நாள் : 10.08.26 முதல் 14.08.26.
வகுப்பு : மேல்நிலை முதலாம் ஆண்டு
பாடம் : தமிழ்
பாடவேளை :4
தலைப்பு : இயல் 3
செய்யுள் : காவடிச் சிந்து, குறுந்தொகை
கற்றல் நோக்கம்
- இலக்கியங்கள்வழி தமிழர் பண்பாட்டுக்கூறுகளை அறிந்து தமதாக்கிக்கொண்டு வாழ்தல்.
- வீட்டிலும் சமூகத்திலும் பின்பற்றப்படும் பண்பாட்டு நிகழ்வுகளைப் போற்றிப் பின்பற்றுதல்.
துணைக்கருவிகள்
ஆர்வமூட்டல் :
குறுந்தொகை
- காணொளி, விளக்கப்பட அட்டைகள்
- கோயில்களில் உள்ள வேண்டுதல்கள் சிலவற்றைக் கூறு
- எட்டுத்தொகை நூல்கள் யாவை
- எட்டுத்தொகை நூல்களில் அக நூல்களைக் கூறு
கற்பித்தல் செயல்பாடுகள்
- காவடி எடுத்தல் தமிழ்ப் பண்பாட்டுக்கூறுகளுள் ஒன்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் குன்றுதோறும் வீற்றிருக்கும் முருகன் கோவில்களில் காவடி எடுத்து ஆடுவது வழக்கமாக உள்ளது. காவடி தூக்கிச் செல்வோர், அதைச் சுமையாக உணராமல் இருக்கப் பாடியவாறே செல்வதற்குப் புலவர்கள் வழிநடைப் பாடல்களை இயற்றியுள்ளனர்.இதை பாடல் வழி விளக்குதல்
- அன்பும் அறனும் விளையும் திருமண வாழ்வைத் தலைவி விரும்புகிறாள். இரு மனம் இணையும் திருமணத்தை உறுதிசெய்ய இரு வீட்டாரும் முனைகின்றனர். இதனை, அகத்திணை இலக்கணத்தின் இலக்கியமாய் விளங்கும் குறுந்தொகைப் பாடல் ஒன்று காட்சிப்படுத்துவதைப் பாடல் வழி விளக்குதல்.
- செய்யுளைச் சீர்ப்பிரித்து வாசித்தல் .கோயில்களில் நடைபெறும் வேண்டுதல்கள் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுதல்
- வழிநடை பாடலின் மேன்மையை அறிந்து நம் முன்னோர்கள் பின்பற்றினர் என்பதை அறிந்து பின்பற்ற கொள்வர்
- நம் முன்னோர்களின் அகப்புற வாழ்வைப் பற்றி அறிந்து வாழ கற்றுக் கொள்வர்
- பாடப்பகுதியில் இடம்பெற்றிருக்கும் முக்கிய சொற்களுக்கு விளக்கம் கூறுதல்
- படப்பகுதியில் சில வினாக்கள் கேட்டு சிறப்பாக விடை அளிக்கும் மாணவர்களைப் பாராட்டி பரிசளித்தல்
மதிப்பீடு:
"எளிய சிந்தனை வினா..
- காவடிச்சிந்துக்குத் தந்தை யார்?
- குறுந்தொகை…… நூல்
- காவடிச்சிந்து என்பது யாது?
- வெள்ளிவீதியார் சங்கத்தொகை நூல்களில் எத்தனை பாடல்கள் பாடியுள்ளார்?
- சங்க காலத்தில் நடைபெற்ற சமூக நிகழ்வுடன் இக்கால சமூக நிகழ்வுகளைப் பொருத்தி ஒப்பிட்டு எழுதுக
குறைதீர்க்கற்றல் :
- மாணவர்கள் புரிந்து கொள்ளாத சில பகுதிகளை மீண்டும் ஒரு முறை கற்பித்தல்.
- எந்தெந்த நாடுகளில் காவடியாட்டம் இன்றளவும் நிகழ்த்தப்படுகிறது அதற்கான காரணங்களை திரட்டுக.
- திருமணங்களில் மணக்கொடை கேட்பது குற்றமா விவாதிக்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக