ஞாயிறு, 29 ஜூன், 2025

தமிழ் ஒரு மதிப்பெண் வினா விடை, வகுப்பு :12

                தமிழ் (2025-26)

ஒரு மதிப்பெண் வினா விடை,( இயல் 1-6)

                   வகுப்பு :12

ஒரு மதிப்பெண் வினா விடை வகுப்பு :11

                  தமிழ் 2025-26

ஒரு மதிப்பெண் வினா விடை  (இயல் 1-6)

                      வகுப்பு :11 


மொழிப்பயிற்சி வகுப்பு :12

           தமிழ் 2025-26

  மொழிப்பயிற்சி

          வகுப்பு :12 

DOWNLOAD pdf/பதிவிறக்கு

மொழிப்பயிற்சி வகுப்பு 11

                                                                   தமிழ்    2025-26                                                 

                                                              மொழிப்பயிற்சி

                                                                       வகுப்பு 11

                                                     பதிவிறக்கு/DOWNLOAD PDF

செவ்வாய், 24 ஜூன், 2025

வகுப்பு 11 தமிழ் மாதிரி பாட குறிப்பு ஜூலை முதல் வாரம்

 வகுப்பு 11 

தமிழ் மாதிரி பாட குறிப்பு 

ஜூலை முதல் வாரம்

பதிவிறக்கு /DOWNLOAD

வகுப்பு 12 தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஜூலை முதல் வாரம்

 வகுப்பு 12 தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஜூலை முதல் வாரம்

பதிவிறக்கு /DOWNLOAD

ஞாயிறு, 22 ஜூன், 2025

11 வகுப்பு தேர்வு மதிப்பெண் 50

                                          50 மதிப்பெண் தேர்வு           

                                         வகுப்பு 11

                     TAMIL UNIT TEST
                              UNIT 1
                DOWNLOAD.PDF

50 மதிப்பெண் தேர்வு வகுப்பு 12

  50 மதிப்பெண் தேர்வு  வகுப்பு 12

                     TAMIL UNIT TEST
                              UNIT 1
                DOWNLOAD .PDF

25 மதிப்பெண் தேர்வு வகுப்பு 11

                    

           25 மதிப்பெண் தேர்வு  வகுப்பு 12

                              unit test


                         DOWNLOAD .PDF 

25 மதிப்பெண் தேர்வு வகுப்பு 12 தமிழ்

                             25 மதிப்பெண் தேர்வு  வகுப்பு 12

                              unit test


                                   பதிவிறக்கு pdf

புதன், 18 ஜூன், 2025

தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 11 ஜூன் 4 வது வாரம்

தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 12 ஜூன் 4 வது வாரம்

 தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 12 ஜூன் 4 வது வாரம்

Notes of lesson

நாள்             : 23.06.2025 முதல் 27..6.2025
 வகுப்பு    : மேல்நிலை இரண்டாம் ஆண்டு
 பாடம்      :தமிழ்
 தலைப்பு :       இயல் 1
இலக்கணம் : தமிழாய் எழுதுவோம்
 
கற்றல் நோக்கம் :
  • மொழியைப் பிழையின்றிக் கையாளும் முறையறிந்து பயன்படுத்துதல்
  •  மொழி பயிற்சி பகுதிகளை அறிந்து  பயன்படுத்துதல்          https://allaloy.blogspot.com .
  •                            
துணைக் கருவிகள் :
  •  மடிக்கணினி, விளக்க அட்டைகள், பயிற்சி வினாக்கள்
 ஆர்வமூட்டல் :
  •  மொழியை பிழையின்றி எழுத என்ன செய்ய வேண்டும்?
  •  பிழை ஏற்படும் இடங்களைக் கூறு
 இது போன்ற வினாக்கள் கேட்டு ஆர்வமுறச் செய்தல் 

 கற்பித்தல் செயல்பாடுகள் 
  • மயங்கொலி எழுத்துகளால் ஏற்படும் பிழைகளை அறிதல் 
  •  எழுத்துப் பிழை சொற்பிழை பொருட்பிழை போன்றவற்றை உரிய சான்றுகளுடன் விளக்குதல் 
  •  பிழைகளை தவிர்க்க செய்யக்கூடிய வழிமுறைகளை விளக்குதல் 
  •  உவமை தொடர்களை தொடரில் அமைத்து எழுதவும் குறிப்புகளைக் கொண்டு அறிஞர்களின் பெயர்களை கண்டுபிடிக்கவும் தமிழாக்கம் செய்யவும் சான்றுகள் வழி விளக்குதல்.
  •                        https://allaloy.blogspot.com
 கற்றல் செயல்பாடுகள் 
  •  பிழைகள் ஏற்படும் இடங்களை கண்டறிதல் 
  •  பிழையின்றி எழுத பயிற்சி எடுத்தல் 
  •  மாணவர்கள் எழுதிய தேர்வு பகுதியில் செய்த பிழைகளைப் பார்த்து தெளிதல்
 கற்றல் விளைவு
  •  தமிழைப் பிழையின்றி எழுத அறிந்து கொள்வர்
  •  மயங்கொலிச் சொற்களால் ஏற்படும் பிழைகளைத் தவிர் முயற்சிப்பர் 
  •  காற்புள்ளி முற்றுப்புள்ளி இதனால் ஏற்படும் பொருள் மாறுபாடுகளை அறிந்து பிழைகளைத் தவிர்க்க முற்படுவர்
  •                                 https://allaloy.blogspot.com
வலுவூட்டல்
  • ல, ள, ழ, ன, ந, ண,ர, ற எழுத்துகளின் ஒலிப்பு முறைகளையும் எழுத்துகள் பயின்று வரும் இடங்களையும் மீண்டும் ஒரு முறை விளக்குதல் 
 மதிப்பீடு
எ சி வி
வழி -வலி இதன் பொருளை கூறு
 தமிழில் உள்ள எழுத்துகளின் எண்ணிக்கை.
ந சி வி
 பிழைகளைத் தவிர்க்க சில குறிப்புகளைக் கூறுக.
ளகர லகர விதிகள் சிலவற்றை கூறு 
உ சி வி
 எழுத்துப் பிழை சொற்பிழை பொருட்பிழை ஏற்படாமல் எழுதக்கூடிய நடவடிக்கைகள் சிலவற்றை கூறு.
 தொடர் பணி 
ல, ள, ழ, ன, ந, ண,ர, ற வேறுபாட்டில் அமைந்த சொற்களை தொடர்களில் அமைத்து எழுதுக.
https://allaloy.blogspot.com



புதன், 11 ஜூன், 2025

தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 11 ஜூன் 3வது வாரம்

 தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 11 ஜூன் 3வது வாரம்

நாள்       : 16.06.25 முதல் 20.06.25

 வகுப்பு  : மேல்நிலை முதலாமாண்டு 

 பாடம்  :தமிழ்

 தலைப்பு : இயல் 1

செய்யுள் :ஒவ்வொரு புல்லையும்

 விரிவானம் :இசைத்தமிழர் இருவர் 

 

கற்றல்நோக்கம்:  

  • எளிய மக்களின் உணர்வுகளைக் கலைநயத்துடன் வெளிப்படுத்தும் திறனைப் பெறுதல். 
  • வாழும் காலத்து ஆளுமைகளின் திறமைகளைஉணர்ந்து முன்னோடிகளாகக் கொள்ளுதல் 


 துணைக் கருவிகள் :

  • படங்கள், விளக்க அட்டைகள், மடிக்கணினி, வலையொளி பதிவுகள்.

 ஆர்வமூட்டல்  

1.நம்மை சுற்றி நீ காணும் இயற்கையைப் பற்றி கூறு.

2.கால்நடைகளின் உணவு எது?

 3.உனக்கு பிடித்த பாடல் எது?

4.உன்னுடைய பொழுதுபோக்கு என்ன? 


 கற்பித்தல் செயல்பாடுகள்

வ்வொரு புல்லையும்

  • சாகுல் அமிது என்னும் இயற்பெயருடைய இன்குலாப் எழுதிய கவிதை கூறும் கருத்து புல் உள்ள இடமே உயிர்கள் வாழுமிடம்.
  • பறவைகள் மதம், இனம் என்ற எல்லை கடந்து பறக்கும் . கற்களும், மணலும் இவ்வுலகம் இயங்க துணை புரியும், சாதி மதம் என்பவை சமத்துவ புனலில் கரைந்து ஒன்றாக வேண்டும். எவ்வுயிரையும் தம் உயிர்போல் காத்து உதவுதல் வேண்டும் என்பதை பாடல் வழி விளக்குதல்

 இசைத்தமிழர் இருவர்

சிம்பொனி தமிழன்

  •  அன்னக்கிளி படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று இசைஞானி இளையராஜா சிம்பொனி தமிழர் என்றெல்லாம் புகழப்பட்டு இன்று தனது இசையின் மூலம் பலரின் மனதைக் கட்டிப் போட்டவர் இளையராஜா திருவாசகப் பாடலுக்கு அரட்டோரியா என்னம் வடிவில் இசையமைத்தவர். ஆசியாவில் முதன் முதலில் சிம்பொனி என்னும் மேற்கத்திய செவ்வியல் வடிவ இசைக் கோவையை உருவாக்கியவர்.


ஆஸ்கர் தமிழன்

  • சிறுவயதில் ஏழ்மையின் பிடியில் கஷ்டப்பட்டாலும் தனது திறமையால். உலகை தன்னைத் திரும்பிப் பார்க்கச்செய்தவர்தான் ஆஸ்கர் நாயகன் ஏஆர் இரகுமான்.

  • ரோஜா திரைப்படத்தின் மூலம் தனது இசைப்பயணத்தைத் தொடங்கினார். வந்தே மாதரம், ஜன கண மன என்னும் இசைத் தொகுதிகள் மூலம் நவீன வடிவில் நாட்டுப்பற்று உணர்வை வளர்த்தவர்.


 கற்றல் செயல்பாடுகள் 


  •  பாடலை வாசிக்கச் செய்தல் 

  • செய்யுள் பகுதியில் இடம்பெறும் புணர்ச்சி விதி உறுப்பிலக்கணம் எழுதுதல்.
  •  பாடப் பகுதியில் வாசிக்க செய்தல் 

திரையிசை பாடல்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை குறித்து வகுப்பறையில் கலந்துரையாடல் 


இசைத்தமிழர் இருவரின் பாடல்களில் பிரபலமான பாடல்களைப் பட்டியலிடல்.


 கற்றல் விளைவு


  •  பிற உயிர்களைத் தன் உயிர் போல நேசிக்க கற்றுக் கொள்வார்.
திரையிசை. கலைஞர்கள் பற்றி அறிந்து கொள்வர். 

  • பாடல் பாடும் திறனை அறிந்து பாட ஆர்வம் கொள்வர்.

வலுவூட்டல்


 செய்யுளின் கருத்துகளை தொகுத்து கூறி விளக்குதல்.


 பாடல் பகுதியில் இடம்பெற்றுள்ள உறுப்பிலக்கணம் புணர்ச்சி விதி ஆகியவற்றைக் கூறி விளக்குதல் 


திரையிசைப் பாடல்களை உதாரணமாக கூறுதல்


 திரை இசை பாடல்கள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதை குறித்து மீண்டும் ஒரு முறை விளக்கி வலுவூட்டல்.


 மதிப்பீடு

எ சி வி


1.ஆஸ்கர் தமிழன் யார்?


2.சிம்பொனி தமிழன் யார்?


3. சாகுல் ஹமீது எப்பெயரில் கவிதை எழுதினார்? 


ந சி வி


1. கூவும் குயிலும், கரையும் காகமும் இத்தொடரில் இடம்பெற்ற மரபு எது?


2. இளையராஜா எழுதிய நூல்கள் எவை?


3. ஏ.ஆர்.ரகுமான் பெற்ற விருதுகள் யாவை?


உ சி வி


1. ஏ ஆர் ரகுமான் ஆஸ்கர் தமிழன் நிறுவுக.


2. இளையராஜா உருவாக்கிய இசை தொகுப்புகள் பற்றி கூறு


 தொடர் பணி 


  •  இளையராஜா ஏ ஆர் ரகுமான் பற்றி படத்தொகுப்பு தயாரிக்க.



தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 12 ஜூன் 3வது வாரம்

 தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 12 ஜூன் 3வது வாரம்

நாள் : 16-06:23 முதல் 20.06.23

பாடம் : தமிழ்

வகுப்பு : மேல்நிலை இரண்டாம் ஆண்டு 

தலைப்பு : இயல் 1 (உயிரினும் ஓம்பப்படும்)

செய்யுள்      : இளந்தமிழே

விரிவானம்: தம்பி நெல்லையப்பருக்கு


கற்றல் நோக்கங்கள்:

  • வெவ்வேறு காலக் கட்டங்களில் மொழியில் சிறப்பு கூறப்பட்டுள்ள செய்யுள் பாடல் கருத்துகளை தெரிந்து கொண்டு பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்துதல்.

  •  உரைநடை பாடல் கடிதம் போன்ற வடிவங்களில் மொழி கையாளப்படும் தன்மையைப் படித்து புரிந்து கொண்டு தமக்கான கருத்து வெளிப்பாட்டு தன்மையை உருவாக்குதல்.

கற்றல் விளைவுகள்:

  • தமிழின் சிறப்பை, அறிந்து மதிக்க கற்றுக் கொள்வர் 

  • பாரி முதலான வள்ளல்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டினை அறிந்து அதை தானும் பின்பற்ற முற்படுவர்.

  •  கடிதங்கள் எழுதும் வழக்கத்தை வளர்த்துக் கொள்வர் 

  •  ஆளுமைகளின் கடிதங்களை பார்த்து கடிதம் எழுதும் முறையை அறிந்து கொள்வர்.

துணைக் கருவிகள்:

  • படங்கள் மடிக்கணினி விளக்க அட்டைகள். மாதிரி கடிதம்


ஆர்வமூட்டல்:

  • கடையேழு வள்ளல்களின் பெயர்களைக் கூறு.

  •  தமிழுக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர்கள் சிலவற்றை கூறு 

 இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமறச் செய்தல்.


கற்பித்தல் செயல்பாடு

இளத்தமிழே:

  •  உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்த கவிதையாய் வடிக்க செந்தமிழே ஏற்ற மொழி யாகும்.

  • முச்சங்கத்தில் வீதறிருந்து வள்ளல்களாக வளர்க்கப்பட்ட மொழி

  • பழமை நலம் புதுக்குதற்கு தமிழாகிய குயிலே கூவு. 

  • இலக்கணக்குறிப்பு, உறுப்பிலக்கணம் புணர்ச்சி விதிகள் பகுதிகளை விளக்கமாகக் கற்பித்தல்

 தம்பி நெல்லையப்பருக்கு

  • * கடித இலக்கியம் குறித்து விளக்குதல்

  • * கடித இலக்கியம் எழுதுவதில் திரு.வி.க. மு.வ. அண்ணா போன்றவர்கள் மிகச்சிறந்தவர்கள்,

  •  பாரதியின் கடிதத்தில் உள்ள கருத்துகளை பாடம் வழி விளக்குதல் 


கற்றல் செயல்பாடுகள்

  • தமிழை வளர்த்த வள்ளல்களின் ஈகை பண்பை வகுப்பறையில் கலந்துரையாடுதல் 

  • முச்சங்கங்கள் குறித்து உரையாடுதல்

  •  கடிதத்திற்கு மாற்றாக இன்று நம்மிடையே இருக்கும் செய்தி பரிமாறும் சாதனஙகளைக் குறித்து கலந்துரையாடுதல்.


வலுவூட்டல்:

  • பாடலின் பொருளை மீண்டும் கூறுதல்

  • எளிய வினாக்கள் கேட்டல்

  • கடினச் சொற்களுக்குப் பொருள் கூறுதன் மூலம் வாலுவூட்டல்

  •  பாரதியின் கடிதத்தில் உள்ள முக்கியமான கருத்துக்களை மீண்டும் கூறி விளக்குதல்

 மதிப்பீடு

எ சி வி

1. இளந்தமிழே கவிதையை எழுதியவர் யார்?

2. சிற்பி பாலசுப்பிரமணியனின் சாகித்ய அகடமி விருது பெற்ற நூல் எது?

3. பாரதியார் யாருக்கு கடிதம் எழுதினார்?

ந. சி வி

1. சிற்பி பாலசுப்ரமணியனின் படைப்புகள் யாவை?

2. பாரதியார் பற்றி குறிப்பு வரைக 

3. பரலி சு. நெல்லையப்பர் குறிப்பு வரைக

உ சி வி

1. மொழி வாழ்த்து பாடலின் நோக்கம் என்ன?

2. பாரதியின் கடிதத்தில் உள்ள செய்திகளை தொகுத்து எழுது

 தொடர் பணி

 1.தமிழ் மொழியை வாழ்த்தும் வகையில் இருக்கும் சில பாடல்களை தொகுக்க.

2. மகாகவியான பாரதிக்கு கற்பனையில் கடிதம் ஒன்றை எழுது.


வெள்ளி, 6 ஜூன், 2025

தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 12 ம் வகுப்பு ஜூன் இரண்டாம் வாரம்

 தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 12 ம் வகுப்பு ஜூன் இரண்டாம் வாரம்

நாள் : 9.06.25 முதல் 13.06.25 வரை

பாடம்: தமிழ்

வகுப்பு: மேல்நிலை இரண்டாம் ஆண்டு

தலைப்பு: இயல் 1 (உயிரினும் ஓம்பப்படும்)

உரைநடை: நமது மொழியின் அடையாளங்களை மீட்டவர் 

கற்றல் நோக்கங்கள்:

  • தமிழாய்வின் முன்னோடியாகக் இருந்த ஆளுமைகளின் பன்முகத்தன்மையை அறிந்து ஆய்வுச் சிந்தனையை வளர்த்து கொள்ளுதல்

  •  வெவ்வேறு காலகட்டங்களில் மொழியின் சிறப்பு கூறப்பட்டுள்ள செய்யுள் பாடல் கருத்துக்களை தெரிந்து கொண்டு பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்துதல்.

துணைக் கருவிகள் 

  •  படங்கள், விளக்க அட்டைகள், மடிக்கணினி, வலையொளி பதிவுகள்.

 ஆர்வமூட்டல் :

  • தமிழ்ச் சான்றோர் சிலரைக் கூறு

  •  பண்டைய காலத்தை நாம் எவ்வாறு அறிந்து கொள்ளலாம்?

 இது போன்ற வினாக்கள் மூலம் மாணவர்களை ஆர்வமுறச் செய்தல்.

 கற்பித்தல் செயல்பாடுகள்:

  • மயிலை சீனி வேங்கசாமி. மயிலாப்பூரில் 16-12-1900 ஆம் ஆண்டு பிறந்தார்.

  • 25 ஆண்டுகள் ஆசிரியராகவும் இதழாசிரியராகவும் செயல்பட்டார். ஆயிவுப்பணி சமயம், மானுடவியல், தமிழக வரலாறு, தொல்பொருள் ஆய்வு கலை வரலாறு, மொழி ஆய்வு, கல்வெட்டு ஆய்வு.

  • விருதுகள் தமிழ்ப் பேரவைச் செம்மல் ஆராய்ச்சி  பேரறிஞர்.

  • அறிந்த மொழி - வட்டெழுத்து, கோலெழுத்து தமிழ் பிராம்மி எழுத்துகளை ஆயிந்தவர். கிறித்தவரும் தமிழும், சமணமும் தமிகும்) களப்பிரர் ஆட்சியில் தமிழகம்,

  • 19ம் நூற்றாண்டுத் தமிழ், மறைந்து போன தமிழ் நூல்கள் போன்ற பல நூல்களைப் படைத்து ஆய்வுலகில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை தந்த மயிலை சீனி வெங்கடசாமி அவர்களின் ஆய்வுகளை குறித்து பாடத்தின் மூலம் விரிவாக விளக்குதல்

 கற்றல் செயல்பாடுகள்

  •  பாடப்பகுதியை ஏற்ற இறக்கத்துடன் வாசிப்போம்

  •  ஆய்வுகள் குறித்த செய்திகளை வகுப்பறையில் கலந்துரையாடல் செய்தல்  

கற்றல் விளைவுகள்:

  •  தமிழுக்கு பங்காற்றிய ஆளுமைகளின் வரலாற்றினை அறிந்து அவர்களை பின்பற்றுதல்

  •  தமிழில் கலைஞர் மற்றும் வரலாற்றின் நிகழ்வுகளை அறிந்து போற்றுதல் 

 வலுவூட்டல்:

  •  கடினச் சொற்களுக்குப் பொருள் கூறுதல்

  •  மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் ஆய்வுகள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் ஆய்வுகள் சிலவற்றை கூறி வலுவூட்டல்

 மதிப்பீடு:

 எளிய சிந்தனை வினா 

 1.மயிலை சீனி வெங்கடசாமி அவர்கள் சொல்லாய்வு கட்டுரைகள் எந்த தலைப்பில் வெளிவந்தது?

2. களப்பிறர் ஆட்சியில் தமிழகம் என்ற நூலை எழுதிய ஆசிரியர்…..

நடுத்தர சிந்தனை வினா

1. மயிலை சீனி வேங்கட சாமி பெற்ற முதல் விருதுகளைப் பற்றி கூறு 

2. மயிலை சீனி வேங்கட சாமி அவர்களின் படைப்புகள் சிலவற்றைக் கூறு 

 உயர் சிந்தனை வினா 

1. தெரிந்த ஆய்வாளர் ஒருவருடைய ஆய்வு பணிகளைத் தொகுக்க.

 

தொடர் பணி 

  •  தமிழ் அறிஞர்களின் பணிகள் குறித்து வகுப்பறையில் படத்தொகுப்பு உருவாக்கி கலந்துரையாடுக.


 

தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 11 ம் வகுப்பு ஜூன் இரண்டாம் வாரம்

 தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 11 ம் வகுப்பு ஜூன் இரண்டாம் வாரம்

நாள் : 9.06.25 முதல் 13.06.25 வரை

பாடம்: தமிழ்


வகுப்பு: மேல்நிலை முதலாம் ஆண்டு


தலைப்பு: இயல் 1 (உயிரினும் ஓம்பப்படும்)


 உரைநடைபேச்சு மொழியும் கவிதை மொழியும் 


கற்றல் நோக்கங்கள்:

  • பேச்சு மொழி கவிதை மொழி ஆகியவற்றின் தனித்தன்மைகளை படைப்புகள் பற்றிய கருத்துகளின் வழி புரிந்து கொள்ளுதல்.


துணைக் கருவிகள் :

  • படங்கள் விளக்க அட்டைகள், கவிஞர் கவிதைகள்.


 ஆர்வமூட்டல் :

  •  கலைகள் சிலவற்றை கூறு 

  •  உனக்கு தெரிந்த சில கவிஞர்கள் பெயர்களை கூறு.


 கற்பித்தல் செயல்பாடுகள்:

பேச்சு மொழியும், கவிதைமொழியும்:

  • கலைகளின் உச்சம் கவிதை என்பர். எழுத்துமொழியைக் காட்டிலும் பேச்சு மொழி உணர்ச்சிக்கு மிக அருகில் இருக்கிறது. எழுத்து மொழியில் பேச்சைக் கேட்க எதிராளி என்கிற ஒருவன் கிடையாது என்பது யதார்த்தம்.

  • வாளினும் வலிமை, நேரடி மொழி பெருங்கவிஞர்களின் வாய் மொழி போன்ற தலைப்புகளை இப்பாடத்தின் வழிவிளக்குதல்.


வலுவூட்டல்:


  •  படப்பகுதியில் இடம்பெற்றுள்ள கவிஞர்களின் வாழ்க்கை வரலாற்றையும் கவிஞர் கவிதைகளையும் கூறி வலுவூட்டல்.

  • புரியாத பகுதிகளை மேலும் விளக்குதல் எளியவினாக்கள் கேட்டு கற்றலை உறுதிப்படுத்தல்.


 கற்றல் செயல்பாடுகள்:

  •  மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கவிஞர்கள் மற்றும் கவிதைகளை குறித்து வகுப்பறையில் கலந்துரையாடல்.


கற்றல் விளைவுகள்:

  •  பேச்சு மொழி கவிதை மொழி இரண்டிற்கும்மான வேறுபாடுகளை அறிந்து கொள்கின்றனர்.

  •  பெருங்கவிஞர்களின் கவிதை நடையை அறிந்து கொள்கின்றனர்

 வலுவூட்டல்:

  •  பாடப்பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெருங்கவிஞர்களின் கவிதைகளையும் அவர்களுடைய வாழ்வியல் நிகழ்வுகளையும் எடுத்துக் கூறி விளக்குதல்.

 

மதிப்பீடு:

 எளிய சிந்தனை வினா 

1. பேச்சு மொழியும் கவிதை மொழியும் என்ற கட்டுரையை எழுதியவர்…….

2. கலைகளின் உச்சம்…..

 நடுத்தர சிந்தனை வினா

1. பேச்சு மொழி எழுத்து மொழியை காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டு சக்தி மிக்கது ஏன்?

2. நேரடி மொழி என்றால் என்ன?


 உயர் சிந்தனை வினா 

1. பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் உள்ள வேறுபாடு பற்றி சில கருத்துக்களை தொகுக்க 


 தொடர் பணி 

  •  சில புதுக்கவிதை, மரபுக் கவிதைகளைத் தொகுக்க.



தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 11 ம் வகுப்பு ஜூன் முதல் வாரம்

தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 11 ம் வகுப்பு ஜூன் முதல் வாரம்

 நாள் : 2.06.25 முதல் 6.06.25 வரை

பாடம்: தமிழ்


வகுப்பு: மேல்நிலை முதலாம் ஆண்டு


தலைப்பு: இயல் 1 (என்னுயிர் என்பேன்)


செய்யுள்: யுகத்தின் பாடல் 


கற்றல் நோக்கங்கள்:

  •  எளிய மக்களின் உணர்வுகளை கலை நயத்துடன் வெளிப்படுத்தும் திறனை பெறுதல்.


துணைக் கருவிகள் :

  •  கரும்பலகை விளக்க அட்டைகள், மடிக்கணினி.

 ஆர்வமூட்டல் :

  •  நம் கருத்தை பிறருக்கு உணர்த்த உதவுவது எது?

  •  தமிழின் சிறப்பைக் கூறு 

 இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுற செய்தல்.


 கற்பித்தல் செயல்பாடுகள்

  •  புதுக்கவிதை - விளக்கம்

  • மரபு சார்ந்த செய்யுள்களின் யாப்புக் கட்டுப்பாடுகளுக்கு உட்படாத கவிதைகளைப் புதுக்கவிதைகள் என்பர். புதுக்கவிதை படிப்போரின் ஆழ்மனத்தில் ஏற்படுத்தும் தாக்கமே முதன்மையானது. இது படிப்போரின் சிந்தனைக்கு ஏற்ப விரிவடையும் பன்முகத்தன்மை கொண்டது. புதுக்கவிதை வடிவம் எளியவர்களும் தம் உணர்ச்சிகளைக் கவிதை வாயிலாக வெளிப்படுத்தும் வாய்ப்பைத் தந்தது எனலாம்.

  •  தாய் மொழியாம் தமிழ் மொழி சங்க காலம் தொடங்கி இன்றைய காலம் வரையும் உயர்தனிச் செம்மொழியாய் செழித்தோங்கி இருக்கிறது என்ற கருத்தை பாடல் வழி விளக்குதல்.


 கற்றல் செயல்பாடுகள்

  •  பாடலைச் சீர் பிரித்து வாசித்தல் 

  •  பாடலில் இடம்பெறும் எதுகை மோனை போன்ற நயங்களை அறிந்து படித்தல் 

 

கற்றல் விளைவுகள்:

  •  மொழியின் சிறப்பை அறிந்து வளர்க்க முனைதல்

  •  மொழி கடந்து வந்த பாதையை அறிந்து மொழியின் தொன்மையை உணர்ந்து செயல்படல் 


 வலுவூட்டல்.

  •  செய்யுள் பகுதியை மீண்டும் ஒருமுறை வாசித்து பொருளை தெளிவாக விளக்குதல் 

 

மதிப்பீடு

 எளிய சிந்தனை வினா 

1. யுகத்தின் பாடல் என்ற கவிதையை எழுதிய ஆசிரியர் 

2. மனித இனத்தின் முதல் அடையாளம் எது


 நடுத்தர சிந்தனை வினா

1. சு.வில்வரத்தினம் பற்றி குறிப்பு எழுதுக.

2. இனம் மொழி குறித்து ரசூல் கம்சதோவ் கூற்று யாது?

 

உயர் சிந்தனை வினா 

1. தமிழ் மொழியின் தொன்மையை பற்றி கட்டுரை வரைக..


 தொடர் பணி 


  •  காலத்தை வென்ற மொழி என்ற தலைப்பில் கவிதை படைக்க.


வகுப்பு 12. ஆகஸ்ட் முதல் வாரத் தமிழ் மாதிரி பாடக் குறிப்பு

 வகுப்பு 12  ஆகஸ்ட் முதல் வாரம்  தமிழ் மாதிரி பாடப் குறிப்பு  DOWNLOAD