செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

பொருள் மயக்கம் வகுப்பு 12 தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

 நாள் : 24 .08.26 முதல் 28.08.26. 


வகுப்பு                       : மேல்நிலை இரண்டாம் ஆண்டு

பாடம்                        :தமிழ்

தலைப்பு                  : பொருள் மயக்கம்

பாட வேளை          :4

கற்றல் நோக்கம்

  •  சூழலுக்கு ஏற்ப சொல்லையும் பொருளையும் தொடரையும் பொருத்தமாக பயன்படுத்தும் திறனைப் பெறுதல்  

துணைக்கருவிகள்.

  • விளக்க அட்டைகள், பணித்தாள்  

ஆர்வமூட்டல் *

  •  எழுத்துப் பிழை தொடர்பிழை என்றால் என்ன?

   இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்.


கற்பித்தல் செயல்பாடுகள்.

  •  தமிழ் மொழியை எழுதும் போதும் படிக்கும் போதும் பேசும்போதும் சரியான முறையைப் பின்பற்றினால் பொருள் மயக்கம் இல்லாமல் புரிந்து கொள்ள முடியும் 
  •  செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்த மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்கு பொருள்கோள் என்று பெயர் என்பதையும் விளக்குதல்.

 கற்றல் செயல்பாடுகள் 

  •  தொடரைச் சேர்த்தும் பிரித்தும் எழுதி தொடரின் பொருளை வேறுபடுத்தி அறிதல் 
  •  வல்லின மெய்யை இட்டும் நீக்கியும் எழுதி பொருள் வேறுபாடு அறிதல் 

வலுவூட்டல்

  •  சில தொடர்களைக் காட்டி சரியாக பொருள் மயக்கம் ஏற்படாமல் எழுத செய்தல் சிறப்பாக எழுதும் மாணவர்களைப் பாராட்டி பரிசளித்தல். 

கற்றல் விளைவுகள்

  •  தொடரைப் பிரித்து பொருள் அறிய கற்றுக் கொள்வர் 
  •  தவறின்றி எழுத வாசிக்க கற்றுக் கொள்வர் 

மதிப்பீடு

எ சி வி

  •  வினைத்தொகையில் வல்லினம்…..
  •  பொருள்கோள் வகைகள்……

ந.சி.வி

  •  பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணங்களுள் சிலவற்றைக் கூறு 

 உசி.வி.

  •  காற்புள்ளி இடாமல் எழுதுவதால் ஏற்படும் பொருள் மயக்கத்திற்குச் சான்று தந்து விளக்குக 

தொடர்பணி:

  •  தொடர்களைப் பொருள் மயக்கம் இன்றி எழுத வழிகாட்டும் உரைநடை நெறிகளைப் பின்பற்றி ஐந்து தொடர்களை எழுதுக 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக