வியாழன், 9 அக்டோபர், 2025

தமிழ்த் திறனறித் தேர்வு

                           வகுப்பு :10

                              Test  link 

தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு:12

 நாள்                    : 13 .10.25 முதல் 17.10.25. 

வகுப்பு                : மேல்நிலை இரண்டாம் ஆண்டு

பாடம்                  :தமிழ்

தலைப்பு            : இயல். 4 கவிதை, காவியம், சிலப்பதிகாரம் 

 பாட வேளை : 4

கற்றல் நோக்கம்

  • தமிழர்க்கே உரிய கலை, அழகியல் கூறுகளைக் காப்பியம் வாயிலாகப் படித்துப் பெருமிதம் கொள்ளுதல்; பின்பற்றுதல்
  • புதிய கவிதை வடிவங்களைப் படித்துச் சுவைத்தல் மற்றும் பயன்படுத்துதல்.

துணைக்கருவிகள்.

  • விளக்க அட்டைகள், இணைய வளங்கள்

ஆர்வமூட்டல் *

  • ஐம்பெருங்காப்பியங்கள் எவை ?
  • உனக்கு பிடித்த கவிதைகள் சிலவற்றை கூறு.

இது போன்ற வினாக்கள் கேட்டு விளக்குதல்

கற்பித்தல் செயல்பாடுகள்.

சிலப்பதிகாரம்

  • ஆடல், பாடல், அழகு என்னும் மூன்றில் ஒன்றும் குறைபடாமல் ஏழு ஆண்டுகள்வரை ஆடல் கலையைப் பயின்றவர் மாதவி. நாட்டிய அரங்கின், அமைப்பு தலைக்கோல் அமைதி, மாதவி மன்னனிடம் சிறப்பு பெறுதல், பற்றி விளக்குதல்

நகுலன் கவிதைகள்

  • பாரதிக்குப் பின்னர் வந்த காலகட்டத்துக் கவிதைகள், பலவற்றையும் பற்றிய சிந்தனைகளைச் செறிவாக, குறிப்பாக, முரணாக, அழகிய தொடராகத் தருவதற்கு முயன்றன. புதுக்கவிதை வடிவம் இதற்கு ஏற்றதாக இருந்தது; இருக்கிறது. புதுக்கவிதை, புதிய வடிவம் கொண்ட கவிதை என்ற பொருள் மட்டும் கொண்டதன்று. புதிய சிந்தனைகளையும் புதிய கருத்துகளையும் புதுமையாகச் சொல்வதையும் குறிப்பது.

காவியம்

  • இறகுகளின் தொகுதியைச் 'சிறகு' என்பர். சிறகிலிருந்து பிரிந்த இறகு, நிலத்துக்கும் வானுக்கும் இடைப்பட்ட பகுதியில் நிகழும் காற்றின் தீராத தழுவல்களால் மண்ணில் வீழாது தன் வாழ்வை எழுதுகிறது. வாழ்வு என்பது காவியத்துக்கான பொதுவான பாடுபொருள்.

கற்றல் செயல்பாடுகள்:

  •  பள்ளி அல்லது விழாக்களில் அமைக்கப்படும் மேடைகளைக் குறித்து விவாதித்தல்
  •  கவிதைகளை ஏற்ற இறக்கத்துடன் வாசித்தல் 

 வலுவூட்டல்

  •  சிலப்பதிகாரப் பகுதியில் நாட்டிய அரங்க அமைப்பு குறித்து விளக்கி சில வினாக்கள் கேட்டல் 
  •  சில சொற்களை எழுதி அதை சரியாக பிரித்து உறுப்பிலக்கணம் கூறும் மாணவர்களைப் பாராட்டி பரிசளித்தல் 

 கற்றல் விளைவுகள்

  •  நாட்டிய அரங்க அமைப்பை அறிந்து கொள்வர்
  •  புதுக்கவிதையின் எளிமையையும் புதுமையையும் பற்றி அறிந்து கொள்வர்.

மதிப்பீடு

எ சி வி

  •  குடிமக்கள் காப்பியம் எது? 
  •  நகுலனின் இயற்பெயர் என்ன?
  •  காவியம் எழுதியவர் யார்?

ந.சி.வி

  • சிலப்பதிகாரம் குறிப்பு வரைக
  •  நகுலன் கதை கவிதை பற்றி கூறு 
  •  பிரமிள் படைப்புகள் சிலவற்றை கூறு.

உசி.வி.

  •  * சிலம்பு கூறும் அரங்க, அமைப்பை விளக்குக .
  •  நகுலனின் கவிதையில் இடம்பெறும் நயங்களைக் கூறுக.
  • காற்றின் தீராத பக்கங்களில் எதனை, எது எழுதிச் சென்றது?

தொடர்பணி:

  •  பிரமிளின் கவிதைத் தொகுப்பிலிருந்து உங்களுக்குப் பிடித்த கவிதையை வகுப்பறையில் காட்சிப்படுத்துக.
  • பறவை பற்றி எழுதப்பட்ட கவிதைகள் சிலவற்றைத் தொகுத்துக் குறும்புத்தகம் உருவாக்குக.






தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு:11

 நாள் :          13 .10.25 முதல் 17.10.25. 

வகுப்பு :      மேல்நிலை முதலாம் ஆண்டு

பாடம் :          தமிழ்

தலைப்பு :      இயல். 4 பிள்ளைக்கூடம், தொலைந்து போனவர்கள்

 பாட வேளை : 4

கற்றல் நோக்கம்

  • செய்யுள்களின்வழி வெளிப்படும் கல்விமுறைகளையும் விழுமியங்களையும் போற்றிப் பின்பற்றுதல்.

துணைக்கருவிகள்.

  •  விளக்க அட்டைகள், இணைய வளங்கள்
  • https://allaloy.blogspot.com/

ஆர்வமூட்டல் *

  •  கல்வி கற்கும் இடம் எது?
  • நாம் வாழ்வில் நடைபெறும் நிகழ்வு அனைத்திலும் மனத் தெளிவுடன் நடந்து கொள்கிறோமா?
  • இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுற செய்தல்.

கற்பித்தல் செயல்பாடுகள்.  https://allaloy.blogspot.com/

பிள்ளைக்கூடம்

  • இளமையின் சிறகை முறிக்காத இனிய ழலில், பிள்ளைகளுக்குப்

          பிடித்த பள்ளிக்கூடம் எவ்வாறு இருக்க வேண்டும் என்றொரு கனவு

         அனைவருக்கும் இருக்கும். அந்தக் கனவை ஓர் ஓவியர் வரைந்து

        காட்டலாம்; ஒரு பாடகர் பாடிக் காட்டலாம்; இங்கொரு கவிஞர் எழுதிக்

        காட்டுகிறார்.

தொலைந்து போனவர்கள்

  •      மானுட சமுதாயத்தின் விழிகள் ஒளியிழந்து கிடப்பதைத் தம்     கவிதையில்  உணர்த்துகிறார் கவிஞர்; அவ்விழிகளுக்கு ஒளியூட்ட விரும்புகிறார்.
  •  நடக்காததை நடந்ததாகக் கருதிக்கொண்டு மாயையில் வாழும் மக்களுக்கு உண்மையைக் காட்டும் தத்துவமாக இக்கவிதை அமைந்துள்ளதை விளக்குதல்

கற்றல் செயல்பாடுகள்:

  •  பள்ளி செயல்பாடுகள் சிலவற்றை விவாதித்தல்.
  •  கவிதைகளை ஏற்ற இறக்கத்துடன் வாசித்தல் 

 வலுவூட்டல் https://allaloy.blogspot.com/

  •  கவிதை பகுதியைத் தெளிவாக விளக்கி சில வினாக்கள் கேட்டு சிறப்பாக விடையளிக்கும் மாணவர்களைப் பாராட்டுதல்.

 கற்றல் விளைவுகள் https://allaloy.blogspot.com/

  • பள்ளியின் சிறப்பு அறிந்து பின்பற்ற கற்று கொள்வர்.
  •  புதுக்கவிதையின் எளிமையையும் புதுமையையும் பற்றி அறிந்து கொள்வர்.

மதிப்பீடு

எ சி வி

  • பிள்ளைக்கூடம் எந்த கவிதை தொகுப்பு…….
  •  உரைத்தாய் இலக்கணக்குறிப்பு

ந.சி.வி

  •  இரா. மீனாட்சி கவிதை பற்றி கூறு 
  •  அப்துல் ரகுமான் படைப்புகள் சிலவற்றைக் கூறு.

உசி.வி. https://allaloy.blogspot.com/

  • இரா. மீனாட்சி கவிதையில் இடம்பெறும் நயங்களைக் கூறுக.
  • அப்துல் ரகுமானின் கவிதையிலிருந்து வினா-விடை வடிவத்திற்கு ஏற்ற அடிகளைத் தருக.

தொடர்பணி:

  •  தாய்மொழிவழிக் கல்வி பற்றிய உங்கள் எண்ணங்களைக் கவிதையாக்குக.   https://allaloy.blogspot.com/
  • தமிழ்க் கவிதைகளுக்ககான சாகித்திய அகாதெமி விருது பெற்ற கவிஞர்களின் பட்டியலைத் திரட்டி,நூலின் பெயர், ஆண்டு போன்ற விவரங்களோடு அட்டவணை உருவாக்குக.






ஞாயிறு, 28 செப்டம்பர், 2025

தமிழ் இலக்கிய வரலாற்று களஞ்சியம் மது.ச விமலானந்தம்

தமிழ் இலக்கிய வரலாற்று களஞ்சியம் மது.ச விமலானந்தம்
                                  

தமிழ் மொழி இலக்கியத் திறனறிவு தேர்வு

தமிழ் மொழி இலக்கியத் திறனறிவு தேர்வு இயல்.5 அகப்பொருள் இலக்கணம்

தமிழ்த் திறன்றித்தேர்வு.2025-26

தமிழ்த் திறன்றித்தேர்வு.2025-26 இயல்.5 பாய்ச்சல்

தமிழ் மொழி இலக்கியத் திறனறிவு தேர்வு -2025

இயல் 5 பன்முக கலைஞர்

தமிழ்த் திறன்றித்தேர்வு.2025-26

தமிழ்த் திறன்றித்தேர்வு கம்பராமாயணம்

வெள்ளி, 19 செப்டம்பர், 2025

முதுகலை தமிழாசிரியர் தேர்வு 20

 TEST LINK

அக்டோபர் 2 வது வாரம்தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு. 11

 நாள் : 06.10.25 முதல் 10-10.25

வகுப்பு : மேல்நிலை முதலாம் ஆண்டுhttps://allaloy.blogspot.com/

பாடம் : தமிழ்

 பாடவேளை :4

தலைப்பு :தமிழ் நாட்டுக் கல்வி வரலாறுhttps://allaloy.blogspot.com/

கற்றல் நோக்கங்கள் :

  • காலந் தோறும் கல்வியின் வளர்நிலை வரலாற்றை அறிந்து கற்பதோடு, கல்லாத மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுதல்

கற்பித்தல் துணைக்கருவிகள்:

  • விளக்க அட்டைகள்,
  •  வலையொளி புதிவுகள்.

ஆர்வமூட்டல்:

  • கல்வி கற்கும் இடம் எது?
  • கல்விமுறை அன்றும் இன்றும் எவ்வாறு இருந்தது?

இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்

கற்பித்தல் செயல் பாடுகள்:

  • கல்வியின் நோக்கம் நாகரிகத்தையும் பண்பாட்டையும் வளர்ப்பதாகும்.
  • காலந்தோறும் கற்றலும், கற்பித்தலும் பல்வேறு பரிமாணங்களைப் பெற்று வளர்ந்துள்ளன.
  • தமிழ் இலக்கியங்களில் இலக்கண நூல்களில், கல்வி சமண பௌத்தப்.. பள்ளிகள், மரபுவழி குருகுலக் கல்விமுறை,திண்ணைப் பள்ளிக் கல்விமுறை, உயர்நிலைக் கல்விமுறை, தமிழ்நாட்டில் ஐரோபபியர் களின் கல்விப்பணி ஆகியவற்றை விளக்குதல்

கற்றல் செயல் பாடுகள்:

  • பாடப்பகுதியைப் பிழையில்லாமல் வாசித்தல்
  •  பண்டைய மற்றும் இன்றைய கல்வி முறை பற்றி விவாதித்தல்.

வலுவூட்டல்:

  • தனிமனிதனைச் சமுதாயத்துக்கு ஏற்றவனாக மாற்றுதல் என்னும் சீரிய நோக்கமுடையது கல்வி என்பதை விளக்குதல்
  • பாடப்பகுதியிலிருந்து வினாக்கள் கேட்டு சிறப்பாக விடையளிக்கும் மாணவியருக்குப் பாராட்டி பரிசளித்தல்https://allaloy.blogspot.com/

கற்றல் விளைவுகள்:

  • கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வர்.
  • கல்வியின் வளர்ச்சி நிலையையும் மேன்மையையும் அறிந்து போற்ற முற்படுவர்.

மதிப்பீடு

எசிவி https://allaloy.blogspot.com/

1.சமணப்பள்ளி நடத்தியவர்…

2.பள்ளி என்ற சொல்லின் பொருள் ……

ந.சி.வி


  • இலக்கியங்கள் கூறும் கல்வி பற்றிகூறு 
  • கல்விகற்பிக்கப்படும் இடம் பற்றி இலக்கியங்கள் கூறுவதை எழுது

உ.சி.வி https://allaloy.blogspot.com/

  • அன்றைய இன்றைய கல்விமுறை குறித்து எழுதுக

தொடர்பணி :

  • தமிழ்நாட்டின் பண்டைக் கல்வி முறை. குறித்துச் செய்திப்படக் கட்டுரை ஏடு ஒன்று தயாரிக்க .