செவ்வாய், 14 ஜூலை, 2026

நால்வகை பொருத்தாங்கள் வகுப்பு:12 தமிழ் மாதிரிப் பாடக்குறிப்பு

 

நாள் :                      20.07.26 முதல் 24.07.26


வகுப்பு                 : மேல்நிலை இரண்டாம் ஆண்டு


பாடம்                  :தமிழ்


தலைப்பு             : நால்வகை பொருத்தாங்கள்

பாட வேளை  :4


கற்றல் நோக்கம்

  •  இலக்கணக் கூறுகளை அறிந்து மொழியைப் பயன்படுத்துதல் 


துணைக்கருவிகள்.


  •  பயிற்சி வினாத்தாள்

ஆர்வமூட்டல் *

  •  கண்ணன் பாடல் பாடினாள்.

  • நாய் குறைத்தான்

  • நான் நேற்று வந்தோம்

    இந்தத் தொடரில் உள்ள தவறு என்ன?

  •  இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்.



கற்பித்தல் செயல்பாடுகள்.

  •  ஒரு மொழியின் எழுத்துகளிலோ சொல் அமைப்பிலோ, தொடர் அமைப்பிலோ, சொற்பொருள் அமைப்பிலோ காலப்போக்கில் மாற்றம் ஏற்படும். அந்த மாற்றத்திற்கு ஏற்ப அதை தழுவி கொள்ளும் வகையில்  காலத்திற்கேற்ற இலக்கணம் நமக்கு தேவை. மொழி வளர்ச்சிக்கும் இலக்கண தேவைக்கும் இது அடிப்படையான ஒன்றாக இருக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து திணை பாகுபாடு, எண் பாகுபாடு இடப் பாகுபாடு, பால் பாகுபாடு ஆகியவற்றை பாடம் வழி விளக்குதல் 

கற்றல் செயல்பாடுகள்:

  •  திணை பால் எண் இடம் ஆகியவை வெளிப்படுமாறு சில தொடர்களை எழுதுதல் 

 கற்றல்விளைவுகள்

  •  திணை பால் எண் இடம் பயன்படுத்தும் முறையை அறிந்து கொள்வர்.

  •  பிழையின்றி தொடர்களை உருவாக்க கற்றுக் கொள்வர் 

வலுவூட்டல்

  •  பிழையாக சில தொடர்களை எழுதி அதில் ஏற்பட்டுள்ள பிழையின் வகைகளை கூறச் செய்து சிறப்பாக கூறும் மாணவர்களுக்குப் பரிசளித்து பாராட்டுதல் 

 

மதிப்பீடு


எ சி வி

  •  திணை பாகுபாடு எந்த அடிப்படையில் அமையும்?

  •  “உயர்திணை என்மனார் மக்கள் சுட்டே” இத்தொடரில் இடம்பெறும் நூல் எது?

ந.சி.வி


  •  மொழியின் சொற்றொடர் அமைப்பைப் பயன்படுத்துவதற்கும் விளங்கிக் கொள்வதற்கும் அடிப்படையான தேவைகள் யாவை?


உசி.வி. 

  • மொழியைப் பிழையின்றி பேசவும் எழுதவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சிலவற்றை கூறு 

  

தொடர்பணி

  • திணை பாகுபாடு தொடர் அமைப்பிற்கு இன்றியமையாதது என்பதை பாடப் பகுதியில் இருந்து சான்று காட்டி விளக்குக.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக