காலாண்டுத் தேர்வு
PDF DOWNLOAD
அணி, திணை துறை
வினா எண் 39-43 அணிகள்
1.பொருள் வேற்றுமை அணியைச் சான்றுடன் விளக்குக
இலக்கணம்
- இரு வேறு பொருள்களுக்கு இடையே ஒற்றுமையை முதலில் கூறிப் பின் வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி
சான்று
ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் -ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்
பாடலின் பொருள்
- மக்களால் போற்றப்பட்டு உயர்ந்த மலைகளுக்கிடையே தோன்றி, கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை அகற்றுவது ஒளிர்கின்ற கதிரவன். பொதிகை மலையில் தோன்றி சான்றோரால் தொழப்பட்டு மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்குவதோடு ஒப்புமை இல்லாததுமாக இருப்பது தமிழ்.
பொருத்தம்
- தமிழுக்கும் கதிரவனுக்கும் இடையே உள்ள பயன் சார்ந்த ஒற்றுமையை முதலில் கூறி அவற்றுள் தமிழ் தன்னேரிலாதது என்ற தன்மையைப் பின்னர் வேறுபடுத்திக் காட்டுவதால் இது பொருள் வேற்றுமை அணி ஆயிற்று.
2.அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
- இக்குறட்பாவில் பயின்று வரும் அணி நிரல் நிறை அணியாகும்.
அணி விளக்கம்
- நிரல் -வரிசை ,நிறை -நிறுத்துதல்,
- சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறை அணி எனப்படும்.
அணிப்பொருத்தம்
- இக்குறளில் அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும் பயனும் என்ற சொற்களை முறைபடக் கூறியுள்ளமையால் இது நிரல்நிறை அணி ஆகும்.
3.கீழ்க்காணும் குறளில் ஏகதேச உருவக அணி எவ்வாறு பயின்று வருகிறது என்பதை விளக்குக.
சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.
-
- இக்குறட்பாவில் ஏகதேச உருவகஅணி பயின்று வந்துள்ளது.
அணி இலக்கணம் :
- செய்யுளில் ஒரு பொருளை உருவகம் செய்துவிட்டு அதற்கு இணையான மற்றொரு பொருளை உருவகம் செய்யாமல் விடுவது ஏகதேச உருவக அணி எனப்படும்.
பொருத்தம் :
- சினத்தை நெருப்பாகவும், இனத்தைத் தெப்பமாகவும் உருவகம் செய்த வள்ளுவர் உலக வாழ்க்கையை கடலாக உருவகம் செய்யாமல் விட்டுவிட்டார் இது ஏகதேச உருவக அணியாகும்.
திணை,துறை வினாக்கள்
1.வாகைத் திணையைச் சான்றுடன் விளக்குக
திணை விளக்கம்
- வெற்றி பெற்ற அரசனும், அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகைப்பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவது வாகைத் திணை.
சான்று
‘வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
பொருத்தம்
- வாடைக் காலத்தில் மேகம் மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து பூமி குளிரும் படி மழையைப் பெய்தது. வாடைக்காற்றின் குளிர்ச்சி மிகுதியாலும் ,உடலுக்குச் சூடேற்ற பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றினர். அவர்களோடு ,அரசனும் குளிர் காலத்தில் வெற்றியைக் கொண்டாடினான்.
2.கூதிர்ப்பாசறை துறையைச் சான்றுடன் விளக்கு
துறை விளக்கம்
- போர்மேற் சென்ற அரசன் குளிர் காலத்தில் தங்கும் படைவீடு.கூதிர்ப்பாசறை ஆகும்
சான்று
‘வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
– என்ற நெடுநல்வாடைப் பாடல்
பொருத்தம்:
- வாடைக் காலத்தில் மேகம் மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து பூமி குளிரும் படி மழையைப் பெய்தது. வாடைக்காற்றின் குளிர்ச்சி மிகுதியாலும் உடலுக்குச் சூடேற்ற பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடற்றினர். அவர்களோடு போர்மேற் சென்ற அரசன் குளிர் காலத்தில் தங்கும் படைவீடு கூதிர்ப்பாசறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக