புதன், 12 ஆகஸ்ட், 2026

உரிமைத் தாகம்,தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

 நாள்                       : 17 .08.26 முதல் 21.07.26. 

வகுப்பு                       : மேல்நிலை இரண்டாம் ஆண்டு

பாடம்                             :தமிழ்

தலைப்பு                     : உரிமைத் தாகம்

பாட வேளை              :4

கற்றல் நோக்கம்

  •  நிலத்தோடு ஒன்றி வாழும் மக்களின் உணர்வுகளை கதைகளில் படித்து கருத்துரைத்தல் 

துணைக்கருவிகள்.

  • விளக்கப்படம் ,காணொளி

ஆர்வமூட்டல் *

  •  கிராம மக்களின் அடிப்படை தொழில் எது?
  •  உறவுகள் பற்றி கூறு.

  •    இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்.

கற்பித்தல் செயல்பாடுகள்.

  • நிலம் சடப்பொருள் அன்று. நிலத்தோடு பேசக்கூடிய மனிதர்கள் இன்றைக்கும் கிராமங்களில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். வருவாய் பெரிதாக வரவில்லையென்றாலும் நில உரிமை, நிலம் சார்ந்த வேளாண்மை ஆகியவற்றை ஒரு பண்பாடாகவே கொண்டிருக்கிற மனிதர்கள் இருக்கிறார்கள். நிலத்தை உயிருக்கு நிகராகக் கொண்டிருக்கிற பண்பாடு, "எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே' என்னும் நமது பழைய பண்பாட்டு மரபை நினைவூட்டுகிறது. நிலத்துடனான உறவு குடும்ப உறவையும் வலுப்படுத்துகிறது என்பதை பூமணியின் உரிமைத் தாகம் கதை வழி விளக்குதல் 

கற்றல் செயல்பாடுகள்:

  •  கதைப்பகுதியை வாசித்தல் 
  •  கதைப்பகுதியை கருப்பொருள் மாறாமல் சுவை குன்றாமல் கூறுதல் 



வலுவூட்டல்

  •  கதைப்பகுதியைக் கருப்பொருள் மாறாமல் சுவைக்குன்றாமல் மீண்டும் ஒரு முறை சுருக்கி கூறுதல் 
  •  கதைப்பகுதியை மாணவர்கள் கருப்பொருளுடன் கூறச் செய்தல் சிறப்பாக கூறும் மாணவர்களைப் பாராட்டுதல் 

கற்றல் விளைவுகள்

  •  சொந்த வாழ்விலும் சமூக வாழ்விலும் ஏற்படும் பிரச்சனைகளைப் பிறரை எதிர்பார்க்காமல் தானே முன் நின்று செய்யக் கற்றுக் கொள்வர்.
  •  உறவின் மேன்மையை உணர்ந்து உறவைப் போற்றக் கற்றுக் கொள்வர்.

 

மதிப்பீடு

எ சி வி

  •  உரிமை தாகம் சிறுகதை ஆசிரியர்….
  •  பூமணி சாகித்திய அகாதமி விருது பெற்ற புதினம்…….

ந.சி.வி


  •  உரிமைத் தாகம் கதையின் கருப்பொருள் என்ன?


உசி.வி.

  •  உரிமைத் தாகம் கதையில் இடம் பெறும் கதை மாந்தர்களின் பண்புகளை விவரிக்க.

தொடர்பணி:

  •  வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உறவினர்களின் பங்கு முக்கியமானது என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதுக.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக