புதன், 12 ஆகஸ்ட், 2026

வாடி வாசல் தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

 நாள்                     : 17-08.26 முதல் 21.08.26.

வகுப்பு                       : மேல்நிலை முதலாம் ஆண்டு 

பாடம்                          : தமிழ்

 பாடவேளை             :4

தலைப்பு                  : வாடிவாசல்        

கற்றல் நோக்கம்

  • தமிழ் மண்ணுக்கே உரிய வீர விளையாட்டுகளின் தொன்மைச் சிறப்பை அறிதல்.

துணைக்கருவிகள்

  • வலையொளி, விளக்க பட அட்டைகள்,

ஆர்வமூட்டல் : 

  •  நமது பாரம்பரிய வீர விளையாட்டுகள் சிலவற்றைக் கூறு 
  •  பொங்கல் விழாவில் நடைபெறும் விளையாட்டுகள் சிலவற்றைக் கூறு.
  • இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்:


கற்பித்தல் செயல்பாடுகள் 

  • வாடிவாசல் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு
  • ஜல்லிக்கட்டில் போருக்குச் செல்லும் வீரனைப் போல் காளைகள் அலங்கரிக்கப்பட்டு உற்சாகமாக வாடிவாசலுக்கு ஆரவார ஒலிக்கு இடையில் சீறிப் பாயும் மாடுகளை ராஜாளி, மாதிரி நிக்குது என்றும் திமிலைப் புடைத்து கொண்டு நிற்கும்

            காளையை வருணிப்பதோடு அடக்கிய பாங்கையும் அழகாக  கூறுதல் 

கற்றல் செயல்பாடுகள்

  •  வாடிவாசலில் வீரவிளையாட்டாக இருக்கும் ஜல்லிக்கட்டை நம்முடைய முன்னோர்கள். மற்றும் இலக்கியங்கள் எடுத்தியம்பும் பாங்கினை அறிதல்
  •  கதை பகுதியை நேர்த்தியான முறையில் வாசித்தல் 

கற்றல் விளைவுகள்:

  •  நமது பண்பாட்டின் அடையாளமான வீர விளையாட்டுகளை அறிந்து கொள்வர்.
  •  வீர விளையாட்டுகளை அறிந்து அதை மதித்து கற்க முற்படுவர்.


வலுவூட்டல்:

  •  கதையைக் கருப்பொருள் மாறாமல் கூறுதல் 
  •  கதையின் கருவும் பொருளும் மாறாமல் சுவை குன்றாமல் தெளிவாக கூறும் மாணவர்களுக்குப் பரிசளித்து பாராட்டுதல்


மதிப்பீடு:

"எளிய சிந்தனை வினா..

  •  வாடிவாசல் கதையின் ஆசிரியர் யார் 
  •  ஏறு தழுவுதல் பற்றி இடம் பெற்றுள்ள சங்க இலக்கியம் எது 

 நடுத்தர சிந்தனை வினா

  •  சி சு செல்லப்பா பற்றி குறிப்பு வரைக.
  •  வாடிவாசல் கதை பகுதியில் காலை எவ்வாறெல்லாம் வருவதாக வர்ணிக்கப்படுகிறது.

1. உயர் சிந்தனை வினா

  •  வாடிவாசல் கதை வாயிலாக நீங்கள் உணர்ந்த கருத்துக்களை விளக்குக 
குறைதீர்க்கற்றல் :

  •  கதையைத் தெளிவாக புரிந்து கொண்ட மாணவர்கள் சிலரை கதையைக் கூறச் சொல்லி விளங்க வைத்தல்

தொடர் பணி :

  • நீங்கள் கண்டு களித்த ஏறு தழுவுதல் நிகழ்வின் காட்சிகளை வகுப்பில் நேர்முக வருணனை செய்து காட்டுக 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக