லி நடைமுறைக்குச் சாத்தியமா? - நும் கருத்தை எழுதுக.
14) "இவ்வயின் யாமெலாம் செவ்விதில் துன்னில் தழைப்பதற்கு இடமிலை" இடஞ்சுட்டிப்பொருள் விளக்குக.
மனப்பாடப்பாடல் 2
15).பொருட்டு ……. முடியும் குறளை எழுது.