புதன், 11 ஜூன், 2025

வகுப்பு 12 ஜூன் 3வது வாரம்

 தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 12 ஜூன் 3வது வாரம்

நாள் : 15-06:26 முதல் 19.06.26

பாடம் : தமிழ்

வகுப்பு : மேல்நிலை இரண்டாம் ஆண்டு 

தலைப்பு : இயல் 1 (உயிரினும் ஓம்பப்படும்)

செய்யுள்      : இளந்தமிழே

விரிவானம்: தம்பி நெல்லையப்பருக்கு


கற்றல் நோக்கங்கள்:

  • வெவ்வேறு காலக் கட்டங்களில் மொழியில் சிறப்பு கூறப்பட்டுள்ள செய்யுள் பாடல் கருத்துகளைத் தெரிந்து கொண்டு பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்துதல்.

  •  உரைநடை பாடல் கடிதம் போன்ற வடிவங்களில் மொழி கையாளப்படும் தன்மையைப் படித்து புரிந்து கொண்டு தமக்கான கருத்து வெளிப்பாட்டு தன்மையை உருவாக்குதல்.

கற்றல் விளைவுகள்:allaloy.blogspot.com

  • தமிழின் சிறப்பை, அறிந்து மதிக்க கற்றுக் கொள்வர் 

  • பாரி முதலான வள்ளல்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டினை அறிந்து அதை தானும் பின்பற்ற முற்படுவர்.

  •  கடிதங்கள் எழுதும் வழக்கத்தை வளர்த்துக் கொள்வர் 

  •  ஆளுமைகளின் கடிதங்களைப் பார்த்து கடிதம் எழுதும் முறையை அறிந்து கொள்வர்.

துணைக் கருவிகள்:

  • படங்கள் மடிக்கணினி விளக்க அட்டைகள். மாதிரி கடிதம்


ஆர்வமூட்டல்:

  • கடையேழு வள்ளல்களின் பெயர்களைக் கூறு.

  •  தமிழுக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர்கள் சிலவற்றைக் கூறு 

 இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்.

allaloy.blogspot.com

கற்பித்தல் செயல்பாடு

இளத்தமிழே:

  •  உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்த கவிதையாய் வடிக்க செந்தமிழே ஏற்ற மொழியாகும்.

  • முச்சங்கத்தில் வீற்றிருந்து வள்ளல்களால் வளர்க்கப்பட்ட மொழி

  • பழமை நலம் புதுக்குதற்குத் தமிழாகிய குயிலே கூவு. 

  • இலக்கணக்குறிப்பு, உறுப்பிலக்கணம் புணர்ச்சி விதிகள் பகுதிகளை விளக்கமாகக் கற்பித்தல்

 தம்பி நெல்லையப்பருக்கு

  • * கடித இலக்கியம் குறித்து விளக்குதல்

  • * கடித இலக்கியம் எழுதுவதில் திரு.வி.க,மு.வ,அண்ணா போன்றவர்கள் மிகச்சிறந்தவர்கள்,

  •  பாரதியின் கடிதத்தில் உள்ள கருத்துகளைப் பாடம் வழி விளக்குதல் 

allaloy.blogspot.com

கற்றல் செயல்பாடுகள்

  • தமிழை வளர்த்த வள்ளல்களின் ஈகை பண்பை வகுப்பறையில் கலந்துரையாடுதல் 

  • முச்சங்கங்கள் குறித்து உரையாடுதல்

  •  கடிதத்திற்கு மாற்றாக இன்று நம்மிடையே இருக்கும் செய்தி பரிமாறும் சாதனங்களைக் குறித்து கலந்துரையாடுதல்.


வலுவூட்டல்:

  • பாடலின் பொருளை மீண்டும் கூறுதல்

  • எளிய வினாக்கள் கேட்டல்

  • கடினச் சொற்களுக்குப் பொருள் கூறுதன் மூலம் வாலுவூட்டல்

  •  பாரதியின் கடிதத்தில் உள்ள முக்கியமான கருத்துக்களை மீண்டும் கூறி விளக்குதல்

 மதிப்பீடு

எ சி விallaloy.blogspot.com

1. இளந்தமிழே கவிதையை எழுதியவர் யார்?

2. சிற்பி பாலசுப்பிரமணியனின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் எது?

3. பாரதியார் யாருக்கு கடிதம் எழுதினார்?

ந. சி வி

1. சிற்பி பாலசுப்ரமணியனின் படைப்புகள் யாவை?

2. பாரதியார் பற்றி குறிப்பு வரைக 

3. பரலி சு. நெல்லையப்பர் குறிப்பு வரைக

உ சி வி

1. மொழி வாழ்த்து பாடலின் நோக்கம் என்ன?

2. பாரதியின் கடிதத்தில் உள்ள செய்திகளை தொகுத்து எழுது

 தொடர் பணி

 1.தமிழ் மொழியை வாழ்த்தும் வகையில் இருக்கும் சில பாடல்களைத் தொகுக்க.

2. மகாகவியான பாரதிக்கு கற்பனையில் கடிதம் ஒன்றை எழுது.


வெள்ளி, 6 ஜூன், 2025

தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 12 ம் வகுப்பு ஜூன் இரண்டாம் வாரம்

 தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 12 ம் வகுப்பு ஜூன் இரண்டாம் வாரம்

நாள் : 8.06.25 முதல் 12.06.25 வரை

பாடம்: தமிழ்

வகுப்பு: மேல்நிலை இரண்டாம் ஆண்டு

தலைப்பு: இயல் 1 (உயிரினும் ஓம்பப்படும்)

உரைநடை: நமது மொழியின் அடையாளங்களை மீட்டவர் 

கற்றல் நோக்கங்கள்:

  • தமிழாய்வின் முன்னோடியாகக் இருந்த ஆளுமைகளின் பன்முகத்தன்மையை அறிந்து ஆய்வுச் சிந்தனையை வளர்த்து கொள்ளுதல்

  •  வெவ்வேறு காலகட்டங்களில் மொழியின் சிறப்பு கூறப்பட்டுள்ள செய்யுள் பாடல் கருத்துக்களை தெரிந்து கொண்டு பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்துதல்.

துணைக் கருவிகள் 

  •  படங்கள், விளக்க அட்டைகள், மடிக்கணினி, வலையொளி பதிவுகள்.

 ஆர்வமூட்டல் :

  • தமிழ்ச் சான்றோர் சிலரைக் கூறு

  •  பண்டைய காலத்தை நாம் எவ்வாறு அறிந்து கொள்ளலாம்?

 இது போன்ற வினாக்கள் மூலம் மாணவர்களை ஆர்வமுறச் செய்தல்.

 கற்பித்தல் செயல்பாடுகள்:

  • மயிலை சீனி வேங்கசாமி. மயிலாப்பூரில் 16-12-1900 ஆம் ஆண்டு பிறந்தார்.

  • 25 ஆண்டுகள் ஆசிரியராகவும் இதழாசிரியராகவும் செயல்பட்டார். ஆயிவுப்பணி சமயம், மானுடவியல், தமிழக வரலாறு, தொல்பொருள் ஆய்வு கலை வரலாறு, மொழி ஆய்வு, கல்வெட்டு ஆய்வு.

  • விருதுகள் தமிழ்ப் பேரவைச் செம்மல் ஆராய்ச்சி  பேரறிஞர்.

  • அறிந்த மொழி - வட்டெழுத்து, கோலெழுத்து தமிழ் பிராம்மி எழுத்துகளை ஆயிந்தவர். கிறித்தவரும் தமிழும், சமணமும் தமிகும்) களப்பிரர் ஆட்சியில் தமிழகம்,

  • 19ம் நூற்றாண்டுத் தமிழ், மறைந்து போன தமிழ் நூல்கள் போன்ற பல நூல்களைப் படைத்து ஆய்வுலகில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை தந்த மயிலை சீனி வெங்கடசாமி அவர்களின் ஆய்வுகளை குறித்து பாடத்தின் மூலம் விரிவாக விளக்குதல்

 கற்றல் செயல்பாடுகள்

  •  பாடப்பகுதியை ஏற்ற இறக்கத்துடன் வாசிப்போம்

  •  ஆய்வுகள் குறித்த செய்திகளை வகுப்பறையில் கலந்துரையாடல் செய்தல்  

கற்றல் விளைவுகள்:

  •  தமிழுக்கு பங்காற்றிய ஆளுமைகளின் வரலாற்றினை அறிந்து அவர்களை பின்பற்றுதல்

  •  தமிழில் கலைஞர் மற்றும் வரலாற்றின் நிகழ்வுகளை அறிந்து போற்றுதல் 

 வலுவூட்டல்:

  •  கடினச் சொற்களுக்குப் பொருள் கூறுதல்

  •  மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் ஆய்வுகள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் ஆய்வுகள் சிலவற்றை கூறி வலுவூட்டல்

குறைதீர் கற்றல்

  • பாடப்பகுதியில் இருந்து சில வினாக்கள் கேட்டு மாணவர்கள் தடுமாறும் பகுதியை மீண்டும் ஒரு முறை கற்பித்தல்

 மதிப்பீடு:

 எளிய சிந்தனை வினா 

 1.மயிலை சீனி வெங்கடசாமி அவர்கள் சொல்லாய்வு கட்டுரைகள் எந்த தலைப்பில் வெளிவந்தது?

2. களப்பிரர் ஆட்சியில் தமிழகம் என்ற நூலை எழுதிய ஆசிரியர்…..

நடுத்தர சிந்தனை வினா

1. மயிலை சீனி வேங்கட சாமி பெற்ற முதல் விருதுகளைப் பற்றி கூறு 

2. மயிலை சீனி வேங்கட சாமி அவர்களின் படைப்புகள் சிலவற்றைக் கூறு 

 உயர் சிந்தனை வினா 

1. தெரிந்த ஆய்வாளர் ஒருவருடைய ஆய்வு பணிகளைத் தொகுக்க.

 

தொடர் பணி 

  •  தமிழ் அறிஞர்களின் பணிகள் குறித்து வகுப்பறையில் படத்தொகுப்பு உருவாக்கி கலந்துரையாடுக.


 

தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 11 ம் வகுப்பு ஜூன் இரண்டாம் வாரம்

 தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 11 ம் வகுப்பு ஜூன் இரண்டாம் வாரம்

நாள் : 8.06.25 முதல் 12.06.25 வரை

பாடம்: தமிழ்


வகுப்பு: மேல்நிலை முதலாம் ஆண்டு


தலைப்பு: இயல் 1 (உயிரினும் ஓம்பப்படும்)


 உரைநடைபேச்சு மொழியும் கவிதை மொழியும் 


கற்றல் நோக்கங்கள்:

  • பேச்சு மொழி கவிதை மொழி ஆகியவற்றின் தனித்தன்மைகளை படைப்புகள் பற்றிய கருத்துகளின் வழி புரிந்து கொள்ளுதல்.


துணைக் கருவிகள் :

  • படங்கள் விளக்க அட்டைகள், கவிஞர் கவிதைகள்.


 ஆர்வமூட்டல் :

  •  கலைகள் சிலவற்றைக் கூறு 

  •  உனக்குத் தெரிந்த சில கவிஞர்கள் பெயர்களை கூறு.


 கற்பித்தல் செயல்பாடுகள்:

பேச்சு மொழியும், கவிதைமொழியும்:

  • கலைகளின் உச்சம் கவிதை என்பர். எழுத்துமொழியைக் காட்டிலும் பேச்சு மொழி உணர்ச்சிக்கு மிக அருகில் இருக்கிறது. எழுத்து மொழியில் பேச்சைக் கேட்க எதிராளி என்கிற ஒருவன் கிடையாது என்பது யதார்த்தம்.

  • வாளினும் வலிமை, நேரடி மொழி பெருங்கவிஞர்களின் வாய் மொழி போன்ற தலைப்புகளை இப்பாடத்தின் வழிவிளக்குதல்.


வலுவூட்டல்:


  •  படப்பகுதியில் இடம்பெற்றுள்ள கவிஞர்களின் வாழ்க்கை வரலாற்றையும் கவிஞர் கவிதைகளையும் கூறி வலுவூட்டல்.

  • புரியாத பகுதிகளை மேலும் விளக்குதல் எளியவினாக்கள் கேட்டு கற்றலை உறுதிப்படுத்தல்.


 கற்றல் செயல்பாடுகள்:

  •  மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கவிஞர்கள் மற்றும் கவிதைகளைக் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடல்.


கற்றல் விளைவுகள்:

  •  பேச்சு மொழி கவிதை மொழி இரண்டிற்கும்மான வேறுபாடுகளை அறிந்து கொள்கின்றனர்.

  •  பெருங்கவிஞர்களின் கவிதை நடையை அறிந்து கொள்கின்றனர்

 வலுவூட்டல்:

  •  பாடப்பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெருங்கவிஞர்களின் கவிதைகளையும் அவர்களுடைய வாழ்வியல் நிகழ்வுகளையும் எடுத்துக் கூறி விளக்குதல்.

 குறைதீர் கற்றல் 


  • பாடப்பகுதியில் இருந்து சில வினாக்கள் கேட்டு மாணவர்கள் தடுமாறும் பகுதியை மீண்டும் ஒரு முறை கற்பித்தல்

மதிப்பீடு:

 எளிய சிந்தனை வினா 

1. பேச்சு மொழியும் கவிதை மொழியும் என்ற கட்டுரையை எழுதியவர்…….

2. கலைகளின் உச்சம்…..

 நடுத்தர சிந்தனை வினா

1. பேச்சு மொழி எழுத்து மொழியை காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டு சக்தி மிக்கது ஏன்?

2. நேரடி மொழி என்றால் என்ன?


 உயர் சிந்தனை வினா 

1. பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் உள்ள வேறுபாடு பற்றி சில கருத்துக்களை தொகுக்க 


 தொடர் பணி 

  •  சில புதுக்கவிதை, மரபுக் கவிதைகளைத் தொகுக்க.



தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 11 ம் வகுப்பு ஜூன் முதல் வாரம்

தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 11 ம் வகுப்பு ஜூன் முதல் வாரம்

 நாள் : 4.06.26 முதல் 5.06.26வரை

பாடம்: தமிழ்


வகுப்பு: மேல்நிலை முதலாம் ஆண்டு


தலைப்பு: இயல் 1 (என்னுயிர் என்பேன்)


செய்யுள்: யுகத்தின் பாடல் 


கற்றல் நோக்கங்கள்:

  •  எளிய மக்களின் உணர்வுகளை கலை நயத்துடன் வெளிப்படுத்தும் திறனை பெறுதல்.


துணைக் கருவிகள் :

  •  கரும்பலகை விளக்க அட்டைகள், மடிக்கணினி.

 ஆர்வமூட்டல் :

  •  நம் கருத்தை பிறருக்கு உணர்த்த உதவுவது எது?

  •  தமிழின் சிறப்பைக் கூறு 

 இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுற செய்தல்.


 கற்பித்தல் செயல்பாடுகள்

  •  புதுக்கவிதை - விளக்கம்

  • மரபு சார்ந்த செய்யுள்களின் யாப்புக் கட்டுப்பாடுகளுக்கு உட்படாத கவிதைகளைப் புதுக்கவிதைகள் என்பர். புதுக்கவிதை படிப்போரின் ஆழ்மனத்தில் ஏற்படுத்தும் தாக்கமே முதன்மையானது. இது படிப்போரின் சிந்தனைக்கு ஏற்ப விரிவடையும் பன்முகத்தன்மை கொண்டது. புதுக்கவிதை வடிவம் எளியவர்களும் தம் உணர்ச்சிகளைக் கவிதை வாயிலாக வெளிப்படுத்தும் வாய்ப்பைத் தந்தது எனலாம்.

  •  தாய் மொழியாம் தமிழ் மொழி சங்க காலம் தொடங்கி இன்றைய காலம் வரையும் உயர்தனிச் செம்மொழியாய் செழித்தோங்கி இருக்கிறது என்ற கருத்தை பாடல் வழி விளக்குதல்.


 கற்றல் செயல்பாடுகள்

  •  பாடலைச் சீர் பிரித்து வாசித்தல் 

  •  பாடலில் இடம்பெறும் எதுகை மோனை போன்ற நயங்களை அறிந்து படித்தல் 

 

கற்றல் விளைவுகள்:

  •  மொழியின் சிறப்பை அறிந்து வளர்க்க முனைதல்

  •  மொழி கடந்து வந்த பாதையை அறிந்து மொழியின் தொன்மையை உணர்ந்து செயல்படல் 


 வலுவூட்டல்.

  •  செய்யுள் பகுதியை மீண்டும் ஒருமுறை வாசித்து பொருளை தெளிவாக விளக்குதல் 

 

மதிப்பீடு

 எளிய சிந்தனை வினா 

1. யுகத்தின் பாடல் என்ற கவிதையை எழுதிய ஆசிரியர்.....

2. மனித இனத்தின் முதல் அடையாளம் எது?


 நடுத்தர சிந்தனை வினா

1. சு.வில்வரத்தினம் பற்றி குறிப்பு எழுதுக.

2. இனம் மொழி குறித்து ரசூல் கம்சதோவ் கூற்று யாது?

 

உயர் சிந்தனை வினா 

1. தமிழ் மொழியின் தொன்மையைப் பற்றி கட்டுரை வரைக..


 தொடர் பணி 


  •  காலத்தை வென்ற மொழி என்ற தலைப்பில் கவிதை படைக்க.


தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 12ம் வகுப்பு ஜூன் முதல் வாரம்

 நாள் : 4.06.26 முதல் 5.06.26 வரை

பாடம்: தமிழ்

வகுப்பு: மேல்நிலை இரண்டாம் ஆண்டு

தலைப்பு: இயல் 1 (உயிரினும் ஓம்பப்படும்)

செய்யுள்: தன்னேர் இலாத தமிழ்

கற்றல் நோக்கங்கள்:

  • மொழியின் உயர்வையும் பெருமையையும் அறிதல்
  •  வெவ்வேறு காலகட்டங்களில் மொழியில் சிறப்பு கூறப்பட்டுள்ள செய்யுள் பாடல் கருத்துகளை தெரிந்து கொண்டு பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்துதல்.

துணைக் கருவிகள் :

  • மடிக்கணினி, தண்டியலங்கார நூல்,

ஆர்வமூட்டல்:

 உனக்குத் தெரிந்த இலக்கண நூல்கள் சிலவற்றை கூறு.

தமிழ் மொழியின் சிறப்பு சிலவற்றை கூறு.

கற்பித்தல் செயல்பாடுகள்:

  •  தண்டியலங்காரம் ஒரு அணி இலக்கண நூல்.
  •  காவிய தர்ஷம் என்ற வடமொழி நூலின் மொழிபெயர்ப்பு 
  •  காலம் கிபி 12 ஆம் நூற்றாண்டு 
  •  வானம் அளந்தது அனைத்தையும் அளக்கும் வலிமை மிக்கது தமிழ்.
  •  தமிழ் நிலத்திலும் பெரிது வானிலும் உயர்ந்தது கடலினும் ஆழமானது என்றெல்லாம் தமிழின் பரப்பையும் விரிவையும் ஆழத்தையும் புலவர் போற்றுவர்.
  •  நிகரற்ற ஆற்றல் கொண்ட கதிரவனுக்கு ஒப்பவும் அதற்கு மேலாகவும் தமிழைப் போற்றுகின்ற பாடலை விளக்குதல்.

 கற்றல் செயல்பாடுகள்:

  •  பாடலின் பொருளை உணர்ந்து சீர் பிரித்து வாசித்தல் 
  •  சொற்களுக்கு உறுப்பிலக்கணம் புணர்ச்சி விதி அறிந்து பிரித்தல்
  •  பாடலில் பயின்று வரும் அணியை அறிந்து கொள்ளல்
வலுவூட்டல்:

  •  பாடலில் இடம் பெற்றுள்ள பொருள் விளக்கத்தை நயம்பட மீண்டும் ஒருமுறை தொகுத்து கூறுதல்
  •  பாடலில் இடம்பெற்றிருக்கும் அணி உறுப்பிலக்கணம் புணர்ச்சி ஆகியவற்றை கூறுதல்

 கற்றல் விளைவுகள்:

  •  தண்டியலங்காரம் நூல் குறித்து அறிதல் 
  •  தமிழ் மொழியின் சிறப்பையும் உயர்வையும் அறிந்து கொள்ளல்.

 மதிப்பீடு :

 எளிய சிந்தனை வினா :

1. தண்டியலங்காரம் —----------நூல் 

2. தண்டியலங்கார நூலின் ஆசிரியர் —----

நடுத்தர சிந்தனை வினாக்கள் :

1. பொருள் வேற்றுமை அணி என்றால் என்ன?

2. வெங்கதிர் பிரித்து புணர்ச்சி விதி தருக 

 உயர் சிந்தனை வினா :

1. தமிழ் தனக்கு நிகரில்லாத மொழி என்பதை குறித்து உன் கருத்துகளை கூறு.

தொடர்பணி

  • தமிழ் மொழியின் சிறப்பை கூறும் சில பாடல்களைத் தொகுக்க.